
நன்றி தினகரன்
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் தாங்கி திங்கட் கிழமைகளில் வெளிவருகிறது. 24/08/2026 - 30/08/ 2026 தமிழ் 17 முரசு 18 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
சமைத்துப்பரிமாறி, பாத்திரம் கழுவித்துடைத்து, வீட்டை கூட்டித் துப்பரவுசெய்து, அவகள் அணிந்து களைந்து போட்டுவிடும் உள்ளாடை முதற்கொண்டு அனைத்தையும் துவைத்து காயப்போட்டு உலரவைத்து, அவகளுக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவற்றை ஸ்திரிபோட்டு அயன்செய்து மடித்துக்கொடுத்து, அவகள் வேலைக்குச்செல்லும்போது, அணியும் சேலையின் கீழ் விளிம்பில் மடிப்பு வராமல் நிமிர்த்திவிட்டு சரிகைக்கும் பிளவுஸுக்கும் ஊசி குத்திவிட்டு, சாப்பாட்டு கெரியரையும், தண்ணீர்போத்தலையும் எடுத்துக்கொடுத்து, கைப்பையையும் கைத்தொலைபேசியையும் நினைவூட்டி வழியனுப்பியதோடு உன்ர வேலை முடியவில்லையே… அந்த ரீச்சரம்மாவுக்கு கால் உளைவு வரும்போதெல்லாம் எண்ணெய் பூசி தடவிவிட்டு, உறங்கவைத்ததுடன் நின்றாயா… அதுவும் இல்லையே… அந்தப்பெட்டைகள் ரெண்டுபேரின் சோகக்கதைகளை கேட்டு ஆறுதலும் சொல்லி, பாட்டும் பாடி அவளுகளை உற்சாகப்படுத்தினாயே… இவ்வளவும் செய்தும் என்னத்தை கண்டாய். அவள் ஜீவிகா, காதலனுடன் சுற்றப்போனவேளைகளில் வீட்டில் கண்விழித்து காவல் இருந்தாயே… உறங்கு… உறங்கு… இப்போது எல்லோரும் அவரவர் பாட்டை பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள்… காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே… என்ர புருஷன், என்ன செய்தார்..? நான் பாரிசவாதம் வந்து படுக்கையில் விழுந்ததும், எனக்கு பணிவிடை செய்யவந்த பெண்களுடன் ஆடிய சரசங்கள் எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்.. இப்போது எனது தினம் வருகிறது. படையல் போடச்சொல்கிறார். ஊரிலிருந்த எனக்குத்தந்த சீதன வீட்டை விற்றுத்தான் இந்த வீட்டை அவர் வாங்கினார். என்னுடைய
Dr.Fajila Azad
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad
dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
‘இதை வைத்துக் கொள்ளுங்கள்’, விரலிலிருந்த முத்திரை மோதிரத்தை மிக இலாவகமாக கழற்றி அந்த அரசர் தன் அருகே நின்ற விறகு வெட்டியிடம் நெகிழ்ச்சியோடு கொடுக்க அவரோ வேண்டாமென்று விடாப் பிடியாக மறுத்துக் கொண்டிருந்தார். அவர் முகம் மகிழ்ச்சியால் மிளிர்ந்து கொண்டிருந்தது.
அந்த விறகு வெட்டிக்கு மட்டுமல்ல உங்களுக்குமே இது போல் மகிழ்வான நிகழ்வுகள் அமையலாம். உங்களால் பிறர் மனதில் முத்திரை பதிக்க முடிந்தால்……
அன்றும் எல்லா வார இறுதி நாட்கள் போல் தான் அரசரும் இளவரசரும் வேட்டைக்கு சென்றார்கள். ஆனால் அன்று தங்களுக்கு போக்கு காட்டிய மானை துரத்திக் கொண்டே வந்தவர்கள் வழி தவறி அடர்ந்த காட்டுக்குள் மாட்டிக் கொண்டார்கள்.
களைப்பும் சலிப்பும் தவிப்புமாக எங்காவது குடிக்க தண்ணீர் கிடைக்காதா, தன் நாட்டிற்கு திரும்பி செல்ல வழி தென்படாதா என சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நடந்தவர்கள் கண்களில் ஒரு விறகு வெட்டி தென்படுகிறார்.
கண்விழித் தாமரை
கனிந்து நோக்கிடும்
என்னுயிர் தாரகை நீ
விண்ணதில் மின்னிடும்
பொன்னொளி காட்டும்
தண்மதி போன்றவள் நீ
வாளெனக் கண் மடல்
வெட்டி மறைத்துதிடும்
விழியினால் கொன்றவள் நீ
பேசிடும் மொழியிலும்
வீசிடும் இலக்கணம்
பொழிப்புரை சொல்பவள் நீ
மானுட வாழ்வில் வென்று நிலைத்திட
வாய்மொழி கொண்டவள் நீ
அடங்கிப் கிடந்தவள்
விழித்து எழுந்திடின்
அகிலம் அதிரும் என்று
செருக்கிடை மேவிய
நிமிர்நடை கொண்டவள்
நேரில் வருகை கண்டேன்
ஆண்மகன் என்றிட்ட
ஆணவம் அழிந்தது
சக்தி என்றே வியந்தேன் .
-
எங்கள் வீட்டில் இருந்து ஒரு ஐந்து நிமிட நடை தொலைவில் வீதியின் முடக்கில் அடுக்கடுக்காக இருக்கும் மூன்று வீடுகளில் இருக்கும் பையன்கள் தான் அவர்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் வீட்டுக்கு வெளியே வந்து பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த அகண்ட பெரிய அந்த வீதியின் ஒரு பாதி அவர்களுக்குச் சில சமயம் உதைபந்தாட்ட மைதானம் போல. வாகனப் போக்குவரத்தும் அதிகம் இல்லாததால் அவர்களின் விளையாட்டுக்கு அது கை கொடுத்தது.
அரை மனதுடன் வீட்டுக்குள் வந்து விட்டேன். ஊரில் என்றால் இப்படி வீதியை மறித்து யார்ட், கிளித்தட்டு என்று எத்தனை விளையாட்டெல்லாம் விளையாடியிருக்கிறம். போன வாரம் கூட ஒரு காணொளியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தான் எங்காவது பயணித்துக் கொண்டிருக்கும் போது ஏதாவது கிராமப்புறத்தில் வழியோரத்தில் கிறிக்கெட் விளையாடும் பையன்களைக் கண்டால் அப்படியே காரை நிறுத்தி விட்டுப் பார்த்துக் கொண்டிருப்பாராம். மனைவி கூடக் கிண்டலடிப்பாராம் "போய் அம்பயர் வேலை பார்க்கலாமே?" என்று. எனக்கும் இந்தச் சிறுவர்களைக் கண்டால் அப்படியொரு ஆசையும் தொற்றிக் கொள்ளும், ஆனால் வயது விடாது. இந்த நாட்டுச் சூழலில் அந்நியர் கிட்ட வந்து பேசுவது கூட வேறு அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டு விடும்.
இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
அவர் பிறந்த இல்லம் எது...? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம்.
ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும் ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது. இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம். அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட்
இலங்கை அரசியல் வரலாற்றின் ஏடுகளில் இவரது ஆளுமை குறிப்பிடத்தகுந்தது. எத்தனையோ சவால்களை முறியடித்து, தான் நினைத்தவற்றை பல்வேறு தந்திரோபாயங்களுடன் சாதித்தவர்.
இவரை ஜே.ஆர். எனவும் ஜே.ஆர். ஜெயவர்தனா எனவும் அழைப்பர். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, தார்மீக சமுதாயம் அமைப்பதுதான் தனது நோக்கம் என்றும் சொல்லி, அதனை தமது தாய் மொழியில் தர்மிஷ்ட சமாஜய என வர்ணித்தார்.
ஆனால், அந்த தார்மீக ஆட்சியில் 1977 – 1981 -1983 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதியில் நடந்த பல சம்பவங்களை பார்க்கும்போதும் அகில இலங்கை எங்கும் நிகழ்ந்த வன்முறைகள், தீவைப்புகள், படுகொலைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்போதும், அதுதான் அவர் கனவு கண்ட தார்மீக சமுதாயமா..? எனவும் கேட்கத்தோன்றும்.
இவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் பொதுநூலகமும் கயவர்கள் ஏவிவிட்ட தீ அரக்கனுக்கும் பலியாகியது. அவரது அரசியல் எதிரிகள் அவரை "மிஸ்டர் தர்மிஸ்டர்" எனவும் அழைத்தனர். பதினொரு பிள்ளைகளில் மூத்த புதல்வனாக அவர் பிறந்த இல்லம்தான் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்பிருந்து வீரகேசரி நாளிதழ் வெளியாகும் கட்டிடம்! இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில் பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர்.
.
<iframe width="1127" height="634" src="https://www.youtube.com/embed/Qem1s9PAnsw" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
<iframe width="1127" height="634" src="https://www.youtube.com/embed/Qem1s9PAnsw" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
<iframe width="1680" height="993" src="https://www.youtube.com/embed/Qem1s9PAnsw" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
நன்றி Amudasurabhi
அதிகமாய் பேசினால் அகன்றிடும் அர்த்தமே
அதிகமாய் உண்டால் ஆபத்தே நெருங்கிடும்
அறியாமை நிறையின் அகமிருள் ஆகும்
அளவுடன் நின்றால் அனைத்துமே அமைந்திடும்
ஆசையை வளர்த்தால் அவதியே நிறையும்
ஆணவம் மிகுந்தால் அழிவுதான் கிடைக்கும்
அலைந்திடும் மனத்தால் அனைத்துமே தொலையும்
அனைவரும் குருவை நாடினால் விடியும்
தெளிந்த நன்னீராய் இருந்திடல் நலமே
தேர்ந்துமே கருத்தை கேட்டிடல் நலமே
வலிந்துமே நோன்பை நோற்றிடல் நலமே
வாழ்வினில் சுமையைக் குறைப்பது சுகமே
வீரசைவ மரபைச் சார்ந்த தெலுங்கு பேசும் கண்ட ஜங்கம் என்கிற சமூக மக்கள் இதை இசைப்பார்கள். நாழிமணிக்காரர் ,நாழிக்காரர், சித்தேச பண்டாரம், மணியாட்டிக்காரர், சித்தூசி பண்டாரம் ஆகிய பெயர்களும் இவர்களுக்கு உண்டு.
இச்சமூகத்தினர் திண்டுக்கல், புதுக்கோட்டை, நெல்லை, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவில் வசிக்கிறார்கள். இவர்கள் சைவ பாடல்கள், நெல் பாடல் ஆகிவற்றைப் பாடி நெல்லை யாசகமாக பெறுவர்.
அறுவடை மாதங்களில் இவர்கள் ஊர்களுக்கு யாசகம் பெற வருவர்(பட்டிக்கு போதல்). வெள்ளையான நீள அங்கியை அணிந்திருப்பார்கள். தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளை சூரிய/சந்திர பிறை இருக்கும்.
பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய
வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என அவர்கள் வேண்டுவது கேட்பவர்களுக்கு மன நிறைவு தரும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள்.
நெல்லுக்கு பதில் பணமும் பெறுவர். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் அந்த வருடத்தைக் குறிக்கும் அடையாளக் குறியை கிறுக்கி விட்டுப் போவார்கள். இதை காணும் அடுத்து வரும் நாழிமணிக்காரர் திரும்பவும் அவ்வீட்டில் யாசகம் வாங்க மாட்டார்.
அக்காலத்தை மரவள்ளிக்கிழங்கு காலம் என்றும் எதிரணியினர் எள்ளிநகையாடினர். வடக்கில் மிளகாய், வெங்காயம் பயிர்ச்செய்கையில் விவசாயிகளுடைய பொற்காலம்.
உள்நாட்டில் திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம் தோன்றியது. எமது சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் அயராத பணியாளர். தன்னை முன்னிலைப்படுத்தாமல் பல ஆக்கபூர்வமான பணிகளுக்கு பின்னின்று உழைத்தவர்.
அத்துடன் மும்மொழியிலும் சரளமாகப் பேசுவார். எந்தப்பெரிய அரசியல் தலைவர்களையும் பெயர் சொல்லி அழைப்பார். அவர் ஶ்ரீமாவை மாத்திரம் பி. எம். என்பார். இடதுசாரித்தலைவர்களை தோழர்
சங்கம் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை மீண்டும் இயங்கவைக்கப்போவதாகவும் அதன் பணிகளுக்கு ஒரு முழுநேர ஊழியர் தேவை என்று சொன்ன அவர், என்னை அதற்கு எவ்வாறு தெரிவுசெய்தார் என்பது தெரியாது.
வேலை இல்லாமல் நான் சிரமப்படலாகாது என்ற நல்லெண்ணம் மாத்திரம் அவரிடமிருந்ததை அறிந்தேன். சங்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் நண்பர் காவலூர் இராஜதுரை அச்சமயத்தில் இலங்கை வானொலியில் பணியாற்றினார்.
அவரும் சிறுகதை எழுத்தாளர்தான். அவரது இல்லம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்தது. அதன் முகவரி: 51/9 ஹட்சன் வீதி, கொள்ளுப்பிட்டி. சங்கத்தின் முகவரியாக அதனையே பயன்படுத்தினார்கள்.
அந்த இல்லத்திலும் சங்கத்தின் கூட்டங்கள் அடிக்கடி நடக்கும். காவலூர் இராஜதுரையின் மைத்துனர் இராஜசிங்கம் ஆரம்ப முதலீட்டை வழங்க , திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் மானிய உதவியுடன் தனது கதையான பொன்மணியை திரைப்படமாக்குவதற்கு நண்பர் தயாரானார்.
சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் தோன்றிய கதையை பிரேம்ஜி என்னிடம் விஸ்தாரமாக எடுத்துச்சொன்னார். கேரளா எழுத்தாளர்களும் அத்தகைய அமைப்பினை நடத்தி சிறந்த நூல்களை வெளியிட்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...
நிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு
கொரோனா வைரஸ் தீவிரம் மேலும் மூவர் நேற்று மரணம்
சபாநாயகர் கையொப்பம்; 20ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்
பொத்துவிலில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவு
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்
முஹம்மது நபி மனித குலத்திற்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம்
மானிட அன்பை கட்டியெழுப்ப தம்மை அர்ப்பணித்த உத்தமர் நபி
இலங்கையின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார்
20க்கு ஆதரவளித்த 09 எம்.பிக்களும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...
பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்
பொலிஸ் சூட்டில் மற்றொரு கறுப்பின இளைஞன் பலி
தாய்வானுக்கு ஏவுகணை விற்க அமெரிக்கா முடிவு
இஸ்ரேல் துருப்புகள் தாக்குதல்: பலஸ்தீன இளைஞர் உயிரிழப்பு
சிரியாவில் ரஷ்ய வான் தாக்குதலில் பலர் பலி
ஹொங்கொங்கில் மூன்று ஜனநாயக ஆர்வலர் கைது
அமெரிக்காவின் பாலியல் வழிபாட்டு குழு தலைவருக்கு 120 ஆண்டு சிறை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரம்
கொவிட்–19: ஐரோப்பாவெங்கும் தினசரி உயிரிழப்பு அதிகரிப்பு
கருணைக்கொலைக்கு நியூசிலாந்தில் ஆதரவு
பெண்கள் மீது சோதனை; மன்னிப்பு கேட்டது கட்டார்
விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாயைக் கண்டறிய அவுஸ்திரேலியா செல்லவிருந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாயப் பரிசோதனை நடத்திய விவகாரத்தில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.
பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை நடத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததன் பின்னணியில் கட்டார் மன்னிப்புக் கோரியுள்ளது.
இதன்போது பெண்களின் ஆடையை கழற்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இப்பெண்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களது உள்ளாடையை நீக்கிய பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், அவுஸ்திரேலிய அரசிடம் மருத்துவ ரீதியான உதவிகளைப் பெற்றதாக அதனை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரவித்தார்.
ஒக்டோபர் 2ஆம் திகதி கட்டார் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத குறைமாதத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் தாயை உடனடியாகக் கண்டுபிடிப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த பெண் பயணிகளுக்கு கட்டாய மருத்துவப் பரிசோதனை செய்து யாருக்கேனும் குழந்தை பிரசவித்ததற்கான அடையாளம் இருக்கிறதா என்பதை கண்டறிய முனைந்துள்ளனர்.
இதுபோன்றதொரு பரிசோதனை பாலியல் வன்கொடுமைக்கு இணையானது என்று மனித உரிமை காப்பாளர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது.