டொமினிக் ஜீவா எனும் ஈழத்து இலக்கிய வரலாறு - ஏலையா க.முருகதாசன்

.

ஈழத்து இலக்கியம் பற்றி பேசுபவர்கள் திரு.டொமினிக் ஜீவாவை பற்றிப் பேசாமல்  கடந்து போகவே முடியாது.
திரு.டொமினிக் ஜீவா தனது 88வது வயதை நிறைவு செய்துள்ளார். தனது பிறந்த நாளன்று இன்னொரு இலக்கிய கர்த்தாவான திரு. மாத்தளை சோமுää மல்லிகைத் தோட்டக்காரனின் வீடு சென்று வாழ்த்தியிருக்கின்றார்.
மகாஜனக் கலு;லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மாணவர் மன்றத்தின் அழைப்பை ஏற்று  திரு.டொமினிக் ஜீவா உரையாற்ற வந்திருந்தார். 

அன்றைய தினத்திலிருந்து அவரின் இலக்கியச் செயல்பாடுகள் பற்றி அறிந்து கொண்ட நான், யாழ்ப்பாணத்திற்குப் போகும் போதெல்லாம் பூபாலசிங்கம் புத்தகசாலையில் மல்லிகை சஞ்சிகையை வாங்கத் தவறுவதில்லை. வண்ண அட்டைகளைத் தாங்கிய இந்திய சஞ்சிகைகளுக்கு நடுவில் எந்தவொரு வண்ண அட்டையும் இல்லாமல் மல்லிகை மனம் வீசிக் கொண்டிருக்கும்.
எனது அயலவரும் வீரகேசரி,தினக்குரல் முன்னாள் ஆசிரியருமான திரு.ஆ. சிவநேசச்செல்வன் தண்ணீரும் கண்ணீரும் என்ற சிறுகதைத் தொகுப்பைத் தந்தார். அது திரு.டொமினிக் ஜீவாவின் கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பாகும்.

அக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை - -சுருதி -

.

அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.
ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.
மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி.
உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள் ஒருவாறு தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.
நான் மனைவியிடம் ரெலிபோனைக் கொடுத்துவிட்டு, அவளருகில் விடுப்புப் பார்க்க நின்றேன்.
மனைவி …’ என்று வாய் பிளந்தாரே தவிர ஒன்றும் கதைக்கவில்லை. குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது. நான் ஒட்டுக் கேட்பதற்காக மனைவியின் காதருகே சென்றேன்.

ஒரு நிமிஷம் பொறுங்கோ. போங்கோ அங்காலைஎன்னைத் தோட்டப்பக்கமாகக் கலைத்தாள் மனைவி. சரிபிறகு சொல்லத்தானே வேண்டும். நான் அங்கிருந்தபடியே கண்ணாடிக்குள்ளால் மனைவியைப் பார்த்தேன். மனைவியின் முகம் பேயறைந்தது போல இறுகிக் கிடந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கதைத்தால் அவளும் அழுதுவிடுவாள் போல இருந்தது.

மாணிக்கவாசகர் குருபூசை 08 07 2016

.












மலர்ந்துவிடச் செய்துநிற்போம் ! - எம் . ஜெயராமசர்மா... மெல்பேண் ..

.

                 கடவுளில் காதல்  கொள்ளு 
                 கல்வியில் காதல்  கொள்ளு
                 கடமையில் காதல் கொள்ளு 
                 காதலில் காதல்   கொள்ளு
                 இடர்தரும் விதத்தில் காதல்
                 எற்படும் பொழுது ஆங்கே 
                 குறையுனை வந்தே சேரும்
                 குழப்பத்தில் இருப்பாய் நாளும் !

                 ஒருதலைக் காதல் செய்தால்
                 உளமெலாம் வருத்தம் சேரும்
                 நிலவதைப் பார்க்கும் போதும்
                 நெருபென நினைக்கத் தோன்றும்
                 அளவிலா துன்பம் அங்கே 
                 அகத்தினை உடைத்தே நிற்கும்
                  ஒருதலைக் காதல் என்றும்
                 உயிருக்கே ஊறாய் நிற்கும் ! 

சைவ மன்றம் நடாத்தும் சைவசமய அறிவுத் திறன் தேர்வு - 2016

.

http://www.sydneymurugan.org.au/murugan2/index.php/downloads/publications/category/5-model-questions-and-answers


http://www.sydneymurugan.org.au/murugan2/index.php/component/acymailing/archive/view/listid-1-mailing-list/mailid-231-saiva-skills-assessment-2016?Itemid=106



கரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடு

.

கிளிநொச்சி திருநகர் இளையதம்பி நடராசாவின் கரைசேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடும், அவரது வாழ்கை குறிப்புகள் ஆவணப்படத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை பிறபகல் நான்கு மணிக்கு கரைச்சி பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மூத்த எழுத்தாளரான இளையதம்பி நடராசா அவர்கள் ஓய்வு எனும் சிறுகதை தொகுதியை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். தற்போது கரைசேரா படகுகள் அவரது இரண்டாவது சிறுகதை தொகுதியாகும்.

கரைச்சி பிரதேச செயலக கலாச்சார பேரவையின் வெளியிடாக இது அமைந்துள்ளது. அத்தோடு மூத்த கலைஞர் என்ற வகையில் அவரை மதிப்பளிக்கும் நோக்குடன் அவரது வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய ஆவணப்படம் இறுவெட்டும் வெளியிடப்பட்டது.
.
அவுஸ்திரரேலிய மெல்பேண் தமிழ்ச் சமூக வானொலிவானமுதம் “தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு அகவு பத்து.


அவுஸ்திரேலியா மெல்பேணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் (Whittlesea Tamil Association) ஆரம்பிக்கப்பட்ட சமூக வானொலியான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது பத்தாண்டுச் சேவையைப் பூர்த்தி செய்து பதினோராவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பண்பலை வரிசை PVFM 88.6 ஊடாகத் தனது கன்னி ஒலிபரப்பினை வானலையில் தவழவிட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாகச் சிறுவர் முதல் பெரியோர்வரை அனைவரையும் கவரும் வண்ணம் சகல நிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டு வருகின்றது என்பது வானமுதத்தின் ஒரு சிறப்பாகும். ஆரம்பத்தில் ஒரு மணித்தியாலமாக ஆரம்பித்த ஒலிபரப்புச் சேவை தற்பொழுது நான்கு மணித்தியாலங்களாக ஒலிபரப்பினை விஸ்தரித்துள்ளைமை அதன் வளர்ச்சிக்கு சான்று பகிர்கின்றது.

உலகச் செய்திகள்


பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல் : 75 பேர் பலி (Video)

இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது

ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து பலூஜா நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவிப்பு 

 'பிறிக்ஸிட்' விவகாரம் ; உலகின் மிகப் பெரிய 400 செல்வந்தர்கள் 100 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் இழப்பு


எத்தனை காலமும் ஏமாற்றலாம்!- சுப.வீரபாண்டியன்

.

ராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும் என்று 2014 பெப்ரவரி 19ம் திகதியன்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தார், அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.
இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான்.
பிறகு ஏன் இந்த மாற்றம்? மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? இந்தப் பச்சை இரட்டை வேடத்தை எவரும் கண்டிக்கவில்லையே ஏன்? இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன.

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்:-

.

இலங்கை மத்திய வங்கியின் 14ம் ஆளுனராக கலாநிதி இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்காக இந்திரஜித்தை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் திகதி பிறந்த கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஒர் பொருளிளியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற கலாநிதி இந்திரஜித், இங்கிலாந்தின் ஹாரோவ் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த கலாநிதி இந்திரஜித், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்.

மாணிக்கவாசகர் குருபூசை

.











முழுவதையும் காண கீழே செல்லுங்கள்


தமிழ் சினிமா - அப்பா





அப்பா ( வீடியோ உள்ளே ) - Cineulagam

தமிழ் சினிமாவில் அவ்வப்போதுதான் குழந்தைகளுக்கான படங்கள் வருகின்றது. அதுவும் குறிப்பாக சமீபகாலமாக பேய் படங்களின் வரிசையில் இருந்து கொஞ்சம் இடைவேளை விட்டு இந்த வாரம் குழந்தைகள் ஸ்பெஷலாக அப்பா படம் வந்துள்ளது.
எதையோ நோக்கி ஓடும் மிஷின் வாழ்க்கையை பெற்றோர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகள் LKG சேரும் போதே அவர்கள் தலையிலும் ப்ரஷரை ஏற்றிவிடுகிறார்கள், இதனால் ஏற்படும் விளைவை சமுத்திரக்கனி சாட்டை எடுத்து விலாசியுள்ளார்.

கதைக்களம்

ஒவ்வொரு அப்பாவிற்கும் தன்னுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் இருக்கும். அப்படிப்பட்ட மூன்று அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதை சமுத்திரக்கனி தன்னுடைய பாணியிலேயே வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் தான் இந்த அப்பா.

படத்தை பற்றிய அலசல்

பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் என்றாலே சற்று எதிர்பார்ப்பும், உணர்ச்சி பூர்வமான வசனங்களும் இருக்கும். அதேபோல் இந்த படத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்திருக்கிறார் சமுத்திரக்கனி.
தன்னுடைய மகனிற்கு படிப்பு மட்டும் முன்னேற்றமல்ல இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஒரு நல்ல அப்பாவாக சமுத்திரக்கனி வருகிறார்.
தம்பி ராமையா சாட்டை படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இந்த படத்திலும் ஒரு சுயநலமான மனிதராக நடித்திருக்கிறார். இந்த உலகம் சுயநலமிக்கது இதில் நீயும் சுயநலமாகத்தான் இருக்க வேண்டும் என்று தன் மகனிற்கு சொல்லிக் கொடுக்கும் போதும் ரசிக்க வைக்கிறார்.
என்ன நடந்தால் என்ன நாம இருக்கிற இடம் தெரியக்கூடாது என்று தன்னுடைய பிள்ளையை வளர்க்கும் ஒரு அப்பாவி அப்பாவாக வரும்நமோ நாராயணன்
மேலும் சமுத்திரகனியின் மகனாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ். இந்த படத்திலும் ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய சந்தேகங்களை கேட்கும் போதும் அதை சமுத்திரகனி அவருக்கு புரிய வைக்கும் இடத்திலும் ஒரு நல்ல அப்பா மகன் உறவு திரையில் தெரிகிறது.
தம்பி ராமையாவின் மகனாக நடித்திருக்கும் ராகவ் ஒரு பயந்த சுபாவம் கொண்டவராகவும், தன்னுடைய அப்பாவின் புல்லெட் சத்தத்தை கேட்டு பயந்து ஓடும் போதும் ரசிக்க வைக்கின்றார்.
இதை தவிர நமோ நாராயனணின் மகனாக வரும் நாசத் மற்றும் யுவலக்ஷ்மி, கேப்ரியல்லா, திலிப்பன், வினோதினி அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு பொருந்தி நடித்துள்ளனர்.
படத்தின் காட்சியமைப்புகளுக்கு தனியாக எழுந்து நின்று பாராட்ட வேண்டும், அதிலும் சமுத்திரக்கனி தன் மகன் ஒரு பெண்ணின் மீது ஆசைக்கொண்டாலும், இந்த வயதில் இதை எப்படி அணுக வேண்டும் என்று விவரிக்கும் இடம், நமக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைக்கும் காட்சிகள்.
இளையராஜாவின் இசை எப்போதும் இதுப்போன்ற படங்களுக்கு உயிராக இருக்கும், நம்மையும் அதோடு பயணிக்க வைக்கும், இதில் கொஞ்சம் பயணம் பாதியிலேயே நின்ற அனுபவம்.
ரிச்சர்டு M நாதனின் ஒளிப்பதிவும் படத்தின் பட்ஜெட் காரணமா? அல்லது மிகவும் யதார்த்தமாக எடுக்கவேண்டும் என்ற நோக்கமா? என்று தெரியவில்லை. கொஞ்சம் மங்கியே காணப்படுகின்றது.

க்ளாப்ஸ்

பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிபேசும் போதும், தன் மகனிடம் அவனை ஊக்கப்படுத்த பேசும் வசனங்களின் போதும் கைதட்டல்கள் பறக்கிறது.
தம்பி ராமையாவின் யதார்த்தமான நகைச்சுவை கலந்த நடிப்பு படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறது.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் சம்பவங்கள் ரசிகர்களை சற்று யோசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பட்ஜெட் காரணமாக ஏதோ குறும்பட சாயல் போலவே உள்ளது, மற்றபடி ஏதுமில்லை.
மொத்தத்தில் அப்பா அனைத்து அப்பாக்களும் தங்கள் பிள்ளைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்- 3.25/5   நன்றி  cineulagam 


மரண அறிவித்தல்

.
                                                 சிவஜெயந்தா நித்தியானந்தன்



உரும்பராய், கோப்பாய் வீதியை (ஞானவைரவர் கோவிலடி)ப் பிறப்பிடமாகவும் மார்க்கம் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  அவர்கள் இருதய வருத்தம் காரணமாக இன்று 25.06.2016 ம் திகதி கனடாவில் இறையடியேகினார்.
அன்னார் உயரப்புலம் ஆனைக்போட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற உரும்பராய் சிவலிங்கம் சிவகங்கை தம்பதியினரின் மூத்த மகளும் ,காலஞ்சென்ற உயரப்புலம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும் சியான், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற சிவபாலன், சிவகுமாரன்(London, England) சிவஜெனனி கனடா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தவமதி( லண்டன்)பாலகிருஸ்ணன்; (கனடா) விவேகானந்தன்(France), அமரர் சச்சிதானந்தன், சத்தியா (அவுஸ்திரேலியா) நித்தியா (அவுஸ்திரேலியா), சதானந்தன் (France) ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் பூதவுடன் 8911 Woodbine Avenue, Markham ல் Chapel Ridge Funeral Home ல் 28.06. 2016 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 9.00 மணிவரையும், 29.06.2016 ம் திகதி புதன் கிழமை காலை 8.00 மணிமுதல் 9.00மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு 29.06.2016 புதன்கிழமை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று Highland Hills Crematorium ல் 12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவுகள் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்: நித்தியானந்தன் கணவர்: 905 554 2359
பாலகிருஸ்ணன் 416 885 8397
சிவகுமாரன் லண்டன் 011 44 7748 461376

கடலோரக் கவிதை

.

மாலை நேரக் காற்று
இளம் பெண்கள் கூந்தலை வருடிச் செல்ல,
ஆதவனோ தன்நாள் வேலை முடிவென
கடலுக்குள் மறைந்து செல்ல,

கடல் அலைகளோ தம் உறவில்
நிலைகொண்டு பொங்கிப் புரண்டு வர,
அவ் வலைகளின் அசைவிலே
சதக் பதக் என ஓர்
இசை மீட்டன கடற் தோணிகள்,

சிட்னி தமிழ் அறிவகத்தின் கொடி நாள் விழா

.


திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி - ஆத்மாவை பிரதிபலித்த பொன்மணி.

.
நான்கு  தசாப்தங்களுக்கு  முன்னர்  பாதையில்  எத்தனை ராதைகள்  பேதைகள்
ஈழத்து   வடமாகாணத்தின்  ஆத்மாவை   பிரதிபலித்த பொன்மணி.
   
                                                   
கனவு  காணும்  வாழ்க்கை  யாவும்  கலைந்துபோகும்  மேகங்கள் எனச்சொல்லப்பட்டிருக்கிறது.  தற்பொழுது  அவுஸ்திரேலியாவில் குளிர்காலம்.  இக்காலத்தில்  இரவில்  மட்டுமல்ல  பகலில் உறங்கினாலும்   கனவுகள்  சம்பந்தம்  சம்பந்தம்  இல்லாது வந்துகொண்டிருக்கிறது.
அண்மையில் வந்த  கனவில்  யாழ்ப்பாணத்தில் பண்ணைப்பாலமும்  கஷ_நோரா  பீச்சும்,  காவலூர்  அந்தோனியார் கோயிலும்   வந்தன.   இங்குதான்  பொன்மணி  படத்திற்காக இந்த இந்தக்காட்சிகள்  எடுக்கப்பட்டன  என்று  சொல்கிறார்  நண்பர் காவலூர் ராஜதுரை.   (அவர்   சிட்னியில்  மறைந்து  எதிர்வரும் ஒக்டோபர்  மாதத்துடன்  இரண்டு  வருடங்களாகப்போகிறது)