உலகச் செய்திகள்


ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

பாக்தாத் வைத்தியசாலையில் பயங்கர தீ ; 11 குழந்தைகள் பலி

குலென் விவகாரம்: அமெரிக்காவுக்கு துருக்கி எச்சரிக்கை: புதின் - எர்டோகன் சந்திப்பு

ஏமனில் சவுதி கூட்டுப்படை விமான தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

09/08/2016 சவுதி கூட்டுப்படை ஏமனில் நடத்திய தாக்குதலில், தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொது மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் ஐ.நா. நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன

திரையுலக ஆளுமை பஞ்சு அருணாசலம் நினைவில் - கானா பிரபா


நான் எடுத்த காரியம் எல்லாத்துலையும் வெற்றி அடைஞ்சேனா என்றால் இல்லை ஆனால் என்னால் மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை - பஞ்சு அருணாசலம்

மதிப்புக்குரிய பஞ்சு அருணாசலம் அவர்கள் சில மணி நேரம் முன்னர் இறந்ததை அறிந்து பேரதிர்ச்சி கொண்டேன்.  தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, கதை, வசனகர்த்தாவாக, இயக்கு நராக விளங்கிய இவர் மனித உருக் கொண்ட சினிமாத் தொழிற்சாலை. கண்ணதாசனின் உதவியாளராக இருந்து சிறு முதலீட்டுப் படங்களில் ஆரம்பித்து பெரும் பட்ஜெட் படங்களை எடுத்துத் தள்ளிவர். இசைஞானி இளையராஜாவுக்கு அறிமுகம் கொடுத்தவர் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு மாபெரும் வர்த்தகச் சந்தையைக் காட்டியவர்.
 பஞ்சு அருணாசலம் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச வேண்டும் என்ற கனவோடு இருந்த எனக்குக் கடந்த மூன்று மாதங்களாக பேஸ்புக் வழியான நட்புப் பாலம் கிட்டியது என் வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த உறவுப் பாலத்தை ஏற்படுத்தியது இந்தப் பதிவு

வன்னியில் வலை விரிக்கும் நிதி நிறுவனங்கள்! அவலப்படும் அப்பாவிகள்!

கடந்த காலப் போர், பொருளாதார நெருக்கடிகள், அதன் பின்னரான இடப்பெயர்வுகள், இழப்புகள் என்பவற்றால் போரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வாழ்விட வசதிகளை ஏற்படுத்த வேண்டியமை, வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியமை என பல்வேறு சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவற்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு இடங்களிலும் கடன்களைப் பெற்று அவற்றை மீளச்செலுத்த முடியாமல் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கிகளிலும் தனியார் கம்பனிகளிலும் நுண்கடன் நிதிநிறுவனங்களிடமிருந்தும் பல்வேறு வட்டி வீதங்களில் தொழில் தேவைகள் கருதி பெற்றுக் கொள்ளும் கடன்கள் அந்த நோக்கத்திற்காக செலவிடப்படாமல் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை மீளச் செலுத்த முடியாமல் பல குடும்பங்கள் உள்ளன.
இதனை விடவும் தேவை கருதி வங்கிகளில் கடன் பெற்று அந்தத் தேவைகளுக்கு அப்பணம் பயன்படுத்தப்பட்ட போதும் அதனால் போதிய வருமானம் கிடைக்காமையினால் கடன்களை மீளச்செலுத்த முடியாமலும் அவர்கள் காணப்படுகின்றனர்.

தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம்.

.
தோல்விகளைப் பிரச்சினைகளாகப் பார்க்காமல் எல்லாவற்றையும் அனுபவங்களாய்ப் பார்க்கலாம். இதுவே நமது வாழ்க்கைத் தத்துவமாக இருக்கட்டும்
கல்விக் கடன் வசூலிக்க வந்த கார்ப்பரேட் ஈட்டிக்காரர்களின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றுக்குத் தூக்கில் தொங்கி பதில் சொன்ன பொறியியல் பட்டதாரி மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த லெனின்...
பி.எஸ்.ஜி மருத்துவமனை மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்ட‌ மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவி லட்சுமி....
ஃபேஸ்புக்கில் தன்னை ஆபாசமாய்ச் சித்தரித்ததைத் தடுக்க முயன்று, காவல்துறையினரால் அலைக்கழிக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியா...
வாழத் தொடங்கும் முன்னரே மரணத்தின் வாசலைத் தட்டிய இளம்வயதினரின் சமீபத்திய‌ தற்கொலை நிகழ்வுகள், அதிவேகமாய் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திர நகரத்தை உலுக்கிச் சற்றே கவனத்தைத் திசைத் திருப்புகிற நிகழ்வாய் அமைந்திருக்கின்றன‌.
2014-ல் பல்கலைகழக மானியக் குழு உதவியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (96 கல்லூரிகள், 4646 மாணவர்கள்) 12.20 சதவீத மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், 15.45 சதவீதத்தினர் தங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருப்பதாகக் கூறியதும் பதிவாகியுள்ளது.
இவ்வாறான‌ தற்கொலைகள் நடக்கும்போதெல்லாம், பிரச்சினைகளைக் கையாளும் திறன் இல்லாமல் போவது, அதீத மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்கின்றன என்று பூசி மெழுகப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா?
உயிர்- உள்ளம்- சமூகம் ஆகிய மூன்று கோணங்களிலிருந்து நாம் ஆய்வு செய்தால் மட்டுமே தற்கொலைகள் பற்றிய சரியான புரிதலும், அதைத் தடுப்பதற்குச் சரியான‌ வழிமுறையும் கிடைக்கும்.

இலங்கைச் செய்திகள்


நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று (08/08/2016)

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

தயா மாஸ்டர் சற்றுமுன்னர் கைது.!

மூன்று  இலட்சம் டொலர்களை வைப்பிலிடும்  வெளிநாட்டவருக்கு  10 வருட கால வதிவிட வீசா  : அரசாங்கம் அறிவிப்பு

யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்


ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!

.

எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு.

உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும்  ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.
குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது.
இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பது மிகவும் இயலாத காரியம் ஆகும். உங்களை அறியாமலே, ஒற்றை தலைவலியானது உங்களை ஆட்கொண்டு, நேரம் செல்லச் செல்ல அதிகரிப்பதை நீங்கள் சில சமயங்களில் உணரலாம்.

வாழ்வை எழுதுதல் - முருகபூபதி


உறவுகளைத்தேடவும்  இணைக்கவும்  பாதை  திறக்கும் ஊடகங்கள்
பெறுமதியானவர்களை   வாழும்பொழுதே கௌரவிக்காமல்,  மறைந்த  பின்னர்  நடத்தும்  சடங்குகள்   சுயதிருப்தியன்றி   வேறில்லை
                                                                     

தமிழ்நாட்டில்   1967  இல்  நடந்த  சட்டசபைத்தேர்தலில்  எம்.ஜீ.ஆர். படுத்துக்கொண்டே   ஜெயித்தவர்  என்று  இன்றும்  சொல்லப்படுகிறது. அக்காலப்பகுதியில்  அவர்  நடிகவேள்  எம்.ஆர்.ராதாவினால்  சுடப்பட்டு,  சிகிச்சைக்காக  மருத்துவமனையில்  இருந்தவேளையில் பறங்கிமலைத்தொகுதியில்   வெற்றியடைந்தார்.
அதற்குப்பிறகு,    பல  வருடங்களின்  பின்னர்  அவர்,  அமெரிக்காவில் சிகிச்சை   பெற்றவேளையிலும்  நடந்த  ஒரு  தேர்தலில் வெற்றிபெற்றார்.
இந்தச்சம்பவங்கள்   அண்மையில்  எனது  நினைவுக்கு வந்தமைக்குக்காரணம்,   அவுஸ்திரேலியா  சிட்னியில்  ஒரு  முதியோர் இல்லத்தில்   அமைதியாக  படுத்திருக்கும்  தகைமைசார்  பேராசிரியர் பூலோகசிங்கம்   குறித்து  எழுதப்பட்ட  பதிவுதான்.


ஈழத்து தமிழ் நாடக வரலாறும் பாலதாஸும் - பேராசிரியர் சி.மௌனகுரு

ஈழத்து  மரபுவழி  நாடக  உலகில்  பெரும்  மாற்றங்கள் நடந்து   கொண்டிருந்த   காலப்பகுதியில்   கம்பீரமான  நடிகர்


ஈழம் தமிழ் நாடக மரபுக்கு நீண்டதோர் செழுமையான பாரம்பரியம் உண்டு,பல்லாயிரக்கணக்கான நாடகர்களின்  பங்களிப்பினாலேயே இம்மரபு  உருவானது.வரலாறு சிலரைப் பதிவு செய்து வைத்துள்ளது.சிலரைப் பதிவு செய்யவில்லை.அப்படிப் பதிவு செய்யக் கூடியவர்களுள் முக்கியமான ஒருவர் நண்பர் பாலதாஸ்70 வயது தாண்டியுள்ள அவர் செயற்பாடுகள் பற்றிவரும் இம்மலர் இக்குறையைப்போக்கும் விதத்தில் அமையும் என எதிர் பார்க்கிறேன்ஈழத்துத் தமிழ் நாடக மரபு  மரபுவழி நாடகம்,நவீன நாடகம் என இருகிளைப்பட்டு வளர்ந்து வந்துள்ளது
இவ்விரு மரபுகளைலும்  நடிகராக,எழுத்தாளராக,இசை அமைப்பாளராக,நெறியாளராக பலர் அறியப்பட்டுள்ளனர்
பாலதாஸ் இதில் எங்கு வருகிறார்?
1950,60 களில்யாழ்ப்பாணக் கூத்துகளில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டுபாடி நடித்த ஓர் இளைஞன் அனைவரையும் கவர்கிறான்.அவனது உச்சஸ்தாயிக் குரலும்,மிடுக்கான நடிப்பும்,கம்பீரமான உடல் அசைவுகளும் பார்த்தோரைக் கவர்கின்றன.
மரபுவழிக் கூத்துகளில் பாடி நடித்த பாலதாஸ் கூத்தை எல்லோரையும் போல அப்படியேஆற்றுகை செய்யாமல் காலப் புதுமைக்கு ஏற்ப மாற்றி அளித்தல் மூலம் மேலும் அதற்கொரு ஜனரஞ்சகக் கவர்ச்சியை அளிக்கலாம் என எண்ணிணான்
1960 களின் நடுப்பகுதியில்யாழ்ப்பாணத்தில்  பாஸையூரில்  அண்ணாவியார் இராஜேந்திரத்தைத்  தலைவராகவும்,  அன்டர்ஸனை   செயலாளரகவும் பாலதாசை   உபதலைவராகவும்  கொண்ட பாஸையூர்  வளர்பிறைக் கலா மன்றம்  நிறுவப்படுகிறதுபடுகிறது.

ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக நடனமாடி அசத்தல்: சீனாவில் கின்னஸ் சாதனை -வீடியோ இணைப்பு

.
ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக நடனமாடி அசத்தல்: சீனாவில் கின்னஸ் சாதனை -வீடியோ இணைப்பு

சீனாவில் ரோபோட்களை வைத்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 1,007 ரோபோட்களை ஒன்றாக நடனமாட வைத்து சாதனை புரிந்துள்ளனர்.
முந்தையை சாதனையை விட இருமடங்கு அதிகமாக ரோபோட்களை வைத்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரோபோட்டும் 43.8 செ.மீ உயரம் கொண்டவை. ஆயிரம் ரோபோட்கள் ஒன்றாக இணைந்து நடனமாடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சீனாவின் கியுண்டாவ் நகரில் நடைபெற்ற பீர் திருவிழாவின் போது இந்த சாதனை நிகழ்த்தி காட்டப்பட்டது.
இந்த ரோபோட் இயந்திரங்கள் ஒரே ஒரு செல்போன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் தொடர்ச்சியாக நடனமாடி அசத்தியது.



உறவினுள் பாலியல் வன்முறை எனும் பயங்கரம் - லலிதா ப்ரூடி (Lalitha Brodie)

INCEST & SEXUAL ABUSE 

ஐந்து வயது முதல் தனது சொந்த தந்தையின் பாலியல் வன்முறைக்குள் அகப்பட்டு திண்டாடிய தமிழீழப் பெண், பதின்மப்பிராயத்தில் வெளியேறி தனது பெயரை  Jenny Starke என மாற்றி, தனது கதையை 2015ம் ஆண்டு இணையத்தளத்தில் DIARY OF A MAD TAMIL WOMAN என்ற தலைப்பில் பிரசுரித்து சரித்திரம் படைத்தார். (இதை Google பண்ணி வாசிக்கவும்) Jenny Starke M.S.W., R.S.W. தன் நண்பி தர்ஷினி இளாங்கீரன் M.A RP உடன் இணைந்து 10 - 04 - 2016 நடாத்திய கருத்தரங்கிற்கு நான் சென்றிருந்தேன்.    மிக்க ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்ட இரு இளம் யுவதிகளின், கருத்தரங்கிற்கு சுமார் நூறு தமிழீழப் பெண்கள் சில வாலிபர்கள், சில வேற்றின மக்களும் வந்திருந்தினர். வந்தவர்கள் அனைவரும் மிக்க ஆர்வத்துடன் பங்குபற்றி    Jennyம் தர்ஷினியும் உருவாக்கிய அன்பு ANBU = ABUSE NEVER BECOMES US, எனும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.
முன்பு ஒருவராலும் பேசப்படாத இந்த INCEST உறவினுள் பாலியல் வன்முறையைப் பற்றி, தற்போது உலகளாவிய ரீதியில் சகல சமுதாயங்களும் வெளிப்படையாகப் பேசவும் எழுதவும், ஊடகங்களைப் பயன்படுத்தி வருமுன் தடுப்பதைப் பற்றி ஆராயவும் ஆரம்பித்திருக்கின்றது. ஒரு நல்ல மாற்றம்.

உலகை உருக வைத்த அழுகை!

.

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.
நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.
இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை பகிர்ந்து கொண்ட கனடா நீச்சல் வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது.
சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது...
கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. பொதுக்குளங்கள், ஏரிகளிலும் குளிக்க முடியாது.
ஏதாவது நீச்சல் குளத்தில் கறுப்பின மக்கள் குளித்துக் கொண்டிருந்தால், அங்கு வரும் மற்றவர்கள் முதலில் அவர்களை வெளியேறச் சொல்வார்கள்.
கறுப்பின பிரபலங்களும் கூட அத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

ராஜராஜ சோழன் - பிரமிப்பும், கேள்விகளும்! - பாமரன்


Astonishing Era and few questions on Emperor Raja Raja Chozhan - Tamil Literature Ilakkiyam Papers
நமக்கும் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் அப்படியொன்றும் தனிப்பட்ட பகை கிடையாது. பள்ளிக்கூட பாடப்புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக "சோழர் வரலாறு" படித்ததோடு சரி.
சிறு வயதில் அம்மா கூட்டிப் போன ஏ.பி.நாகராஜனின் 4975 மீட்டர் நீளமுள்ள "ராஜராஜ சோழன்" படத்தினைப் பார்த்து வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வியந்திருக்கிறேன். தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் படம் அதுதான். பின்னர் பல வருடங்கள் கழித்து தஞ்சை மண்ணில் கால் வைத்தபோது பிரமிப்பு விலகாமல் அணு அணுவாக ரசித்த இடம் ஒன்று உண்டென்றால் அது தஞ்சை பெரிய கோயிலாகத்தான் இருக்க முடியும்.
பதிமூன்று அடுக்குகள் கொண்ட அதன் வேலைப்பாடுகளும் அழகும் நம்மை வியக்க வைக்கின்றன. நேற்று கட்டிய காமன்வெல்த் விளையாட்டிற்கான பாலமே குப்புறக் கவிழ்ந்து பலபேர் குற்றுயிராய்க் கிடக்கும்போது பத்து நூற்றாண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் இன்னமும் கம்பீரமாய் காட்சி தருகிறதே என்ன காரணம்?

சிட்னி சைவமன்றம் முகநூல்

நம் பண்டைய முனிவர்களின் அதிசயப் பேரறிவு: - செல்வத்துரை சந்திரகாசன்

.


மனிதர் யாவரும் ஐந்தறிவு உடையோர் என்பது யாவரும் அறிந்ததே. எமது புலன்களால், தற்போதைய ஆற்றலுடன் உணரப்பட முடியாத பல பொருட்கள், காட்சிகள், நிகழ்வுகள் என்பன எம்மைச் சூழ இருக்கின்றன. இவை யாவும் எமக்குப் புலப்படாமல்  விட்டாலும், இவற்றை எல்லாம் நம் பழங்கால முனிவர்கள் முழுவதும் அறியக் கூடிய ஆற்றல் கொண்டு  இருந்தார்கள் என்று நம்புவதற்கு, அவர்கள்  விட்டுச் சென்ற, மதிநுட்பம் மிக்க ஆக்கங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.

அவற்றில் தற்போதைய விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

*தியானம்:
தியானமே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாய்  விளங்குகிறது. மனிதனுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் சக்தியினை கூரிய, ஆழ்ந்த தியானம் மூலம் வெளிக்கொணர்ந்து, அதன் பயனால் பேரானந்தமான வாழ்க்கை வாழலாம். மனம் குவிந்த  தியானம் மூலம், பிணி, திரை, மூப்பு,  மன அழுத்தம், ஏக்கம், கவலை, இரத்த அழுத்தம், கொழுப்பு, உஷ்ணம், சோர்வு முதலியவை நீங்கி, புத்துணர்ச்சி, அமைதி, சந்தோசம் அதிகரித்து, தூங்கிக்கொண்டிருக்கும் மூளைக் கலங்கள் விழித்தெழுந்து , புதிய கலங்கள் உருவாகி,  அக, புற அறிவுஞானம்  பெருகி, நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழலாம் என்று எழுதி வைத்தார்கள்.

தமிழ் சினிமா - நமது




நமது - Cineulagam
தரமான சில படங்கள் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அதற்கு முக்கிய காரணம் படம் நன்றாக இருந்தாலும், முகம் தெரியாத சில நடிகர்களால் அந்த படம் பெரிதும் பெயர் வாங்காமல் செல்லும், ஆனால், மலையாள இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் மோகன் லால், கௌதமி என முன்னணி மற்றும் பிரபலமான நடிகர், நடிகைகள் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள படம் நமது.

கதைக்களம்

மோகன் லால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மேனேஜராக பணியாற்றுகிறார், வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என போராடுகிறார், அதேபோல் கௌதமி, கல்லூரி மாணவர் அபிராம், பள்ளி மாணவி மஹிதா ஆகியோர் அவர்கள் வாழ்க்கையில் எது முக்கியமோ அதை நோக்கி பயணிக்கின்றனர்.
இந்த 4 பேரையும் ஒரே ஒரு விஷயம் ஒன்றிணைத்து இவர்கள் வாழ்க்கையை திருப்பி போடுகின்றது, அந்த விஷயம் என்ன, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மோகன் லால் எல்லோருக்குமே தெரியும், அவர் ஒரு கம்ப்ளீட் ஆக்டர் என்று, இந்த படத்திலும் தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்.
கௌதமியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்தாலும், சிறப்பாகவே நடித்துள்ளார், அதிலும் குடும்பத்தலைவியாக இவர் பல பெண்களின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வருகிறார்.
இந்த படத்தின் கதை மிகவும் எளிது தான், ஆனால் சந்திரசேகர் தன் திரைக்கதை மூலம் இதற்கு பலம் சேர்த்துள்ளார், 4 கதாபாத்திரங்களை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வரும் காட்சிகள் சூப்பர்.
மகேஷ் சங்கர் இசை மென்மையாக இருக்கின்றது, ஆனால் ஒளிப்பதிவு ஏதோ நாடகம் பார்ப்பது போலான மனநிலையை கொடுத்துவிடுகின்றது.

க்ளாப்ஸ்

மோகன் லால், கௌதமியின் யதார்த்த நடிப்பு, மஹிதி, அபிராமும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

பல்ப்ஸ்

மிகவும் மெதுவாக நகரும் காட்சியமைப்புக்கள், கமர்ஷியல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
மொத்தத்தில் இந்த பயணத்தில் நாமும் பங்கேற்கலாம்.

ரேட்டிங்- 2.75/5   நன்றி  cineulagam 


இறைவனாய் வாழுகின்றார் ---- எம் . ஜெயராமசர்மா அவுஸ்த்திரேலியா ]

.
    தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா
    எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா
    அப்பாவி போலவவர் அயலார்க்குத் தோற்றிடினும்
    அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் !

    ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா
    அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்
     பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா
     பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் !

     ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா
     அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா
     வீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா
     விருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை !