பக்க வாத்தியம் வாசித்து
எக்காலும் பழக்கமில்லைஇரும்பைப் பொருளாக்க
இரும்பால்தான் அடிப்பார்
பட்டறையின் அடைகல்லில்
பழுத்த இரும்பும் காத்திருக்க
அதை அடிக்கும் சம்மட்டியும்
இரும்பென்று அறிந்திலரோ
சங்கறுப்பது எங்கள் குலம்
சங்கரனுக்கு ஏது குலமென்றான்
சங்கறுக்கும் நக்கீரன் சிவனிடமே
தமிழ்காக்க எதிர்த்து நின்றான்
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்
முதுமொழியும் வழிசொல்லி நிற்கும்
காலில் முள்தைத்தால் அதனை
கூரானமுள் கொண்டே அகற்றிடுவர்
தமிழின் சுவையறிய வேண்டுமெனில்
தமிழ்கொண்டே சுவைக்கவேண்டும்
சுவையறிய விரும்பி நிற்போர்
தமிழ் கற்றால் மட்டும் அதுகிட்டும்
பழச்சாற்றின் சுவை உணரவேண்டின்
அதை உறிஞ்சிப் பருக வேண்டும்
நாவைத் தொடாமல் வாயில் ஊற்ற
அதுவொன்றும் கசப்புக் கசாயமன்று
வாய்ப்பொன்று வாசற் கதவைத் தட்ட
தாய்த்தமிழை கற்கத் தயங்குவதேன்
சிவப்புக் கம்பளத்தில் நடக்க நேரம்வந்தும்
வேற்றான் முதுகில் ஏறிக் கொள்வதுமேன்
வேற்று மொழியினரே தமிழ் விரும்பி
தமிழ்கற்று தமிழின் சுவையறியும்போது
மாற்றும்மொழியால் ஏற்புடைய தமிழறிய
நீவிர் வேற்றுமொழியினரா தமிழர்காள்!
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment