மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்தோர் முற்றத்தில் “ கதை எழுதுவோம் வாரீர் “ அரங்கு ! அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம் செல்வி அம்பிகா அசோகபாலன்


மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த  மூத்தோர் முற்றம் மெய்நிகர் நிகழ்ச்சியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கதை எழுதுவோம் வாரீர் அரங்கில், கனடாவில் வதியும் பிரபல எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் ஐந்து கால் மனிதன் என்னும் சிறுகதை பற்றிய தனது வாசிப்பு அனுபவத்தை செல்வி அம்பிகா  அசோகபாலன் பகிர்ந்துகொண்டார்.

செல்வி அம்பிகா அசோகபாலன்,  சிட்னியில்  மக்குவாரி பில்ஸ் உயர்தர பாடசாலையில் பத்தாம் ஆண்டிலும், ஹோம்புஷ் தமிழ் கல்வி நிலையத்தில் பதினொறாம் ஆண்டிலும் கல்வி கற்கின்றார்.  அடுத்த வருடம் உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக  தோற்றவிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும்   திரு, திருமதி அசோகபாலனின் புதல்வியான இவர், இந்த நாட்டில் பிறந்து தமிழையும் ஒரு பாடமாக கற்றுவருபவர்.

ஶ்ரீகாந்த் - கானா பிரபா

 


















தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ....
செவ்வானத்தின் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ...

கடந்த ஒரு வருடத்தில் அதிக தடவை கேட்டது, அதுவும் எஸ்பிபியின் பிரிவுக்குப் பின் இன்னும் ஆழமாக நேசித்த பாட்டு. இதற்காகவே யூடியூப் தேடிப் போய்க் கேட்கும் பழக்கத்தில் அந்தக் காட்சியில் தோன்றி நடித்த நடிகர் ஶ்ரீகாந்தும் அடிக்கடி வந்து நினைப்பு மூட்டுவார்.

பால்ய காலத்தில் பழகிய உருண்டு திரண்ட முகவெட்டுக் கொண்டோரைப் பல்லாண்டு கழித்துப் பார்க்கும் ஒரு அதிர்ச்சி தான் எழுந்தது பல்லாண்டுகளுக்குப் பின் அந்த மொழு மொழு முகம் கொண்ட ஶ்ரீகாந்தின் முதுமைப் படத்தை எஸ்.வி.சேகர் ஒரு தினம் பேஸ்புக்கில் பகிர்ந்த போது.

சின்ன வயசில் தங்கப் பதக்கம் பார்த்த போது கடும் கோபம் கோபமாக வந்தது அந்த துர் நடத்தை மகனாக நடித்த ஶ்ரீகாந்த் மேல்.
“அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி” 
என்று பட்டு மாமியுடன் கிட்டு மாமாவாக வந்து ஆட்டம் போட்ட போது கைதட்டி ரசிக்க வைத்தார்.
இது மாதிரித் தினுசு தினுசான குணச்சித்திரங்களில் அவர் ஆளுமைப்படுத்தியதால் தான் அந்த எரிச்சலும், பூரிப்பும் வந்ததைப் பின்னாளில் நடிப்பென்றால் என்ன என்று புரிந்த காலத்தில் தெரிந்தது.

மாகாளியின் அறைகூவல் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .


இன்றய காலத்திலே யுனெஸ்கோ நிறுவனம் சிறுவர் தினம் என நவம்பர் 20ம் திகதியை சிறுவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. சிலகாலங்களின் முன்பு வரை பல நாடுகளிலே சிறுவர்களைக் கொண்டு பெரிய தொழில்சாலைகளில் வேலை வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மற்றும் சிறுவர்களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாமையும் காணப்பட்டது. குறிப்பிட்ட சிறுவர் தினத்தில் உலக நாடுகள் சிறுவர்கள் நலச் சேவைகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களின் மேம்பாடு, அபிவிருத்தி, நலச்சேவைகள் பற்றி அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர இச் சிறுவர்தினப் பிரகடனம் பயனுடயதாக இருக்கிறது. 

 அதே போன்று பெண்கள் தினமும் உண்டு. மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி உள்ளது.. காரணம் இன்றய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சாதாரண மனிதருக்கு வழங்கப்படும் உரிமைகள் அற்றவர்களாக வாழ்கிறார்கள். கல்வியறிவற்றவராகவும் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகம் கூடத் தெரியாது சமய சம்பிருதாயம் என வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படும் துன்பமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது. 

 பாரதியாரோ, ‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகுனிந்தார்’ என்று பாடி இன்று 80 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் உலகில் இந்தக் கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களின் விசேஷ கொண்டாட்டமாகக் கொள்ளப்படும் இந்த நவராத்திரி நாட்களை நாம் ஏன் பெண்கள் தம் நிலையை; திறமையை; பலத்தை உணரவைக்கும் காலமாகக் கொள்ளக் கூடாது? 

 பாரதி வாக்கில், ‘ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என உயர்ந்து விட்ட பெண்ணினம்’

முள் முடி - அனுபவச் சிறுகதை

 


அடுத்த வாரம் சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்க, கணக்காக சிட்னியில் பொது முடக்கமும் வந்து சென்றது. ஒற்றைப் படை இரட்டைப்படை, முப்படை, நாலிலக்கம் என்று கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க, அந்தா இந்தா என்று நான்கு மாதம் கடந்து இன்று தான் சிட்னியைத் திறந்திருக்கிறார்கள்.  மொத்தமாக ஐந்து மாதங்கள் கத்தரி படாத தலை.   

 இடைப்பட்ட காலத்தில் என் தலை முடியும் கிசு கிசுவென்று எல்லாப் பக்கமும் வளர்ந்து விட்டது. கிரீமிலிருந்து, கழிவு ஒயில் தவிர மீதி எல்லா எண்ணெயும் போட்டுத் தலையைத் தடவித் தடவினாலும் அதுவோ சுருட்டினாலும் வளைந்து நெளிந்து கெம்பிக் கிடக்கும் ஓலைப் பாய் பொல எல்லாப் பக்கமும் தோகை விரித்துக் கொண்டிருக்கும். அந்தக் காலத்துப் பட்டிக்காடா பட்டணமா காலத்துச் சிவாஜியின் தலை போல, அல்லது இன்னும் கொஞ்சம் தள்ளி வந்து தொண்ணூறுகளில் உத்தமராசா பிரபுவின் தலைமுடி  போலக் கெம்பிக் கொண்டு கிடக்கும். செல்ல மகளும் தன்னிடம் இருக்கும் தலையலங்காரக் கிரீடம், ரப்பர் பாண்ட் எல்லாம் அப்பாவின் தலையில் இறுகக் கட்டி ஒரு விளையாட்டு மைதானம் ஆக்கி விட்டார்.   

இலங்கைச் செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம் 

ஒம்புட்ஸ்மனை சந்தித்துரையாடிய நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்

ஆலயத்திற்குள் பொலிஸ் அதிகாரி காலணியுடன் சென்ற விவகாரம்; இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அறிக்கை

 'பாராளுமன்றத்தில் திலகர்' நூல் வெளியீடு

யாழில் வாள்வெட்டு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

வடக்கில் வாள்வெட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!


இந்திய இராணுவத் தளபதி திருகோணமலைக்கு விஜயம் 

அரச அதிபருடன் சந்தித்துரையாடினார்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

உலகச் செய்திகள்

 நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை

ஜூலை படுகொலையின் பின்னர் நோர்வேயில் இடம்பெற்ற மோசமான தாக்குதல்

கைவிடப்பட்ட கொள்கலனில் இருந்து 126 குடியேறிகள் மீட்பு

மெக்சிகோ, கனடா எல்லையை திறப்பதற்கு அமெரிக்கா முடிவு

கொலம்பஸ் சிலையை நீக்குகிறது மெக்சிகோ

மூவருக்கு பொருளாதார நோபல் பரிசு அறிவிப்பு

ஆப்கானுக்கு மனிதாபிமான உதவி வழங்க ஜி20 நாடுகள் விருப்பம்


நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை

நோர்வேயில் மர்ம நபரால் அம்பெய்து ஐவர் படுகொலை-Five Killed and Two injured in Bow and Arrow Attack in Norway-Kongsberg

- டென்மார்க்கை சேர்ந்த 37 வயது நபர் கைது

நோர்வே நாட்டில், மர்மநபர் ஒருவர் அம்பு, வில்லை பயன்படுத்தி பொதுமக்கள் மீது எய்து 5 பேரை கொன்றுள்ளதோடு, துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார்.

இதில் 2 பொலிஸார் உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - பாபு - ச. சுந்தரதாஸ் - பகுதி 16

.


தமிழில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ஏ சி திருலோகச்சந்தர்.ஏவிஎம்,பாலாஜி போன்றவர்கள் தயாரித்த படங்களையும் சிவாஜி நடித்த பல படங்களையும் இயக்கி வெற்றி பெற்ற இவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை உருவானது.அதன் விளைவு சினிபாரத் என்ற நிறுவனத்தை உருவாக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பாபு என்ற படத்தை தயாரித்து டைரக்ட் செய்தார். படத்திட்கான நிதியுதவியை ஏ வி எம் நிறுவனம் வழங்கி பதிலுக்கு விநியோக உரிமையை பெற்றுக்கொண்டது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நீண்ட காலமாக கைவண்டி ரிக்சோக்கள் பாவனையில் இருந்து வந்தன.மனிதனை மனிதன் கை வண்டியில் சுமந்து கொண்டு மழையிலும் வெய்யிலிலும் போவதை நீக்கும் வகையில் 70ஆம் ஆண்டுகளில்கலைஞர் கருணாநிதி தலைமையில் ஆன தி மு க ஆட்சியில் கை வண்டி ரிக்க்ஷாக்கள் தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டன.அதட்கு பதில் சைக்கிள் ரிக்க்ஷாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பாபு படத்தின் கதாநாயகன் பாபு ஓர் அனாதை தெருவில் வளரும் அவன் வாலிபனானதும் கை வண்டி ரிக்க்ஷ இழுத்து பிழைக்கிறான்.சாப்பாடு கூடை தூக்கி ரிக்க்ஷா தரிப்பிடத்தில் உணவு படைக்கும் கண்ணம்மா அவன் காதலி.ஒரு நாள் குழந்தை அம்முவையும் அவள் பெற்றோரையும் தன் வண்டியில் கொட்டும் மழையில் இழுத்து செல்கிறான் பாபு இதனால் அம்மு குடும்பம் அவன் மீது இரக்கம் காட்டுகிறது ஆனால் விதி வசத்தால் அம்முவின் தந்தை காலமாக குடும்பம் நடுத் தெருவுக்கு வருகிறது.குடிசை வாசியான அம்முவையும் அவள் தாயார் பார்வதிக்கும் அரணாக நிட்கும் பாபு அம்முவை பட்டதாரி ஆக்குவதட்கு திடசங்கட்பம் பூணுகிறான்

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பன்னிரெண்டு ]



மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேர்ண் .... அவுஸ்திரேலியா 

      பனையும் தென்னையும் எங்களின் வாழ்வில் பயனை அளிக்கும் வகையிலேதான்


இருக்கிறது.அதனில் எந்த மாற்றுக் கருத்துக்களுக் குமே இடமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் உடைய தாகவே இருப்பதை யும் மறுத்துவிட முடியாது. ஆனால் பனையின் ஓலை 
தென்னை யின் ஓலை என்று வரும்பொழுது - பனையின் ஓலைதான் முன் னுக்கு வந்து நின்று விடுவதைக் காணமுடிகிறது. காரணம் பனை யின் ஓலை பெற்று வந்த வரமென்று தான் எண்ணத் தோன்று கிறது.பனை ஓலையின் வன்மையினைத் தென்னை ஓலை யானது பெற்றிருக்கவில்லை. அதனால் தென்னை ஓலை ஒரு மட்டோடு நின்று விடுகிறது.பனை ஓலையோ பல நிலைகளில் தன்னை வெளி ப்படுத்தி நிற்கிறது என்பதை கருத்திருத்தல் வேண்டும்.மங்கலம்அமங்கலம், இரண்டிலும் தென்னை வந்து நிற்கும்.தென்னையின் குருத்தோலை - தோரணங்களில் வந்து நிற்கும்.இந்தக் குருத்தோலை மணவீட்டிலும் வரவேற்கும். பிணவீட்டிலும் முன்னிற்கும்.பச்சைத் தென்னோலையில் பன்னாங்கு செய்து அதனை இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தும் நிலையும் வழமையில் இருக்கிறது. பன்னாங்காய்கிடுகாய் ஆகிய நிலையில் தென்னோலை தன்னை நிறுத்திக் கொண்டுவிடும்.

மரண அறிவித்தல்

 .

இளைப்பாறிய  சட்டதரணி  திரு சங்கரப்பிள்ளை யோகராஜா 


 


சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட  இளைப்பாறிய  

சட்ட வழக்கறிஞர் , பிரசித்த நொத்தாரிஸ்  திரு சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள்  12 10 2021 செவ்வாய் கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார்  சண்டிலிப்பாயை சேர்ந்த காலம் சென்றவர்களான  சங்கரப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மகனும் , காலம் சென்றவர்களான சபாரட்ணம் ,  நல்லம்மா ஆகியோரின் மருமகனும். காலம் சென்ற டாக்டர் பேர்ள் (PEARL ) அரிய மலர் அவர்களின் அன்புக் கணவரும்,  ஜெயந்தா பொறியியலாளர், பேர்த் , அஜித்குமார் பொறியியலாளர் சிட்னி, மதுரா ஆம்புலன்ஸ் சேவீஸ் நியூ சவுத் வேல்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்.


காலம்சென்ற  லலிதா,  சாந்தி, லலிதாம்பிகை, மகாதேவ்  ஆகியோரின் அன்பு மாமனாரும்.


சபரிகா , சபரீஷ் அரவிந்தன்,  அனிதா ஆகியோரின் பேரனும் 

காலம் சென்றவர்களான பாலசுப்பிரமணியம் , கந்தையா, ஞானசௌந்தரி ஆகியோரின் சகோதரனும்  ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 16.10.2021 சனிக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து 12.15 மணிவரை LIDCOBMBE , ROOKWOOD CEMETERY, SOUTH SAPEL  இல்  இறுதிக்  கிரிகைகளுக்காக வைக்கப்பட்டு பின்பு தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


COVID தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் அரச அறிவுறுத்தலுக்கு அமைய இறுதிக்கிரியைகள் இடம்பெறும். இரண்டு  தடுப்பூசிகளையும் போட்டவர்கள் மாத்திரம்  இறுதிக்  கிரிகைகளில்  கலந்து கொள்ளுமாறு  பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


 மேலதிக தொடர்புகளுக்கு

ஜெயந்தா    0450 982 818 

 அஜித் குமார் 0427 785 062

 மதுரா மகாதேவ் 0403 319 971

 மகாதேவ்  0450 329 212


சட்டத்தரனி யோகராஜா அவர்ளின் மறைவுக்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்




தமிழ்முரசு அவுஸ்ரேலியா வின் ஆசிரியர்களில் ஒருவரான மதுரா மகாதேவ் அவர்களின் அன்புத் தந்தையார் சட்டத்தரனி 
சங்கரப்பிள்ளை யோகராஜா அவர்கள் நேற்று  ( செவ்வாய் ) இரவு காலமானார். அன்னாரின் மறைவுக்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியாவின் ஆழ்ந்த அனுதாபங்கள்


By Mathura.

  RIP my dearest appa. I am grieved to say good bye to you. You have been a wonderful father and filled the void of my mother's absence after her demise in 1986. Thank you very much for all the sacrifices you have done to the family. You lived a dignified life. Helped so many in so many ways when you worked as a Labour Officer. Got jobs for many people. When you started to practice as a Lawyer and as a Notary Public you have helped so many especially the people of Sandilipay. You were a people's person and everyone addressed you in Sandilipay as "yogi annai". God did not give us kids but you were our child for the past few years. You are now in a better place and will be blessing us from heaven with amma. You are free from all the pain and from this evil world. Good bye appa until we meet again.

அஞ்சலி  மாப்பாண முதலியார் யாழ்ப்பாணச் சொத்து !



கவிஞர்  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

 மெல்பேர்ண் .... ஆஸ்திரேலியா 














குடையோடு வருவார் குனிந்தபடி நடப்பார்
குறையில்லா நல்லூரை கொண்டுமே வந்தார் 
எளிமையாய் இருப்பார் இறைவனை நினைப்பார் 
எல்லோர் மனதிலும் நிறைகிறார் மாப்பாணர்

அடக்கம் அவரிடம் அடைக்கலம் ஆனது
அமைதியை விரும்பி அவருமே ஏற்றார்
ஓரமாய் நிற்பார் ஒதுங்கியே நிற்பார் 
யாரையும் பாரார் நல்லூரானையே பார்ப்பார் 

சத்தம் போடார் சட்டம் உரைக்கார்
சகலதும் சிறப்பாய் நடந்திடும் அங்கு
நித்தியம் பூசை நிமிடம் தவறாது
பக்தியாய் யாவும் பாங்குற நிகழும் 

சத்தித் தாயே வருவாய்! (அறுசீர் கழி நெடிலடி விருத்தம்)

  NN Photo 2_CROP.jpgத. நந்திவர்மன்

           திட்டந் தீட்டித் தீமை

                   செய்வோர் கூடிப் போனார்

          பட்டோந் துன்பம் அதனால்

                   பார்த்துக் கொண்டோ இருப்பாய்?

          இட்ட மான அன்பர்

                   இன்னல் தீர்க்க இரந்தோம்

          கொட்டம் அடக்கி ஆளக்

                   கோமே தகமே வருவாய்!                 1

 

          ஞால மீதில் தீயோர்

                   நடத்தும் ஆட்சி கண்டுஞ்

          சீலம் பலவுஞ் சிதைத்துச்

                   சிறுமை பெருக்கக் கண்டும்

          ஓலம் இட்டு அழுதோம்

                   ஓயா துன்னைத் தொழுதோம்

          நீல மயிலே வருவாய்

                   நினைவில் அமைதி தருவாய்!                   2

“ நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலாசிரியர் பிறைசூடன் - கானா பிரபா

 


அன்புக்குரிய பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் நவராத்திரி காலத்தில் வானகம் சென்றிருக்கிறார்.  

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட அதிர்ஷ்டம் கொண்ட பாடலாசிரியர்.
தன் பேட்டிகளில் வறுமையோடு கவி பாடியதையும், ஒரு பாட்டுக் கேட்க அந்தரப்பட்டதையும், ஏன் தன் முதல் பாடலையே கேட்க அவர் பட்ட துன்பியலையும் சொல்லியிருப்பார். ஆனால் அவரின் பாடல்கள் எல்லாம் வற்றாத செல்வம் கொழித்த வரிகள்.
 
அறுபத்தைந்து என்பது கவிஞனைப் பொறுத்தவரை அகால மரணமே தான். ஆனால் அள்ளிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.

புதுக்கோட்டை சாந்தானந்த ஸ்வாமி வழி வந்தவரால் “சந்திரசேகரன்” என்ற இயற் பெயர் கொண்டவர் “பிறைசூடன்” ஆகி முப்பத்தாறு ஆண்டுகள் தொட்டிருக்கின்றது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ராசாத்தி "ரோசாப்பூவே வெட்கம்" 

https://www.youtube.com/watch?v=yVqz6AQakOc
 என்ற சிறை படப் பாடலோடு வெளிவராத எம்.ஜி.ஆர் இல்லம் படம் உட்பட ஏராளம் தனிப் பாடல்களுக்கும் மெல்லிசை மன்னரோடு இணைந்து பணிபுரிந்திருக்கின்றார் கவிஞர்.

செல்வமகள் திருவடியை சிக்கெனவே பிடித்திடுவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


நிலையாக நில்லாமல் நீள்சுகத்தை நல்காத

அலைபாயும் பொருள்நாடி அனைவருமே அலைகின்றார்

அலைமகளே உன்னருளை அவர்நாடா ஓடுகிறார்
அவரகத்தை மாற்றிவிட அருள்சுரப்பாய் அலைமகளே 

இவ்வுலக வாழ்வினுக்கு இன்பமே பொருளாகும்

இன்பமதை மனமிருத்தி பொருள்நாடல் முறையல்ல
பொருளெம்மை வந்தடைந்தால் போகமதை மனமகற்றி
அலைமகளின் அருள்கிடைக்க அனுதினமும் வேண்டிடுவோம்

தளர்வறியாச் செல்வமதை தந்தருள வேண்டுகிறோம்
நிலைதழும்பா வாழ்க்கையினை நீயருள வேண்டுமம்மா
விலையில்லாச் செல்வமென்று விளம்பிநிற்கும் மனமகல
அலைமகளே அருள்புரிவாய் அடிபணிந்து பரவுகிறோம்

அளவான பொருளமைய அலைமகளே அருளிடம்மா
அறம்செய்யும் அகமமைய அருள்புரிவாய் அலைமகளே
ஆசைவலை அறுவதற்கு அம்மாநீ உதவிடுவாய்
அனுதினமும் திருவடியைப் பரவுகிறோம் அனைவருமே

கொள்ளையிடும் குணமுடையார் குவலயம்விட்  டகலவேண்டும்
குணமுடையார் குவலயத்தில் குறைவிலா திருக்கவேண்டும்
வறுமையெனும் வார்த்தையது வரண்டழிந்து போகவேண்டும்
வையகத்தில் மக்களென்றும் வாழ்வாங்கு  வாழவேண்டும்

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 62 வீரகேசரிக்கு 36 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சோதனை ! “ நூல் விட்டுப்பார்த்த “ செல்வந்தரும் நுண்மையாக பதில் சொன்ன ஊடகவியலாளரும் !! டிஜிட்டல் யுகத்தில் இன்று பல தமிழ்ப் பத்திரிகைகள் !! முருகபூபதி


இந்தத் தொடரின் 60 ஆம் அங்கத்தில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் வருகின்றேன்.

திருகோணமலையில் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து தான் தொடங்கியிருந்த மிட்சூய் சீமெந்து ஆலையை ஒரு ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கம் குண்டு வைத்து தகர்த்துவிட்ட செய்தியறிந்து கோபத்திலிருந்த வீரகேசரி நிறுவனத்தின் தலைவர் ஞானம், ஒருநாள் ஆசிரிய பீடத்துக்கு தொடர்புகொண்டு ஒரு  பத்திரிகையாளரை தனது வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதம ஆசிரியர் ஆ. சிவநேசச்செல்வனும் வாரவெளியீட்டுக்கு பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபாலும் மந்திராலோசனை நடத்திய பின்னர்  அலுவலக ஊடகவியலாளர்  இ. தம்பையாவை தெரிவு செய்து அனுப்பினர்.

தம்பையா சட்டம் பயின்ற பின்னர்  அங்கே இணைந்தவர்.  இவருடன்


இணைந்தவர்கள் மேலும் இருவர். அவர்கள்:  ஶ்ரீகாந்தலிங்கம், மு. பாலச்சந்திரன்.  இவர்கள் மூவரும் எனது நல்ல நண்பர்கள். தம்பையா இடதுசாரி சிந்தனை கொண்டவர். மலையகத்தில் தலவாக்கலையைச் சேர்ந்தவர்.  அவரது அழைப்பில் நானும் நண்பர் சில்லையூர் செல்வராசனும் கமலினி செல்வராசனும் ஒரு தடவை அங்கு நடந்த பாரதி விழாவில் உரையாற்றச்சென்றிருக்கின்றோம்.

தம்பையா, கொழும்பில்  தேசிய கலை இலக்கியப்பேரவையில் சட்டத்தரணி சோ. தேவராஜா,  தணிகாசலம், மற்றும் தோழர் செந்திவேல் ஆகியோருடன் இணைந்து இயங்கிய காலம்.

இவர்கள் நடத்திய கூட்டங்களிலும் நான் உரையாற்றியிருக்கின்றேன். நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபையின் அங்கத்தவன். அத்துடன் கொழும்புக் கிளையின் செயலாளர்.  அரசியல் ரீதியாக தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் தே. க. இ. பேரவையைச் சேர்ந்தவர்களுடன் எனக்கு நல்லுறவு ஆரோக்கியமாக நீடித்தது.

நண்பர் தம்பையா ,  செல்வந்தர் ஞானம் அவர்களின் இல்லத்திற்கு புறப்படும் முன்னர் என்னிடம் வந்து, திருகோணமலை சீமெந்து ஆலைமீதான  தாக்குதல்  சம்பவம் பற்றி மேலதிக தகவல்களை கேட்டுப்பெற்றார்.

வெள்ளவத்தை லில்லி அவனியூவில் அமைந்திருந்த ஞானம் அவர்களின் வீட்டிற்கு தம்பையா சென்றபோது,  அங்கு அவருக்கு அந்த செல்வந்தர் தேநீர் விருந்து வழங்கி உபசரித்துவிட்டே நேர்காணலுக்கு தயாரானார்.

அந்த உரையாடலுக்கு முன்னர், வீரகேசரி ஆசிரிய பீடத்தில் எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள்..? அங்கு  மலையகம்  ,  வடக்கு – கிழக்கு – மேற்கிலிருந்து எத்தனைபேர் பணியாற்றுகிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்தார்.

பாரதி தரிசனம் – அங்கம் 05 யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! பாரதியின் கவிதை வரிகளை தாரக மந்திரமாக ஏற்ற மல்லிகை !! முருகபூபதி


இலங்கை அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டு முக்கிய கவனிப்பினை பெற்றிருக்கிறது.  தமிழ் இன விடுதலை நோக்கிய பயணத்தை  வடக்கில் ஆயுதம் ஏந்தித்  தொடங்கிய தமிழ் இளைஞர்களுக்கு முன்னோடியாக தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் ஆயுதப்புரட்சிக்கு தயாரான காலப்பகுதிதான் அந்த 1971 ஆம் ஆண்டு.

பாரதி நினைவு நூற்றாண்டு நடக்கும் (2021 ) இக்காலப்பகுதியிலிருந்து பார்த்தால், சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த கிளர்ச்சி அது.

இந்தக் கிளர்ச்சி சிங்கள இனத்திற்காகவோ சிங்கள மொழிக்காகவோ நடக்கவில்லை என்பது தெளிவு.  அனைத்து தொழிலாள – விவசாய – பாட்டாளி மக்களுக்காக தொடங்கப்பட்ட புரட்சி. ஆனால், இது தென்னிலங்கையில் கருக்கொண்டமையால்


வடக்கின்  தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஈர்க்கப்படவில்லை.

இந்தப்புரட்சி முறியடிக்கப்பட்ட பின்னர், அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், சுமார் ஐம்பதினாயிரம் இளம் சிங்கள கிளர்ச்சியாளர்களும் அப்பாவி பொது மக்களும் கொடிய அடக்கு முறையின் கீழ் கொல்லப்பட்டதன் பின்னர், புலிகள் இயக்கம் வெளியிட்ட ஒரு நூலில், தாம் குறிப்பிட்ட இந்த 1971 ஏப்ரில்  கிளர்ச்சியின் முடிவிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்தே தமது விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதாக எழுதியிருந்தனர்.

குறிப்பிட்ட 1971 ஆம் ஆண்டு வழக்கம்போன்று அமைதியாகத்தான் தொடங்கியது.  அந்த ஆண்டு பிறந்ததும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை தைப்பொங்கல் சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.

அதுவே நான் முதல் முதலில் பார்த்த மல்லிகை இதழ். அதனை, அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவாவின் கரத்திலிருந்தே பெற்றுக்கொண்டேன்.

அன்றைய நாளை மறக்க இயலாது. அவர் யாழ்ப்பாணத்திலிருந்து எங்கள் நீர்கொழும்பூருக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை எனது நண்பரும் பின்னாளில் தினபதி – சிந்தாமணி பத்திரிகையாளராக பணியாற்றியவருமான தற்போது பாரிஸில் வதியும் நண்பர் செல்வரத்தினம் மூலம் அறிந்து, அவருடன் ஜீவாவை பார்க்கச்சென்றேன்.