ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (இணை)

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்

ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆதரவில், ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம், எதிர்வரும் ஆடி மாதம் 26ஆம் திகதி (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணிவரையில்,  ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய பீக்கொக் மண்டபத்தில் (Peacock Room, Shri Shiva Vishnu Temple, 52 Boundary Road, Carrum Downs, Vic 3201) நடைபெறும்.

சங்கத்தின் தலைவர் திரு ஜெயராமசர்மா அவர்களின் தலைமையில் -
திரு ஜெயக்குமரன், திருமதி சாந்தினி புவனேந்திரராஜா, திரு ஜூட் பிரகாஷ் என்பவர்கள் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் பற்றிப் பேசுவார்கள்.

 948 பக்கங்களில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழில் 50 கட்டுரைகள், 75 சிறுகதைகள், 126 கவிதைகள், 2 நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


அன்புடன்,

ஸ்ரீநந்தகுமார்
(செயலாளர்)
                                                     
செயலாளர்                                                      தலைவர்                                     பொருளாளர்
ஸ்ரீநந்தகுமார்                                        ம.ஜெயராமசர்மா                          ந.அல்லமதேவன்

(03)98013282 / 0415405361                          0431200870                                             0413528342 

No comments: