தி மு கவில் இருந்து எம் ஜி ஆர் நீக்கப் பட்ட பின் அவருடன் சேர்ந்து
பலர் கழகத்தில் இருந்து விலகி எம் ஜி ஆரின் அண்ணா தி மு கவில் இணைந்தார்கள் . அவர்களில் நாஞ்சில் மனோகரன், கோவை செழியன் போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள். இவர்களில் ஒருவர் படம் தயாரிக்க மற்றுமொருவர் படத்தின் கதை வசனம் எழுத அவர்களின் தலைவர் கதாநாயகனாக நடிக்க 1976ம் வருடம் உருவான படம் உழைக்கும் கரங்கள்.
எம் ஜி ஆர் , கருணாநிதி மோதல் உச்சம் தொட்ட காலத்தில் தயாரான படம் என்பதால் படத்தின் கதை, வசனம், எல்லாமே கருணாநிதியை இலக்கு வைத்தே எழுதப்பட்டிருந்தது. இதனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் படம் திரையிடப்பட்ட போது காட்சிக்கு காட்சி வசனங்கள் அதிர்வை ஏற்படுத்தின.
கிராமத்தின் பெரிய மனிதராகவும் அரசியல் புள்ளியாகவும் திகழும்
நாகலிங்கம் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பது அவரிடம் ஊழியம் செய்யும் ரங்கனுக்கு காலம் கடந்தே தெரிய வருகிறது . ஆனாலும் அவரின் ஊழலை அஞ்சாமல் தட்டிக் கேட்கிறான், அநியாயம் செய்வதை நிறுத்தும் படி எச்சரிக்கிறான் .

அதற்கு பதில் அவன் மீதே ஒழுக்கம் கெட்டவன் என்று பழி சுமத்தி விரட்டி விடுகிறார் நாகலிங்கம் . தெருவுக்கு வரும் ரங்கனுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள் நாட்டிய தாரகை பங்கஜம், அத்தோடு தன் மனதையும் அவனுக்கு கொடுக்கிறாள். ஆனால் ரங்கன் பழம் விற்கும் முத்தம்மாவை காதலிக்கிறான். இதனிடையே ரங்கன், நாகலிங்கம் மோதல் வலுக்கிறது . இறுதியில் ரங்கன் ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றானா என்பதே படத்தின் மீதி!
படத்தின் ஹீரோ எம் ஜி ஆர் ஆரம்பத்தில் அடக்கி வாசிக்கிறார்
அப்பாவியாக வருகிறார், பிறகு பாயும் புலியாகி தீயோரை தீர்த்து காட்டுகிறார். படம் முவதும் அவர் நடிப்பு ரசிக்கும் படி உள்ளது. மான் கொம்பு சண்டையில் தூள் கிளப்புகிறார். காதல் காட்சிகளிலும் கவருகிறார். மொத்தத்தில் எம் ஜி ஆரின் ராஜ்ஜியம் தான்!

புதுமுகம் பவானிக்கு கனமான வேடம். நடனம், நடிப்பு என்று இரண்டிலும் கவருகிறார் பிரபலமாகாமல் போன பவானி . கதாநாயகனை மயக்க முனைந்து சஞ்சலப் படும் பாத்திரம் குமாரி பத்மினிக்கு பொருந்துகிறது. பண்டரிபாய் வழக்கம் போல் சாந்த சொரூபி.
நீண்ட காலத்துக்கு பிறகு கே. ஏ. தங்கவேலுவுக்கு இந்தப் படம் மீள்
வருகையாக அமைந்தது. வில்லன் வேடத்தில் கவரும் படி நடித்திருந்தார் . எம் ஜி ஆரை விட இரண்டு வயது மூத்த தங்கவேலு எம் ஜி ஆருடன் சேர்ந்து சதிலீலாவதி படத்தின் மூலம் தன் திரைப் பிரவேசத்தை ஆரம்பித்தார். இப் படம் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படமானது.

அதே போல் மதுரை வீரன் தொடக்கம் எம் ஜி ஆருடன் அவ்வப்போது நடித்து வந்த கவர்ச்சி வில்லன் கே. கண்ணன் இந்தப் படத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பை எம் ஜி ஆர் வழியாக பெற்றார்.
இடையில் சில காலம் எம் ஜி ஆர் படங்களில் இடம் பெறாமல் போய்
இருந்த நாகேஷ் இதில் இருக்கிறார். அவருடன் தேங்காய் சீனிவாசனும் சேர்ந்து காமெடி பண்ணுகிறார்கள். இவர்களுடன் சி கே சரஸ்வதி, வி எஸ் ராகவன், வி கோபாலகிருஷ்ணன், உசிலைமணி, சண்முகசுந்தரம், கரிக்கோல் ராஜூ ஆகியோரும் நடித்தனர்.

படத்தின் வசனங்கள் நாஞ்சில் மனோகரன். அவருக்கு இது புது முயற்சி . ஆனாலும் அரசியலில் தன்னுடைய இந்த நாள் தலைவருக்கான தன் முன்னாள் தலைவரை தாக்கி தாராளமாக வசனங்களை எழுதி இருந்தார். வசனங்கள் யாரை குறிக்கின்றன என்பதை ரசிகர்கள் அறிந்து வைத்திருந்ததால் கொட்டகையில் அவர்களின் கரகோஷம் அதிர வைத்தது. படத்தில் வாலிக்கு ஒரு பாடல் மட்டுமே எழுத சான்ஸ் கிடைத்தது. மற்றும் படி முத்துலிங்கம் எழுதிய கந்தனுக்கு மாலை இட்டாள் கானகத்து வண்ண மயில் , வாரேன் வழி பார்த்திருப்பேன் , இனிமையாக ஒலித்தது. புலமைப்பித்தன் இயற்றிய நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே பாடல் எழுச்சிப் பாடலாக முரசொலித்தது. எம் .எஸ் .விஸ்வநாதன் இசை படத்துக்கு மெருகு சேர்த்தது.
படப்பிடிப்பு முழுவதும் மைசூர் பகுதியிலேயே படமானது. வெளிப்புற காட்சிகளை வண்ண மயமாக எடுப்பதில் திறமை வாய்ந்த பி. எல் . ராய் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.
எம் ஜி ஆர் படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பை பெற்ற கே. சங்கர் படத்தை தொய்வின்றி இயக்கி இருந்தார்.
படத்தில் ஹய் லைட் எம் ஜி ஆர் ஆடும் சிவ தாண்டவம். தன்னுடைய
ஆரம்ப கால படமான ஸ்ரீமுருகன் படத்தில் சிவ தாண்டவம் ஆடியிருந்தவர் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இதில் மீண்டும் ஆடியிருந்தார்! அது மட்டுமன்றி தி மு கவில் இருந்து பிரிந்து தனிக் கட்சி கண்ட பின் தான் நாஸ்திக கொள்கைகளை கை கழுவி விட்டேன் என்பதை உணர்த்துவதற்கும் இந்த சிவ நடனத்தை எம் ஜி ஆர் பயன் படுத்திக் கொண்டார்.

கண்ணதாசன் மூலம் சினிமாவுக்கு அடி எடுத்து வைத்து சுமைதாங்கி படத்தை அவருடன் சேர்ந்து தயாரித்து, பிறகு சிவாஜி நடிப்பில் ஊட்டி வரை உறவு எடுத்து, பின்னர் எம் ஜி ஆர் நடிப்பில் குமரிக் கோட்டம் தயாரித்து ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் எம் ஜி ஆர் நடிப்பில் உழைக்கும் கரங்கள் படத்தை கோவை செழியன் எடுத்தார்.
இதன் படப்பிடிப்பு மைசூரில் இடம் பெற்ற போது கட்சி தொடர்பான நியமனம் ஒன்றின் காரணமாக எம் ஜி ஆருடன் செழியனுக்கு திடீரென மனஸ்தாபம் ஏற்பட கோபித்துக் கொண்டு அவர் சென்னைக்குத் திரும்பி விட்டார். ஆனால் எம் ஜி ஆர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளாமல் நள்ளிரவு 12 மணி வரை படப்பிடிப்பை நடத்தி கொடுத்தார். மறு நாள் சென்னையில் இருந்த செழியனுக்கு போன் செய்து படத்தின் தயாரிப்பாளர் நீங்கள் , நீங்களே கோபித்துக் கொண்டு போனால் எப்படி படப்பிடிப்பு நடக்கும் மைசூருக்கு வாருங்கள் என்று அவரை சமாதானப் படுத்தி அழைத்தார். அது மட்டுமன்றி நான்கு மாதத்தில் படத்தையும் முடித்துக் கொடுத்து விட்டார் . படமும் வெற்றி படமானது.
தி மு க , அண்ணா தி மு க இரண்டு கட்சிகளின் மோதலின் வெளிப்பாடாக அக் கட்சிகளில் மாறி மாறி சங்கமித்தவர்களால் உருவான உழைக்கும் கரங்கள் எம் ஜி ஆரின் அரசியல் பயணத்துக்கு உரமானது!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment