‘மே 18’ அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ‘தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வுகள்

.

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.

சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் மே மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர்.


சிட்னி சைவ மன்ற பரிசளிப்பு விழா

.
சிட்னி சைவ மன்றம நடாத்திய அறிவுப்போட்டி 2012    இல் பங்குபற்றி பரிசில்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சென்ற ஞாயிற்றுகிழமை பரிசில்கள் வழங்கப்பட்டது . பரிசில்கள் பெ று ம் பிள்ளைகளை கீழே உள்ள  படங்களில்  காணலாம் .


அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தடம் பதிக்கும் 11ம் ஆண்டு. 11k; Mz;L.


.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு பதினொராவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆயல 15ம் திகதி இந்த பதிய ஆண்டிற்குள் புத்துணர்வோடு தடம்பதித்துள்ளதில் நேயர்களும் அறிவிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் நிர்வாகிகள் என்போரும் மகிழ்வோடு நினைவு கூர்ந்தார்கள். உயர்ந்த இலட்சியத்தோடும் ஒழுங்கு நெறியோடும். மக்கள் மனங்களில் தடம் பதித்து நிறைவான தரமான நிகழ்வுகளை உள்ளடக்கி இலக்கியம் ஆன்மீகம் அறிவியல் ஜனரஞ்சகம் என பல்முக பார்வைகளோடு நடைபயிலும் இந்த வானொலியில் 75 இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அறிவிப்பாளர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் தொழில்நுட்பவியலாளர்களாகவும் பணிபுரிகின்றார்கள் என்பது வியக்கவைக்கும் உண்மையாக உள்ளது. நேயர்களின் ஒத்துளைப்பும் ஊக்கமும் தொண்டர்களின் சளைக்காத உளைப்பும் இந்த சாதனையை படைக்கின்றது என்றால் அது மிகையாகாது.

காயங்களிலிருந்து ஒளிரும் புன்னகை -


ஸ்ரீலங்கா இனவாத அரசு தமிழ்த் தேசத்தின் இருப்பைச் சிதைத்து, தமிழ்ப் போராளிகளை நிராயுதபாணியாக்கி, தனது ஆயுத பலம் கொண்டு அடக்கிவிடக் கடுமையாகப் பிரயத்தனப்பட்ட சூழலில் தமிழ், சிங்களப் பேரினவாதத்தின் கால்களுக்குக் கீழே துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட இனமான முஸ்லிம்களின் வலிகளும் அலறல்களும் 1980களின் பிற்பகுதியில் நவீனக் கவிதையாகப் பரிணமித்தது. வதையுண்ட மனித வாழ்வின் அவலங்களைப் பாடும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் இறப்புக்குமிடையிலான மையத்திலிருந்து எழுகின்றன. துயருற்று அலையும் மனித ஆன்மாக்களின் குரலாக ஒலிக்கும் இவை கொடுமைகள் நிறைந்த அவலப்பரப்பின் அனுபவங்களையும் அவற்றை எதிர்கொண்ட முறைகளையும் எடுத்துரைக்கின்றன. மீள முடியாத புதைகுழிக்குள் சிக்குண்டு பேரிடருக்குள் அகப்பட்டுத் துக்கித்து வாழும் மக்களின் அனுபவச் சூட்டில் மிளிரும் இக்கவிதைகள் ஈழத்தின் பொய்மையான மாயத்திரைகளைக் கிழிக்கின்றன. காலங்காலமாக மனிதத் தியாகங்களினூடாகக் கட்டி எழுப்பப்பட்ட புனித பிம்பங்களைத் தகர்க்கின்றன. சிதைவின் அழிபாட்டிலிருந்து எழும் இக்குரல் காலத்தின் பக்கங்களில் மனித வாழ்வின் அபத்தங்களை எழுதிச் செல்கிறது.

சிட்னி தமிழ் அறிவகத்தின் சேவையில் திரு லோகேந்திரன் - செ.பாஸ்கரன்


.

சிட்னி தமிழ் அறிவகம் நீண்டகாலமாக சிட்னியில் இயங்கிவரும் ஒரு தமிழ் நூலகம் மாத்திரமல்ல ஒரு ஆவண காப்பகமாகவும் இயங்கிவருகிறது. சுழற்ச்சி முறையில் தலைவர் செயலாளர் செயற்குழு அங்கத்தவர்கள் என்று ஆட்கள் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களை அவ்வப்போது நடைபெறும் அறிவக ஆண்டுவிழாக்களில் காணக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் மாறாமல் இருப்பவர்கள் தொண்டர்களாக இந்த அறிவகத்தை திறந்து வைத்திருந்து புத்தகங்களை பரிவர்த்தனை செய்யும் சில நல்ல மனிதர்கள்தான். இவர்கள் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ கடமைபுரிவார்கள். பெரும்பாலும் வயதில் மூத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் சேவை பலருக்கு தெரியவராமலே இருந்துவிடுகின்றது. இவர்களில் சிலரோடு தமிழ்முரசிற்காக பேசவேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருந்தபோதும் நேரம் பொருந்திவருவது சிரமமாகவே இருந்தது. அண்மையில் ஒருவாறு நேரம் ஒதுக்கி அங்கு சென்றபோது அன்றய நாளின் தொண்டராக இருந்தவர். திரு சிவக்கொழுந்து லோகேந்திரன் அவர்கள்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

.                                                                    
                                                                                               யாழ் எஸ். பாஸ்கர்

அவுஸ்திரேலியாவில் 12 ஆவது எழுத்தாளர் விழா கடந்த  13.05.2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேணில். பிறஸ்ரன் நகர மண்டபத்தில், திருவள்ளுவர் அரங்கில், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படவிருந்த விழா சீரற்ற காலநிலை காரணமாக 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடைவேளையின்றித் தொடர்ந்து நடைபெற்றது. இடையே பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், விழா முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டன.

ஓவியர் ஞானம், கலைவளன் சிசு நாகேந்திரம், கவிஞர் இளமுருகனார் பாரதி, எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழறிஞர் திருநந்தகுமார் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைக்க, விழா இனிதே ஆரம்பமானது. செல்வி சாகித்தியா வேந்தன், செல்வி அபிதாரினி சந்திரன், செல்வி சமுத்திராசிறி பத்மசிறி, செல்வன் ஆரூரன் மதியழகன் ஆகிய மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை மிகவும் இனிமையாகப் பாடினார்கள். தாயகத்தில் உயிர் நீத்த மக்களுக்காக ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செல்வி மோசிகா பிரேமதாச செல்வி சிறிசேகா பிரேமதாச சகோதரிகளின் இசைப்பாடல் இடம்பெற்றது. மீன்பாடும் தேன்நாட்டைப் பற்றிய அவர்களின் பாடல் இன்பத்தேனாகச் செவிகளிலே பாய்ந்தது.

இலங்கைச் செய்திகள்

.
தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்

ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு

சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்

ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி

சரத் பொன்சேகா பிணையில் விடுதலை


தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்

14/5/2012

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.



ஜெயமோகனின் தேசப்பற்று! அவமானப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

.
இவர்களுக்கு உண்மையாகவே வாசகர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா, இல்லை இவர்களே வாசகர் பெயர்களில் தமக்குத் தாமே கடிதம் எழுதுக் கொள்கிறார்களா தெரியவில்லை! காரணம் இந்த கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தற்புகழ்ச்சி  ரொம்ப ஜாஸ்தி தான்!

வழமை போலவே, சில நாட்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது பக்கத்திலே வாசகர் கடிதங்கள் சிலவற்றை பிரசுரித்து அதற்க்கு பதிலளித்திருந்தார். அதாவது, குறித்த வாசகர்கள் இலங்கைக்கு சென்ற இந்திய "அமைதிப்படையில்" பணியாற்றியவர்கள் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தம் சக வீரர்கள் மிக இதய சுத்தியுடன் நடந்து கொண்டதாகவும், ஈழத்திலே தமிழர் வாழ் பிரதேசங்களிலே பாலாறும் தேனாறும் ஓட பெரும் பிராயத்தனம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்க்கு மேலாக மனிதாபிமான நடவடிக்கை என்று வேறு அதை அவர்கள் விழித்திருந்தார்கள்!
மாறாக இந்திய அமைதிப்படை ஈழத்திலே கொலைகளும் கற்ப்பழிப்புக்களும் செய்ததாக கூறப்படுவது வெறும் அவதூறு, அது அரசியல் பிரச்சாரம் மட்டுமே என்று கூற, அதை ஆமோதிப்பது கணக்காய் ஜெயமோகன் அவர்களும் தனது கருத்துக்களை கூறி, தன் காது, கண், மூக்கு வழியாக வழியும் தேசப்பற்றை நிரூபிக்க முயன்றிருந்தார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த அநியாயங்களை வெறும் அவதூறுகள் என கூறி நாலு பேர் நியாயப்படுத்த, அதற்க்கு தாளம் தப்பாமல் ஜெயமோகனும் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

இந்திய அமைதிப்படையின் கொடூரமான அக்கிரமங்ககள் அரங்கேறிய  மண்ணிலே, அந்த சம்பவங்களை அனுபவித்து வாழ்ந்த  மக்கள் மத்தியிலே வாழ்ந்த எமக்கு இது எவ்வளவு பெரிய அராஜகமாக, இருட்டடிப்பான செயலாக  தோன்றும்!

தொடரும் கனவுலகில் வலி சுமக்கும் நூலக நினைவுகள்


.
                                                                                                        முருகபூபதி

(முன்குறிப்பு:- யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 31 வருடங்கள். குறிப்பிட்ட அதிர்ச்சி நினைவில் எழுதப்படும் கட்டுரை)

File:Jaffna library.jpgஎனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன்.
நீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். அங்கே குமுதம், கல்கண்டு, கல்கி, ஆனந்தவிகடன் உட்பட இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் அங்குதான் படித்தேன்.

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 34 வெல்லும் சொல்

.
அப்பா: ஞானா.......வழக்கமாய் நீ அல்லாட்டில் சுந்தரிதான் என்னைக் கேள்வி கேக்கிறது. இன்டைக்கு நான் உன்னை ஒரு கேள்வி கேக்கப் போறன். நீ கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகவேணும்.

ஞானா: என்ன கேள்வி அப்பா......கேளுங்கோ பாப்பம்.

அப்பா: அதாவது வந்து ஞானா, எனக்குத் திருக்குறளிலை உள்ள விருப்பத்தினாலை, என்ரை மகளும் படிக்கட்டும் எண்டு ஒரு திருக்குறள் புத்தகத்தை வாங்கியந்து தந்தன். நீ இப்ப திருக்குறளை நல்ல நாட்டமாய்ப் படிக்கிறாய். இதாலை உனக்கு என்ன பிரையோசனம் எண்டு நினைக்கிறாய்?

ஞானா: அப்பா திருக்குறளைப் படிக்கத் தொடங்கின போது இதாலை என்ன பிரயோசனம் எண்டுதான் நினைச்சனான். ஆனால் படிக்கப் படிக்கத்தான் அப்பா தமிழ் மொழியின்ரை அடி அத்திவாரம் மௌ;ள மௌ;ள எனக்குப் புரியுது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

 _

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற பலர் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட புலம்பெயர் இலங்கையருக்கு மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள இது வசதியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்

பாரதிதாசனின் குடும்பவிளக்கு -புதிய மாதவி

.

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான்.
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே
(சஞ்.ப.சா. தொ.1)
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன்.
ஆனால் அது என்னவொ தெரியவில்லை,
. பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை
வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு இதோ இதை எழுதும் இந்த நிமிடம் வரை நேற்றைய என் மறுவாசிப்பு வரை அப்படியே மாறாமல் இருப்பது மட்டுமல்ல, சில நெருடல்களையும் ஏற்படுத்தவே செய்கிறது.
பாரதிதாசனின் இலட்சியப் பெண், குடும்பவிளக்கு எப்படி சித்தரிக்கப்படுகிறாள்
என்பதைக் காண்போம்.
 அதிகாலையில் எழுந்திருக்கிறாள்.
 கோலமிடுகிறாள்
யாழெடுத்து இசை மீட்டுகிறாள், வாழிய வையம் வாழிய என.
 தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைகளைத் துயில் எழுப்புகிறாள்.
அதன் பின்,
பால்கறந்தாள்,
பாத்திரம் தேய்த்தாள்
அடுப்பறையில் அப்பம் சுட்டாள்
கொத்தமல்லி காபி போட்டாள்


விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்

.


விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்
(Whittlesea Tamil Association  )

மெல்போர்ணில் வடபகுதியில் இயங்கும் வானமுதம்" தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடாத்திவரும் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.00மணக்கு Epping Memorial Hall இல் அமைந்துள்ள Funtion room இல் நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவராக இருந்த திரு.எட்வேட் மரியதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அவர் தனதுரையில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள் செயற்பாடுகள் பற்றியும் ‘வானமுதம்’ ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி பற்றியும்ரூபவ் ஒலிபரப்புச் சேவையை ஏற்படுத்தித் தந்த Plenty Valley FM88.6 நிர்வாகத்திற்கும்ரூபவ் அவுஸ்திரேலிய மாநிலங்கள்ரூபவ் மற்றும் நியூசிலாந்து வாழ் தமிழ் இல்லங்களுக்கு சேவையைத் தனதூடாகக எடுத்துச் செல்லும் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு வானொலியான "இன்பத் தமிழ்" வானொலிக்கும் அதன் ஸ்தாபகர் திரு.பாலசிங்கம் பிரபாகரனுக்கும்ரூபவ் சகல வானொலி நேயர்களுக்கும் நன்றி கூறினார்.

மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்


.

கடத்தலும் - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்

கடத்தலும்  - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடகதர்மம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று அன்றைக்கேநினைத்த ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம்.ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்த்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக  அன்றைக்கே நானிருந்தேன்
எனது முந்தைய தொடரில் என்னையும் இலங்கை அரசேகடத்தியது எனத் தெரிவித்திருந்தேன்இலங்கை அரசாங்கத்தின் குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிவரும் பல்வேறு புலனாய்வுக் குழுக்களில் ஒன்றே என்னைத் துணை ஆயுதக்குழு ஒன்றின்உதவியுடன் ஓகஸ்ட் 2008 இல் என்னைக் கடத்திச் சென்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பதவிக்கு வந்தபின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம்  ஆரம்பித்தது.  யுத்தம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்கொழும்பில் கடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளனாக நான் இருந்தேன்.

உலகச் செய்திகள்

.
சீனாவில் புயலுடன் கூடிய மழை ; 40 பேர் பலி
நேபாள விமானம் இமாலயத் தொடரில் விபத்து: 15 பேர் பலி
பிரான்ஸ் ஜனாதிபதியாக ஹொலன்டே பதவியேற்பு
சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய படை தரைவழி தாக்குதல்
சீனாவில் புயலுடன் கூடிய மழை ; 40 பேர் பலி

வடமேற்கு சீனாவில் புயலுடன் கூடிய மழை காரணமாக 40 பேர் பலியாகியுள்ளனர்.

கொன்ஸு மாகாணத்தை தாக்கிய மேற்படி புயலையடுத்து 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்தப் புயலால் 350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30,000 பேர் வீடு வாசல்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவலை. -குட்டிக்கதை


.
செல்வந்தர்  ஒருவருக்கு எப்போதுமே கவலை. ஒரு நாள் அவர், துறவி ஒருவரைச் சந்தித்தார்.
""சுவாமி! பணம் நிறைய வைத்துள்ளேன்.ஆனாலும் மனதில் நிம்மதியில்லை. கவலையைப்  போக்கவும் நிம்மதி பிறக்கவும்  வழி சொல்லுங்கள்,'' என்றார்.
""உன்னிடம் பணம் நிறைய இருக்கிறதல்லவா! கடமையுணர்வுடன், எதிர்பாராமல் மனப்பூர்வமாக தானம் செய்,'' என்றார் துறவி.
செல்வந்தரும்  தானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் துறவியைச் சந்தித்து, ""சுவாமி! இன்று ஆயிரம் ரூபாய் தானம் செய்தேன், இன்று பள்ளிக்கூடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன், இன்று ஒரு ஏழை ஒருவருக்கு  பசுமாடு வாங்கிக் கொடுத்தேன், இன்று ஆலயத்திற்கு  நூறு லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன், இன்று பத்துப்  பேருக்கு அன்னதானம் வழங்கினேன், இன்று ஏழைகளுக்கு    உடுப்பு வழங்கினேன் ஆனாலும், பலன் ஏதும் தெரியவில்லையே,'' என்று சொல்வார்.
துறவி சிரிப்பாரே தவிர பதில் சொல்லமாட்டார்.
ஒருமுறை லட்சம் ரூபாயை அநாதை இல்லத்திற்கு தானம் செய்துவிட்டு துறவியிடம் வந்தார்.
""சுவாமி! ஒருவேளை குறைந்த தானம் செய்ததால், என் மனதில் நிம்மதி வரவில்லை என நினைத்து, இன்று அதிக பணத்தை தானம்    செய்தேன். ஆனால், மனம் என்னவோ சஞ்சலத்தில்தான் இருக்கிறது,'' என்றார்.
துறவி அவரிடம், ""வெயிலில் போய் சற்று நில்லும்,'' என்றார்.செல்வந்தரும் நின்றார். கால் சுட்டது. ""சுவாமி, கால் சுடுகிறதே,'' என்றார்.
""உமது நிழல் தரையில் விழுகிறதா?'' என்றார் துறவி.