திரை படங்களில் கதாநாயகி துன்பத்தில் துடிப்பாள் , கஷ்டங்களை அனுபவிப்பாள் , இறுதியில் சில படங்களில் உயிரையும் இழப்பாள் . ஆனால் படத்திலும் உயிரை இழந்து படம் வெளிவரும் முன் தன் உயிரையும் இழந்த ஒரே கதாநாயகி , நடிகை ராணிசந்திரா! அவர் நடித்த அந்த படம் பத்ரகாளி .
தமிழ் சினிமாவில் பிரபல டைரக்டராக திகழ்ந்தவர் ஏ .சி . திருலோகசந்தர். இவர் இயக்கத்தில் உருவான நானும் ஒரு பெண், ராமு, அன்பே வா, இரு மலர்கள் , எங்கிருந்தோ வந்தாள் , தெய்வமகன் போன்ற படங்களின் வெற்றியால் இவர் அங்கீகரிக்கப்பட்ட இயக்குனராக வலம் வந்தார். 70ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் படத் தயாரிப்பாளராகவும் இவர் உருவெடுத்தார்.
சினிபாரத் என்ற தனது பட நிறுவனத்தால் சிவாஜி நடிப்பில் இவர்
எடுத்த பாபு, பாரதவிலாஸ் இரண்டும் வெற்றி கண்டன. ஆனால் அடுத்து எடுத்த டாக்டர் சிவா பொருளாதார ரீதியில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிறிய பஜெட்டில் ஒரு படத்தை எடுக்கத் தீர்மானித்த திருலோக் சிவாஜியை தவிர்த்து சிவாவை அதாவது சிவகுமாரை படத்துக்கு ஹீரோவாக்கினார் .

மூன்று மாதங்களில் படத்தை முடித்து திரையிட வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த திருலோக்குக்கு இடி விழுந்தாற் போல் விமான விபத்தில் ராணிசந்திரா இறந்து விட்டார் என்ற செய்தி வந்து சேர்ந்தது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்று பம்பாய் திரும்பியவர் அங்கிருந்து சென்னை திரும்பும் விமானம் விபத்துக்குள்ளானதால் உடல் கருகி தன் தாய், மூன்று சகோதரிகளுடன் பலியாகி விட்டார்.
படத்தின் இறுதிக் காட்சி உட்பட சில காட்சிகள் படமாக்கப் பட வேண்டியிருந்த கட்டத்தில் ராணிசந்திரா மறைந்தது படத்தை அப்படியே முடக்கியது. நிதிப் பிரச்னைகளில் இருந்து மீள எடுக்கப் பட்ட படம் மேலும் சிக்கலில் மாட்டி விட்டதே என்று திருலோக் கலங்கினார். ஆனால் சிவகுமார் மூலம் பிரச்னைக்கு தீர்வு கிட்டியது. அவருடன் பட்டிக்காட்டு ராஜா படத்தில் டான்ஸ் காட்சியில் நடித்த புஷ்பா என்பவர் ராணிசந்திரா போன்ற முக ஜாடையில் இருக்கவே அவரை நடிக்க வைத்து படத்தை எடுத்து முடித்தார்கள். படத்தில் இறுதியில் சிவகுமார் மடியில் கதாநாயகி உயிர் துறக்கும் காட்சியில் புஷ்பா நடித்து படத்துக்கு உயிர் கொடுத்தார். ராணிசந்திரா , புஷ்பா இருவருக்குமான சேர்த்து சௌந்திரம் என்பவர் குரல் கொடுத்தார்.
படத்தில் ராணிசந்திராவின் நடிப்பு பாத்திரத்துடன் நன்கு பொருந்தியது. சுஜாதா நடிதித்திருக்கக் கூடிய வேடத்தில் ராணிசந்திரா கவரும் வண்ணம் நடித்திருந்தார். ஆசை, காதல், பயம், சோகம், கோபம், எல்லாம் கலந்த பரிணாமமாக அவர் நடிப்பு மிளிர்ந்தது. சிவகுமார் மிகை இல்லாமல் நடித்திருந்தார். மேஜர் சுந்தராஜன் குருக்கள் வேடத்தில் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தினார் . தேங்காய் சீனிவாசன், மனோரமா, சுருளிராஜன் , உசிலைமணி ஆகியோர் காமெடியை பார்த்துக் கொண்டார்கள். இவர்களுடன் சுகுமாரி, பவானி, ஜெயசந்திரன், வீரராகவன், ஆகியோரும் நடித்தனர்.
அப்பாவித்தனமும் , பயந்த சுபாவமும் கொண்ட காயத்ரி
கணேஷுக்கு வாழ்க்கை படுகிறாள். குழந்தையும் பிறக்கிறது. பொருளாதார சுமையை பகிர்ந்து கொள்ள உத்தியோகத்துக்கு கணவன் அனுமதியுடன் போகிறாள். ஆனால் திரும்பி வரும் போது சித்த சுவாதீனம் அற்ற நிலையில் வருகிறாள். அவளின் இந்த நிலைக்கு காரணம் தெரியாமல் குடும்பம் திணறுகிறது. இதனிடையேயே அவளின் புத்தி மாறாட்டத்தினால் தன் ஒரே மகளையும் பறி கொடுத்து விடுகிறாள். இதனைத் தொடர்ந்து கணேஷ் அவளை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் காயத்ரிக்கு சித்தம் சீராகிறது . ஆனால் தன்னுடைய அவல நிலைக்கு காரணமான கத்தப்பனை பழி வாங்க துடிக்கிறாள். அவளுள் பத்ரகாளி குடி புகுந்து விட்டதாக நம்புகிறாள்.

படத்தின் கதையை பிரபல நாவலாசிரியர் மகரிஷி எழுதினார். பக்தி, சமூக பின்னணி, அனுமானுஷ்யம் எல்லாம் கலந்த கதையாக இந்த நாவலை அவர் எழுதியிருந்தார். அதுவே பின்னர் படமானது. வசனங்களை ஆரூர்தாஸ் எழுதினார். படத்தின் கதாபாத்திரங்கள் பிராமண பின்புலத்தை கொண்டு அமைக்கப் பட்டிருந்தன. அவற்றுக்கு கிறிஸ்துவரான ஆரூர்தாஸ் சிறப்பாக வசனம் எழுதியிருந்தார்.
தனது சொந்தப் படங்களுக்கு பாடல் எழுத திருலோக்
கண்ணதாசனை பயன் படுத்துவதில்லை. இந்தப் படத்துக்கும் வாலி பாடல்களை எழுதினார். திருலோக் படம் என்றால் எம் எஸ் விஸ்வநாதன் தான் இசை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம். ஆனால் இந்தப் படத்துக்கு புதிதாக இசையமைக்கத் தொடங்கிய இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் திருலோக். பெரிய இயக்குனர்களில் எம் எஸ் வியை விட்டு இளையராஜாவிடம் சென்ற முதல் இயக்குனர் திருலோக்த்தான்! குறைந்த பஜெட் படம் என்பதும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இசையை இளையராஜா குறைந்த பஜட்டாக கொடுக்கவில்லை. கண்ணன் ஒரு கை குழந்தை, கேட்டேளா அங்கே அதை பார்த்தேளா இங்கே, ஒத்த ரூபா உனக்கு தாரேன் மூன்று பாடல்களும் ஹிட்டடித்தன.

படத்தின் ஒளிப்பதிவு எம் . விஸ்வநாதராய். ஒரு நடிகையை இரட்டை
வேடங்களில் காட்டுவது திறமை என்றால் , ஒரு நடிகைக்கு பதில் இன்னொருவரை நடிக வைப்பதும் சாமர்த்தியம் தான். அதனை திறமையாக கையாண்டிருந்தார்.
வேடங்களில் காட்டுவது திறமை என்றால் , ஒரு நடிகைக்கு பதில் இன்னொருவரை நடிக வைப்பதும் சாமர்த்தியம் தான். அதனை திறமையாக கையாண்டிருந்தார்.
பத்திரகாளி வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடியது. திருலோகசந்தர், சிவகுமார், இளையராஜா எல்லோருக்கும் வெற்றி படமானது. ஆனால் திரை நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டிய ராணிசந்திரா மட்டும் வானில் ஏரி நட்சத்திரமாகி விட்டார்!
.png)
.jpeg)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment