ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை வேறு மொழியில் படமாக்குவது திரையுலகில் வாடிக்கை. ஆனால் ஹிந்தியில் வெளி வந்து படு தோல்வியடைந்த ஒரு படத்தை தமிழில் தயாரித்து வெற்றி காண்பது என்பது ஒரு சாதனை. அதனை செய்தவர்கள் ஏவி எம் புரொடக்சன்ஸார். அவ்வாறு உருவான படம் ராமு.
பிரபல ஹிந்தி பாடகர் கிஷோர்குமார் கதை எழுதி, தயாரித்து , இயக்கி , நடித்து தோல்வி கண்ட படமான "தூர் ககன் கி சாஓன் மெய்ன் படத்தையே ஏவி எம் நிறுவனம் தமிழில் எடுத்தனர். வாய் பேச முடியாத ஒரு சிறுவனின் கதை தான் இப் படம். இதனை ஹிந்தி ரசிகர்கள் நிராகரித்து விட்டார்கள். ஆனால் இப் படத்தை பார்த்த ஏவி, எம் சரவணனும் அவரின் சகோதரர்களும் இதனை தமிழில் எடுத்தால் வெற்றி பெரும் என்று நம்பினார்கள். இது பற்றி இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர் , கதாசிரியர் ஜாவர் சீதாராமன் ஆகியோரிடம் கூறிய போது அவர்கள் தட்டிக் கழித்து விட்டார்கள். ஆனாலும் நம்பிக்கை இழக்காத சரவணன் கதாசிரியர் ஜாவரிடம், படத்தில் சிறுவன் ஊமை என்று காட்டுவதோடு நின்று விடாது அவன் ஏன் ஊமையானான் என்று காட்டி திரைக் கதை அமைத்தால் கதை மெருகேறி விடும் என்று ஐடியா கொடுக்க ஜாவர் தன் கற்பனை ஜாலத்தை காட்டி விட்டார்.
படம் உருவாவது நிச்சயம் என்றவுடன் அதில் ஹீரோவாக நடிக்க
தேர்வானார் ஜெய்சங்கர். ஆனால் அவருக்கு வில்லனானார் ஜெமினி. 1966ம் ஆண்டளவில் ஜெமினியின் மார்க்கெட் சற்று மந்த கதியில் இருந்தது. உடனடி வெற்றி ஒன்றை அவர் எதிர்பார்த்திருந்தார். ஏவி எம் ராமு படத்தை தயாரிக்கிறார்கள் என்றவுடன் சற்றும் தாங்காமல் நேரில் சென்று ஏவி எம் செட்டியாரை சந்தித்தார் அவர்.

ராமு படத்தில் கதாநாயகனாக நடிக்க விரும்புவதாக அவர் விடுத்த கோரிகையை ஏவி எம் மினால் தட்ட முடியவில்லை. இதனால் ஜெய்சங்கருக்குப் பதில் ஜெமினி ஹீரோவானார். ஜெய்யைப் பொருத்த்க்க வரை ஏவி எம்மில் அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது அனுபவம் இது. ஆரம்பத்தில் அன்பே வா படத்தில் ஹீரோவாக நடிக்க தெரிவாகி. பின்னர் அதில் எம் ஜி ஆர் நடித்தார். இம் முறை ஜெமினி ராமு பட வாய்ப்பை தட்டிப் பறித்து கொண்டார்.
படத்தில் ஹீரோவாக நடிக்க ஜெமினிக்கு பதின்னையாயிரம் ரூபாய் ஊதியமாக பேசப் பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட ஜெமினி சாமர்த்தியமாக ஒரு காரியம் செய்தார். தன்னுடைய பணமான பதின்னையாயிரம் ரூபாயை ஏவி எம்மிடம் கொடுத்து முப்பதினாயிரம் ரூபாய்க்கு ஒரு காசோலையை பெற்றுக் கொண்டார். அந்த காசோலையை தன்னை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளர்களிடம் காட்டி ஏவி எம் படத்தில் நடிக்க தன்னுடைய ரேட் முப்பதினாயிரம் என்று சாதித்துக் கொண்டார். இதனால் மற்றைய படங்களில் நடிக்க அவரின் ரேட் முப்பதாயிரமாக கூடியது. அது மட்டுமன்றி ஏவி எம் படத்தில் நடிக்கிறார் என்றவுடன் மேலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு மள மளவென்று அவரைத் தேடி வந்தது!
காதல் மன்னன் என்று அறியப்பட்ட ஜெமினிக்கு படத்தில் காதலை
நிராகரிக்கும் பாத்திரமே கிடைத்தது. தன்னுடைய ஊமை மகனுக்காகவே வாழும் அன்புத் தந்தையாகவே காட்சியளித்தார் . அன்பு, பாசம், கருணை, வீரம் என்று எல்லாம் கலந்த பாத்திரம் . அதனை பாராட்டும் படி செய்திருந்தார். சில காட்சிகளில் அவரின் நடிப்பு மனதை உருக்கியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே பாடலும் அதில் ஜெமினியின் நடிப்பும் பிரமாதம். அதே போல் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் பாடலும் நெஞ்சை உலுக்கியது.

