நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், இரத்த உறவுகள் அவரவர் பாரம்பரியத்திலிருந்து பிறப்பார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம்
சிட்னியில் நடந்த இலக்கிய சந்திப்பு நிகழ்வில்,
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் சந்தித்த வசுந்தரா பகீரதனின் வாசிப்பு அனுபவம்
குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டபோது, மேற்குறிப்பிட்ட வரிகளே எனது மனதில் தோன்றியது.
தான் ஒரு இலக்கிய ஆளுமையின்
உறவினர் என்பதே தெரியாமல் வளர்ந்த ஒரு தேர்ந்த வாசகிதான் இந்த வசுந்தரா ! அத்தகைய இவர் பற்றிய அறிமுகத்தைத்தான் இம்முறை எனது
தொடரான வாசகர் முற்றத்தில் வழங்கவிருக்கின்றேன்.
வீரகேசரியில் நான் பணியாற்றியபோது அங்கே
வாரவெளியீட்டுப்பிரிவில் துணை ஆசிரியராகவிருந்த வசுந்தரா பகீரதன், என்னோடு உடன் பிறந்த சகோதரிபோன்று பழகியவர்.
அன்று தொடங்கிய நட்பு, சகோதர வாஞ்சையாக அவர் அவுஸ்திரேலியா சிட்னியில்
குடும்பத்துடன் வசிக்கத்தொடங்கிய காலத்திலிருந்தும் தொடருகிறது.
யாழ்ப்பாணம், நல்லூர் பிரிவிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். பெற்றோர்: சுப்பிரமணியம் – ஜெயமணி தம்பதியர்.
தனது ஆரம்பக் கல்வியை
கொக்குவில் நாமகள் வித்தியாலயத்திலும், உயர்வகுப்பை அவ்வூருக்கு மகுடமாக விளங்கும் கொக்குவில் இந்துக்
கல்லூரியிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம்
பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து தொழிற்கல்வியை பெற்றார்.
வசுந்தராவிடம், வாசிப்பு பழக்கம் எவ்வாறு தோன்றியது..? வளர்ந்தது…? எனக்கேட்டேன்.
வசுந்தரா: மிகச்சிறிய வயதிலேயே வாசிப்பு பழக்கம் எனக்கு வந்துவிட்டது.
ஆரம்பக் கல்வியில் வாசிப்பு ஒரு பாடமாக இருந்துவந்தது.
எனது தந்தையார்தான் வாசிப்பை எனக்கு ஊக்குவித்தவர். என்னை மட்டுமல்லாமல், எனது தாயார், உடன்பிறந்தவர்களையும் வாசிப்பை நேசிக்க
வைத்தவர். அவர்தான் எங்கள் வீட்டு நுழைவாயில்
கதவின் நிலையில் வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்ற மில்க்வைற் வாசகத்தை
ஒட்டி வைத்திருந்தார். அந்த வாசகமே வேதவாக்குப்போல் புத்தகங்களின் முக்கியத்துவத்தை
எமக்கு உணர்த்தியது.
எமது தந்தையாருக்கு காலையில் எழுந்ததும் வீரகேசரி படிக்கின்ற
பழக்கம் இருந்தது. அதனால் சிறுவயதிலேயே எங்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
சிலவேளைகளில் அவருக்கு முன்னால் இருந்து அனைத்துச்
செய்திகளையும் தனக்கு வாசித்துக் கூறும்படி கூறுவார். அவர் ஒரு புத்தகப்பிரியர். எங்கள் வீட்டில் சிறிய
நூலகமே இருந்தது.
சிறுவயதில், அம்புலிமாமாவில்
தொடங்கிய வாசிப்பு அனுபவம், பத்திரிகைகள், நாவல்கள், சஞ்சிகைகள் என பலவற்றையும் தேடி
வாசிக்கத்தூண்டியது. பள்ளிப் பாடப் புத்தகங்களிடையே,
இவைகளும் பாடப்புத்தகங்கள்போல் சுமக்கப்பட்டன.
புத்தகப்பிரியரான எனது தந்தையார் 70 களில்
வெளிவந்த வீரகேசரிப் பிரசுரங்களை ஒன்றும் தவறவிடாமல் வாங்கி சேமித்து வைத்திருந்தார்.
இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக உள்ளது.
வசுந்தராவிடம், அவரது வாசிப்பின் தேர்வு எவ்வாறிருந்தது…? எனக்கேட்டேன்.
.jpg)

.png)
.png)




.jpg)
.jpg)
.jpg)


.png)
.png)





.jpg)
