இலங்கைச் செய்திகள்
ரணில் இணக்கம் ; முக்கிய தீர்மானம் நிறைவேறியது
சிவசக்தி ஆனந்தனை சந்தித்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டு இராஜதந்திரி
நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம்
வெள்ளிகிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும் - வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம் !
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்
தேரரின் உடலை தகனம் செய்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ஞானசார தேரர்
ரணில் இணக்கம் ; முக்கிய தீர்மானம் நிறைவேறியது
சிவசக்தி ஆனந்தனை சந்தித்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டு இராஜதந்திரி
நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம்
வெள்ளிகிழமை வரை வடக்கில் சட்டத்தரணிகளின் பணிபுறக்கணிப்பு தொடரும் - வாயை கறுப்பு துணியால் கட்டி போராட்டம் !
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம்
தேரரின் உடலை தகனம் செய்தமைக்கான காரணத்தை கூறுகிறார் ஞானசார தேரர்
ரணில் இணக்கம் ; முக்கிய தீர்மானம் நிறைவேறியது
24/09/2019 ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவே களமிறங்குவார் என நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகச் செய்திகள்
பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோதமானது - பிரிட்டன் உச்ச நீதிமன்றம் ; சிக்கலில் போரிஸ் ஜோன்சன்
இரு நாடுகளும் விரும்பினார் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக செயற்பட தாம் தயார் - ட்ரம்ப்
இங்கிலாந்து கப்பலை விடுவித்த ஈரான்
பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் தொகை 20 ஆக உயர்வு
பில்கேட்ஸிடம் இருந்து மோடிக்கு “குளோபல் கோல்கீப்பர்” விருது!
தென்னாபிரிக்காவில் பாலியல் வல்லுறவின் பின்னர் மாணவி கொல்லப்பட்ட இடத்திற்கு இளவரசர் ஹரியின் மனைவி இரகசிய விஜயம்
இந்தியா பாக்கிஸ்தான் அணுவாயுத மோதலில் ஈடுபடும் ஆபத்து- உலக தலைவர்களை எச்சரித்தேன் என்கிறார் இம்ரான்
பாராளுமன்றம் கலைப்பு சட்டவிரோதமானது - பிரிட்டன் உச்ச நீதிமன்றம் ; சிக்கலில் போரிஸ் ஜோன்சன்
24/09/2019 இங்கிலாந்து பாராளுமன்றத்தை ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை முடக்கி வைத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் முடிவானது சட்டவிரோதமானது என்று அந் நாட்டு உச்ச நீதமன்றம் அறிவித்துள்ளது.

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 13
காவல் தெய்வம்
தமிழ்த்திரையில் சிறந்த குணசித்திர நடிகராகத் திகழ்ந்தவர் எஸ் வி சுப்பையா. ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக மாறி உணர்ச்சிகரமாக நடித்து தன் திறமையை காட்டும் சுப்பையா சொந்தமாக ஒரு படத்தைத் தயாரிக்கத்திட்டமிட்டார். அதற்கு அவர் தெரிவு செய்த கதை பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தனின் கைவிலங்கு நாவலாகும். ஏற்கனவே பாதை தெரியுது பார் படத்தில் கதாநாயகனாக நடித்து பின்னர் சில படங்களில் துணை வேடம் ஏற்ற கே விஜயனை இப்படத்தின் மூலம் டைரக்டராக்கினார் சுப்பையா. இந்த விஜயன் பின்னர் சிவாஜியின் பல படங்களை இயக்கினார்.
படத்தின் இசைக்கு தமிழில் மிக அரிதாக சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஆனால் மலையாளத்தில் பிரபலமாகத் திகழ்ந்த ஜி தேவராஜன் நியமிக்கப்பட்டார். தேவராஜனின் உதவி இசையமைப்பாளராக இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தந்தை சேகர் பணியாற்றினார்.
சுப்பையா தயாரித்த படம் என்பதால் நம்பியார் பாலையா அசோகன் நாகேஷ் ஸ்ரீரஞ்சனி, முத்துராமன் ஜி சகுந்தலா என்று ஏராளமான நடிகர்கள் நட்பு ரீதியாக கௌரவ நடிகர்களாக நடித்தார்கள். ஆனாலும் படத்தின் முக்கியப் பாத்திரமான சாமுண்டி கிராண்மணி பாத்திரத்தில் சிவாஜி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கருதிய சுப்பையா கௌரவவேடத்தில் நடித்து தரும்படி தன் நண்பர் சிவாஜியை கேட்டார். பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி நேரம் இன்மை காரணமாக மறுத்து விட்டார். சிவாஜியை விட்டுவிட சுப்பையாவுக்கு விரும்பமில்லை. நிலைமையை தன் நெருங்கிய நண்பர் ஏவி எம் சரவணனிடம் கூறினார். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் உயர்ந்த மனிதன் படத்திற்கு சிவாஜி கொடுத்த தினங்களில் ஒன்றிரண்டு தினங்களை விட்டு கொடுத்து அந்தத் தேதிகளில் காவல் தெய்வம் படத்தில் நடிக்கும்படி சரவணன் கோர சிவாஜியும் அவ்வாறே அற்புதமாக நடித்துக் கொடுத்தார். கௌரவ வேடம் என்றாலும் அதில் சிவாஜி காட்டும் முகபாவம், தீட்சண்யமான கண்கள் வசன உச்சரிப்பு எல்லாம் ரசிகர்களை கவர்ந்தன. மரமேறும் தொழிலாளியாக சிவாஜி இதில் நடித்திருந்தார்.
படத்தில் இளம் காதல் ஜோடியாக நடித்தவர்கள் அன்று இளமையாக திகழ்ந்த சிவகுமார், லஷ்மியாகும் வயதான நடிகர்களையே காதலர்களாக பார்த்து பழகிய கண்களுக்கு இந்த இளம் ஜோடி கண்ணுக்கு விருந்தாக இருப்பதாக பல பத்திரிகைகள் பாராட்டின. தேவராஜன் இசையில் தராபுரம் சுநதரராஜன் சுசிலா பாடிய அய்யனாரு நிறைந்த வாழ்வு கொடுக்கனும் என்ற பாடலுக்கு சிவகுமாரும் லஷ்மியும் இளமை ததும்ப நடித்திருந்தனர். சுப்பையாவின் மனைவியாக சௌகார் ஜானகி இயல்பாக நடித்திருந்தார்.
இதைத் தவிர புரிசை நடேசதம்பிராமன் குழுவினரின் பிரகலாதன் நாடகம், கலைமணி குழுவினரின் கரகாட்டம் மதுரை பி சுந்தரராஜ் குழுவினரின் நையாண்டி மேளம் குலதெய்வம் ராஜகோபாலின் வில்லுப்பாட்டு போன்ற தமிழர் பாரம் பரிய கலைகளும் படத்தில் இடம் பெற்றது சிறப்பாம்சமாகும்.
நெல்லை அருள்மணி எழுதிய பிறப்பதும் போறதும் இயற்கை என்ற தத்துவப் பாடலும் டி எம் எஸ் குரலில் படத்திற்கு வலு சேர்த்தது. தமிழ்நாட்டு கிராமங்களுக்கு காவல் தெய்வமாகத் திகழ்பவர் அய்யனார். அதேபோல் பலதரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையில் காவல் தெய்வமாகத் திகழ்கிறார் ஜெயில் ஆணையாளர் சுப்பையா. கடுமையான வார்த்தைகள் முரட்டுத்தனம் ஏதுமின்றி அனைத்து கைதிகளையும் அன்பால் அடக்கியாள்கிறார். அவருடைய கருணையுள்ளம் பல கைதிகளை திருத்துகிறது. சந்தர்ப்ப சூழலால் சிறைக்கு கைதியாக வரும் சிவகுமாரும் அவரின் கருணையில் நனைகிறார். தன்னை திரையில் நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த சிவகுமாருக்கு இந்தப் படம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
முழுக்க முழுக்க கிராமிய சூழலில் குறைந்த செலவில் உருவான காவல்தெய்வம் ஜெயகாந்தன் சுப்பையா விஜயன் மூவருக்கும் வெற்றியையும் திருப்தியையும் அளித்தது. ரசிகர்களுக்கு மாறுபட்ட படமாக அமைந்தது.
தமிழ் சினிமா - ஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்
சினிமாவில் கோடிக்கணக்கில் பணம் கொட்டி படத்தை எடுத்து போட்ட பணத்தை திரும்ப எடுப்பதற்குள் ஒரு தயாரிப்பாளருக்கு தூக்கம் வராது என்பதே நிதர்சனம். இந்த போட்டிக்கு நடுவில் குட்டிக் கரணம் போட்டாவது சாதிக்க வேண்டும் என துடிக்கும் பார்த்திபனின் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளியாகியுள்ளது. ஒத்தசெருப்பின் பின்னணி பார்க்கலாமா? வழித்தடத்திற்குள் செல்வோம்!
கதைக்களம்
படத்தின் ஹீரோ பார்த்திபன் ஒரு சாதாரண குடும்ப பின்னணி. படம் முழுக்க அவர் மட்டுமே உருவத்தில் தெரிகிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் குரலாக நம் மனதில் பேசுகிறது. அவருக்கு ஒரு வெகுளியான கிராமத்து மனைவி. இருவருக்கும் ஒரு மகேஷ் என்ற குழந்தை.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வாட்ச்மேனாக வேலைக்கு வரும் பார்த்திபன், அவரின் மனைவியையும் அதே கிளப்பில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். இருவரின் நோக்கமும் விசித்திரமான நோய் கொண்ட தங்கள் மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பது தான்.
இதற்கிடையில் பார்த்திபனின் மனைவிக்கு அங்கு வரும் பெண்களை பார்த்து அவர்களின் உடை, அணிகலன் போலவே தானும் அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை.
இப்படியே போக அந்த கிளப்பிற்கு வரும் ஆண்கள் சிலர் அவரின் மனைவி மீது இச்சை கொள்ள, தங்கள் ஆசைக்கு இணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையில் அடுத்தடுத்து சில முக்கிய பிரமுகர்களின் தொடர் கொலைகள். இதற்கு தடயமாக சம்பவ இடத்தில் ஒத்த செருப்பு கிடைக்கிறது. இதை செய்தது யார்? பார்த்திபன் மனைவியை காப்பாற்றினாரா? மகனுக்கு என்ன ஆனது என்பதே இந்த ஒத்த செருப்பு.
படத்தை பற்றிய அலசல்
தமிழ் சினிமாவில் சில திறமையான படைப்பாளிகளும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். அவரின் ஹுயூமரானா பேச்சும், சிந்திக்க வைக்கும் கருத்துகளும் அவரின் தனி ஸ்டைல். 2016 ல் வந்த கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு பின் இவ்வருடம் ஒத்த செருப்பு படத்தை நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளார்.
உலகின் எத்தனையோ விதமான படங்கள் வருகின்றன. இதில் அதிக முதலீடு இல்லாத அழுத்தமான கதை சார்ந்த படங்களும் வெற்றி பெறுகின்றன. இதில் ஒரே ஒரு கேரக்டரை மட்டுமே வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்துள்ளன. இதில் 14 வது படமாக ஒத்த செருப்பு வந்துள்ளது.
சமூகத்தில் ஒரு தனி மனித வாழ்க்கையில் நடக்கும் சில அவலங்களை வெளிச்சம் போடுகிறது இந்த ஒத்த செருப்பு. சில உண்மை சம்பவங்களையும் பிரதிபலிக்கிறது.
அதே வேளையில் அவர் இப்படத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறார். அவர் தான் இங்கு ஜெயிக்கிறார். யார் அவர் என இங்கேயே நாங்கள் சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும் தானே. எனவே படத்தை தியேட்டர்ல பாருங்கள் மக்களே.
ஒவ்வொரு காட்சிகளும் கிட்டத்தட்ட 4.1/2 நிமிட இருக்கும் என தெரிகிறது. இதற்காக அவர் மிகவும் ரிஸ்க் எடுத்திருப்பது நன்றாக தெரிகிறது. ஒரே காஸ்ட்யூம், சிம்பிளான மேக்கப் பார்த்திபனுக்கு ஓகே.
குறிப்பாக சகஜமாக வார்த்தைகளை அள்ளிப்போட்டு டப்பிங் பேசும் அவருக்கே பெரும் சவாலாக இருந்திருக்கும். இதுவரை பலவிதமான ரகங்களில் படம் பார்த்து பழகிய நமக்கு இப்படம் சற்று வித்தியாசமான சினிமா பயணமாக இருக்கும்.
முக்கிய சொல்ல வேண்டிய சந்தோஷ் நாராயணனின் இசையில் ஒரு பாடல். சத்யாவின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமான ஒன்று.
படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மற்ற காட்சிகளுடன் பின்னியுள்ளதால் முக்கிய விசயத்தை சொல்ல வருகிறது. இந்த விசயத்தில் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்ஸன் ஆகியோரு இப்படம் ஒரு சவாலாக அமைந்திருக்கும். ரிலீஸ்க்கு முன்பே பலரின் பாராட்டை பெற்று விட்ட நிலையில் நாம் மட்டும் வாழ்த்தாமல் இருந்தால் அது சரியல்ல. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கிளாப்ஸ்
ஓன் மேன் ஷோ போல பார்த்திபனின் தைரியமான முடிவு.
அங்கங்கு வரும் அவரின் வழக்கமான ஹுயூமர் ரசிக்கும் படியானது.
கடைசிவரை எதிர்ப்பார்ப்புடன் சஸ்பென்ஸை கொண்டு சென்றது.
பல்பஸ்
மிக நீளமான டையலாக்குகள், காட்சிகள் இருக்கிறதோ என்ற ஃபீல்.
மொத்தத்தில் ஒத்த செருப்பு விறுவிறுப்பு. குடும்பத்தோடு பார்க்கலாம்..
நன்றி CineUlagam
மரண அறிவித்தல்
.
பேராசிரியர் பொன் பூலோகசிங்கம்
பேராசிரியர் பொன் பூலோகசிங்கம்
வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி-அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகக் கொண்ட, முன்னை நாள் கொழும்பு, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள் வியாழக்கிழமை, 19.09.2019 அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார் காலம்சென்ற பொன்னையா உடையார், சோதிரட்ணம் அகியோரின் அன்பு மகனும், தனபாலதேவியின் அன்புக் கணவரும், பூபாலனின் அன்புத் தந்தையும்
காலஞ்சென்ற செல்வரட்ணம், சரஸ்வதி, காலஞ்சென்ற கதிரவேலு, கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வியாழக்கிழமை, 26/9/2019, 1.30 மணிக்கு South Chappell, Rockwood crematorium இல் வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்று, 4.30மணிக்கு அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
சிட்னியில் இளங்கோ அடிகளிற்கு சிலை திறப்புவிழா 27/09/2019
சிலப்பதிகாரம் உலக மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் காப்பியமாக விளங்கும் காப்பியமாக அமைந்துள்ளது. சமய நல்லிணக்கத்தைப் போற்றவும் நல்லறத்தை வலியுறுத்தவும் தமிழும் தமிழினமும் உலகப் புகழ் பெறக் காரணமான சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இயைந்த காப்பியமாகின்றது. தமிழக்துத் தமிழர்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த இளங்கோ அடிகளிற்கு முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட்டில் 6 அடி உயர திருஉருவச் சிலை திறப்புவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சிட்னியில் தமிழர் மண்டபத்திற்கு முன்பாக மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் சென்னை தலைவர் நாவுக்கரசி பா. வளர்மதி அவர்களால் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்
தமிழ் வளர்ச்சித்துறை சென்னை இயக்குநர் முனைவர் கோ விசயராகவன் அவர்கள் மாநாட்டை தலைமை ஏற்று இளங்கோவடிகள் சிலையைத் திறந்து வைப்பார்கள்.
சென்னை அம்மா தமிழ்பீடம் தலைவர் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள் மாநாட்டில் நிறைவுப் பேருரையை ஆற்றுவார்கள்.
மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இயக்குநர் (ஒய்வு) முனைவர் கா மு சேகர் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நோக்க உரை ஆற்றுவார்கள்.
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியல் கழகம் சென்னை தலைவர் நாவுக்கரசி பா. வளர்மதி அவர்களால் மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்
தமிழ் வளர்ச்சித்துறை சென்னை இயக்குநர் முனைவர் கோ விசயராகவன் அவர்கள் மாநாட்டை தலைமை ஏற்று இளங்கோவடிகள் சிலையைத் திறந்து வைப்பார்கள்.
சென்னை அம்மா தமிழ்பீடம் தலைவர் சொல்லின் செல்வர் ஆவடிக்குமார் அவர்கள் மாநாட்டில் நிறைவுப் பேருரையை ஆற்றுவார்கள்.
மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இயக்குநர் (ஒய்வு) முனைவர் கா மு சேகர் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நோக்க உரை ஆற்றுவார்கள்.
உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் ! மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா
போகவிட்டுப் புறஞ்சொல்லி திரியுதொரு கூட்டம்
பொய்பேசி புழுகுரைத்து நிற்குதொரு கூட்டம்
வாழவிடா வழிதேடி வதைக்குதொரு கூட்டம்
வையகத்தில் நிறைந்திருக்கு வகைவகையாய் கூட்டம்
தாயிடத்துப் பரிவுகொளா தானுமொரு கூட்டம்
தள்ளாடும் முதுமைதனை தவிர்க்குமொரு கூட்டம்
நீதிநெறி தனையொதுக்கி நிற்குமொரு கூட்டம்
நீள்புவியில் இப்படியே நிறைந்திருக்கே கூட்டம் !
கடவுளில்லை என்றுரைத்து கட்சிகூட்டும் கூட்டம்
கடமை செய்வார் கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டம்
தனியுடமை என்றுரைத்து தான்பிடுங்கும் கூட்டம்
சகலதுமே தெரியுமென்று சவால்விடுக்கும் கூட்டம்
தத்துவத்தை சமயத்தை சாடிநிற்கும் கூட்டம்
சன்மார்க்க நெறிமுறையை தகர்த்துநிற்கும் கூட்டம்
உத்தமர்கள் போல்நடித்து உருக்காட்டும் கூட்டம்
உலககிலிப்போ பலவடிவில் நிறைந்திருக்கே கூட்டம் !
முதலாவது அனைத்துலகச் சிலப்பதிகார மாநாடு 2019
சிலப்பதிகாரம் தமிழர் இலக்கியப்
படைப்புக்களிலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்ற அற்புதக் காவியமாகும்.
இதனால் தான் பண்டைத் தமிழர் அதனை
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றி வந்தார்கள்.
இது தமிழர் பண்பாட்டை எடுத்துச்
சொல்லும் காப்பியமாக அமைந்துள்ளது.
இராமாயணம், பாரதம் போன்றின்றித் தமிழர்களையே கதாபாத்திரங்களாகக் கொண்டது. சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று
தமிழ் நாடுகளிலும் நடக்கும் கதையாக அமைந்தது.
இந்தக் காப்பியத்தின் சிறப்புக்கள்
மேலும் நீளும்.
இவற்றையெல்லாம் புலம்பெயர்
தமிழருக்கு நினைவு படுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவும் இந்த
மாநாட்டை சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் ஏற்பாடு செய்து
வருகின்றார்கள். இந்த மாநாடு
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகின்றது.
நிகழ்ச்சிகள் சனிக்கிழமை 28 ஆம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை 29 ஆம்
திகதியும் நடைபெற இருக்கின்றது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட
தமிழறிஞர்கள் தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து வந்து கலந்து
கொள்கின்றார்கள்.
சிலம்பைப் படைத்த இளங்கோவடிகளுக்கு
ஒரு சிலையும் எதிர்வரும் 27ஆம் திகதி நிறுவப்பட இருக்கின்றது.
நிகழ்ச்சியிலே சிலப்பதிகாரத்தைப்
பல்வேறு கோணங்களில் கண்டு தமிழறிஞர்கள் பேச இருக்கின்றார்கள். இது தவிர, வில்லுப்பாட்டு, நாட்டிய நாடகம்,
கவியரங்கம் என்று பல்வேறு சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
சுமார் 700 பக்கங்களிலே மாநாட்டு
மலரும் வெளியிடப்பட இருக்கின்றது.
அவுத்திரேலியா வாழ் தமிழர்கள் இந்த
அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மாநாட்டில் கலந்து சிறப்பிக்க வேண்டும்
என்று தமிழ் இலக்கியக் கலை மன்றத்தின் தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
கவிஞர் த. நந்திவர்மன்
அஞ்சலிக்குறிப்பு: தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் மறைந்தார் வவுனியா மாவட்டத்திலிருந்து தெரிவான முதலாவது கலாநிதியும் இவரே ! ! - முருகபூபதி
.
நீண்ட நாட்களாக அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் காப்பகத்தில் நனவிடை தோய்ந்துகொண்டிருந்த
தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் கடந்த 19 ஆம் திகதி மறைந்தார்
என்ற செய்தி, தற்போது இலங்கையில் நிற்கும் எனக்கு வந்து சேர்ந்தது.
ஆறுமுகநாவலர் நூற்றாண்டு இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில் நடைபெற்ற விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான் அந்த சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு கூட்டங்களிலும் விழாக்கள் மற்றும் சந்திப்புகளிலும் பல சுவாரஸ்யங்களை அவிழ்த்து கலகலப்பூட்டும் பூலோகசிங்கம் அவர்கள் அவுஸ்திரேலியா, சிட்னியில் புலிடம் பெற்றபின்னரும் அயராமல் இயங்கிவந்தவர். அங்கு நடைபெறும் தமிழ்க் கல்வி – தமிழ் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிப்பார். சிட்னி தமிழ் முதியோர் சங்கத்திலும் இணைந்திருந்தவர்.
நீண்ட நாட்களாக அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் காப்பகத்தில் நனவிடை தோய்ந்துகொண்டிருந்த
தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் அவர்கள் கடந்த 19 ஆம் திகதி மறைந்தார்
என்ற செய்தி, தற்போது இலங்கையில் நிற்கும் எனக்கு வந்து சேர்ந்தது.
இவர் பற்றி சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழில் இவ்வாறு எழுதியிருந்தேன். "
பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் தமிழ் உலகில்
கொண்டாடப்படவேண்டியவர் என்ற
வார்த்தை வெற்றுப்புகழாரம் அல்ல.
“எங்கள் நாவலரை, " வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் " - என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம்.
“எங்கள் நாவலரை, " வசனநடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் " - என்று அறிந்திருக்கின்றோம். தமிழ்நாட்டில் கடலூரில் ஒரு காலத்தில் வள்ளலார் சுவாமிகளுக்கு எதிராக நீதிமன்றில் அவர் வழக்காடியதையும் அறிந்திருப்போம்.
ஆனால், அவர் தமது
இளமைக்காலத்தில் கோபமும்
மூர்க்க குணமும் கொண்டவர் என்பதை அறிந்திருப்போமா ? தமது உறவினர் மீது தமக்கு
வந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கத்தியை
எடுத்துக்கொண்டு அவர் துரத்திய கதை எத்தனைபேருக்குத்
தெரியும் ?
ஆறுமுகநாவலர் நூற்றாண்டு இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில் நடைபெற்ற விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான் அந்த சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தினார்.
அவர்தான் தகைமைசார் பேராசிரியர்
பொன். பூலோகசிங்கம்.
இவ்வாறு கூட்டங்களிலும் விழாக்கள் மற்றும் சந்திப்புகளிலும் பல சுவாரஸ்யங்களை அவிழ்த்து கலகலப்பூட்டும் பூலோகசிங்கம் அவர்கள் அவுஸ்திரேலியா, சிட்னியில் புலிடம் பெற்றபின்னரும் அயராமல் இயங்கிவந்தவர். அங்கு நடைபெறும் தமிழ்க் கல்வி – தமிழ் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிப்பார். சிட்னி தமிழ் முதியோர் சங்கத்திலும் இணைந்திருந்தவர்.
நாம் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் ஆரம்பித்த தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்திலும்
இணைந்திருந்தவர். அந்த ஆண்டு மெல்பனில் பிரஸ்டன் நகரமண்டபத்தில் நடைபெற்ற முதலாவது விழாவில் இடம்பெற்ற
நூல்கள் – இதழ்கள், மறைந்த எழுத்தாளர்கள் – கலைஞர்களின் ஒளிப்படக்கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக
திறந்தும் வைத்தார். அதன்பின்னர் அடுத்த ஆண்டு
( 2002 இல் )
சிட்னி தமிழ் எழுத்தாளர் விழாவிலும் பங்கேற்றார்.
எனது நூல்களின் வெளியீடு,
மறைந்த வானொலி ஊடகக்கலைஞர் ‘ அப்பல்லோ
‘ சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் நினைவு அரங்கில் நடைபெற்றவேளையிலும் உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேராசிரியரின் மாணவி ( திருமதி) கலையரசி சின்னையா.
இவர் ( அமரர் ) வித்துவான் வேந்தனாரின் புதல்வி.
நிர்ப்பந்தம்
21/09/2019 அரசியல் உரிமைகளுக்கான தமிழ் மக்களின் போராட்டம் நீண்டது. எழுபது வருடங்களாக உயிர்ப்புடன் தொடர்வது. பல வழிகளில் வீரியம் மிக்கது. வியந்து நோக்கத்தக்க பல்வேறு வழி முறைகளையும் உத்திகளையும் கொண்டது. ஆனாலும் அது விளைவுகளைத் தரத்தவறியுள்ளது. இது கவலைக்குரியது - கவனத்துக்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் மீள் பரிசீலனைக்கும் உரியது.
இந்த அரசியல் போராட்டம் பிரதானமாக இரண்டு வழிமுறைகளிலானது. சாத்வீகப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட அது, பின்னர் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அது சாத்வீக வழிக்குள் வலிந்து தள்ளப்பட்டுள்ளது.

உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்பட்டதையடுத்து, சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தின் கடும்போக்கைக் கரைத்து வெற்றியளித்த விடுதலைப் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இதனை தமிழ்த்தலைவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.
கூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்
21/09/2019 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித முடிவை எடுக்க வேண்டுமென்று வட, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அந்த எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பாணியில் நடந்துகொள்ள இரா.சம்பந்தன் முற்படுகிறார் என்பது அண்மைய சந்திப்புகளில் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.

கடந்த காலத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் அல்லது பொதுத் தேர்தலாக இருக்கலாம், மாற்று தேர்தல்களாக இருக்கலாம், தீர்க்க தரிசனமாக, நடந்து கொள்ளாமையின் காரணமாகவே பல இழப்புகளையும் தோல்விகளையும் எல்லாவற்றுக்கு மேலாக ஏமாற்றங்களையும் தமிழ் மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. அதே தவறை மீண்டும் விடும் நிலையொன்றை கூட்டமைப்பு தலைவர் விடுவாராயின், இனி எக்காலத்திலுமே விமோசனமற்ற நிலையே தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்று பயந்து கொண்டி-ருந்த நிலையில் சம்பந்தரின் தீர்க்கமான கருத்துக்களும் முடிவுகளும் ஆறுதல் அளிக்கின்றன என பொதுவாகவே தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்
21/09/2019 ஜனாதிபதி தேர்தல் குறித்த முன்னெடுப்புகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் பல வேட்பாளர்கள் களமிறங்க உள்ள நிலையில் எந்த ஒரு வேட்பாளரும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது போகக்கூடும் என்று விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பர் என எதிர்வு கூறப்பட்டிருக்கின்றது. சமூகவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளும் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான எதிர்பார்ப்புகள் நாட்டு மக்களிடையே இப்போது அதிகமாக காணப் படுகின்றன. நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரப்போவது யார் என்று நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பதவியினை கைப்பற்றும் நோக்கில் வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்கு உகந்ததல்ல என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர். இதேவேளை இன்னுமொரு சாரார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை கடந்த காலத்தில் பல்வேறு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் இம்முறைமையும் நாட்டின் அபிவிருத்திக்கும், பாதுகாப்பிற்கும் தோள் கொடுக்கும் என்றும் கூறியுள்ளனர். எவ்வாறெனினும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகவே குரல் கொடுத்து வருகின்றமையும் நாம் அறிந்ததே.
Subscribe to:
Posts (Atom)