படத்தில் அவருக்கு இரண்டு கதாநாயகிகள் . ஒரு சில காட்சிகளில்
மட்டும் புஷ்பலதா தோன்ற படம் முழுவதும் பயணிக்கிறார் கே. ஆர். விஜயா. ராமுவிடம் அன்பை காட்டி உருகுகிறார், அவனின் தந்தையிடம் காதலுக்காக ஏங்குகிறார். காதலை வெளிப்படுத்தும் விதத்தில் அவர் நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட பாடலை பாடும் போது , கதாநாயகன் நிலவே என்னிடம் நெருங்காதே என்று பாடி காதலை மறுக்கும் காட்சி டைரக்டருக்கு சபாஷ் போட செய்கிறது.

படத்தில் வி . கே. ராமசாமி, அசோகன், ஓ. ஏ. கே. தேவர் என்று மூன்று வில்லன்கள். இந்தப் படத்தில் இருந்து தான் அசோகன் கோமாளி வில்லனாக நடிக்கத் தொடங்கினார். படம் முழுவதும் அசடாக , கோமாளியாக வருபவர் இறுதி சண்டைக் காட்சியில் ஜெமினியுடன் பலமாக மோதுகிறார். எம் ஜி ஆரின் ஸ்டண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் படத்தின் சண்டைக் காட்சிகளை நெறிப்படுத்தினார். வில்லன்களுக்கு நடுவே ஒரு நல்லவர் அவர்தான் நாகேஷ். இறுதி வரை அவரால் வில்லன்களை திருத்த முடியாமல் போனது சோகம் .
எஸ் . வி . சுப்பையா சில காட்சிகளில் வந்து கவனம் பெறுகிறார். ஓ
. ஏ. கே . தேவர் தீவட்டி கொள்ளைக்காரனாக வந்து ஆர்ப்பரிக்கிறார். இவர்களுடன் எஸ் . என். லஷ்மி, டி . எஸ். முத்தையா, எஸ். வி. ராமதாஸ், கரிக்கோல் ராஜு, வி. நாகையா ஆகியோரும் நடித்தனர். ஆனாலும் ராமுவாக வரும் மாஸ்டர் ராஜ்குமாரின் நடிப்புதான் மனதை தொட்டது. படம் முவதும் வாய் பேச முடியாதவனாக வந்து மனதை தொடுகிறார்.

படத்துக்கு ஜாவர் சீதாராமனின் திரைக் கதை வசனம் படத்தின் ப்ளஸ் பாயிண்ட் என்றால் கண்ணதாசனின் பாடல்களும் , எம் .எஸ் . விஸ்வநாதனின் இசையும் டபுள் பாயிண்ட். டி . எம். எஸ், ஸ்ரீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன், சுசிலா குரல்களில் பாடல்கள் உச்சம் தொட்டன. டி. முத்துசாமி டி. ராஜகோபால் இருவரும் படத்தை ஒளிப்பதிவு செய்தனர் . ஏ.கே. சேகர் அமைத்த ஆர்ப்பாட்டமில்லாத அரங்க அமைப்பு கவர்ந்தது.
ராமு ஏ. சி. திருலோகசந்தர் இயக்கத்தில் உருவாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. அதன் பின் தெலுங்கில் என் டி . ராமராவ் நடிப்பில் தயாராகி அதுவும் வெற்றி கண்டது. குறைந்த பஜெட்டில் உருவாகி முழு வெற்றியை பெற்ற படம் ராமு!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment