உலகச் செய்திகள்


பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி

இந்­தோ­னே­சிய விமா­னத்தில் பய­ணித்த 54 பேரது சட­லங்­களும் மீட்பு

இந்திய குடியரசுத் தலைவரின் மனைவியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பெண்கள் படை­ய­ணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பாடகி

பாங்கொக்கில் குண்டுவெடிப்பு : 27 க்கும் அதிகமானோர் பலி

17/08/2015 தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 27 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவுஸ்திரேலியாவில் நடந்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 27 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம்.

.


இலங்கையில்   நீடித்திருந்த  போரினால்  தமது  பெற்றோரை  அல்லது  குடும்பத்தின்  மூல  உழைப்பாளியை  இழந்திருந்த ஏழைத்தமிழ்  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  உதவுவதற்காக 1988  ஆம்  ஆண்டு  அவுஸ்திரேலியாவில்  மெல்பனில் தொடங்கப்பட்ட  இலங்கை  மாணவர்  கல்வி  நிதியம்  என்னும் தன்னார்வத்தொண்டு  நிறுவனத்தின்  27   ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்    அண்மையில்  மெல்பனில்  வேர்மன்  தெற்கு  சனசமூக  நிலைய  மண்டபத்தில்  நடந்தது.
நிதியத்தின்  நடப்பாண்டு  தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  தலைமை  தாங்கினார்.
ஆரம்பத்தில்  ஆறு மாணவர்களுக்கு  உதவிய  இந்த  அமைப்பு படிப்படியாக  எண்ணிக்கையை   அதிகரித்து  இதுவரையில்  சுமார் ஆயிரம்  மாணவர்களுக்கு    உதவி   வழங்கி,  அவர்கள்  தமது உயர்தரக் கல்வியை  பூர்த்திசெய்யும்  வரையில்  தொடர்ச்சியாக சேவையாற்றியது.
திரு. விமல் அரவிந்தன்  நிதியத்தின்  உறுப்பினர்களுக்கு  நன்றி தெரிவித்து    உரையாற்றுகையில்  மேலும்  பல  மாணவர்களுக்கு இதுவரையில்  உதவும்  அன்பர்கள்  இல்லாமலேயே   நிதியத்தின் கையிருப்பிலிருந்து   உதவி  வழங்கப்படுகிறது  என்பதையும் சுட்டிக்காட்டி,   மேலும்  உதவும்  அன்பர்களை   நிதியத்தில் இணைப்பதற்கு   நிதிய  உறுப்பினர்கள்  முன்வரவேண்டும்  என்றார்.

சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில்

.

‘துக்ளக்' ஆசிரியரும், நடிகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த சோ ராமசாமி, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மதியம் அவருக்கும் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளையராஜாவுக்கு சிகிச்சை
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நேற்று சிகிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு வந்தார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

தமிழ் சினிமா


வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க 



அஜித்தின் அமர்க்களம், சூர்யாவின் சிங்கம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்கள் தான் இவர்களின் 25வது படம். இந்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆக, தன்னுடைய 25வது படத்தையும் ஹிட் அடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டாரா ஆர்யா?.

தன் Favorite இயக்குனர் ராஜேஸ் அழகுராஜா தோல்வியில் துவண்டு இருந்தாலும், நீ என் நண்பேண்டா என்று தோளில் ஏற்றி வைத்து VSOP படத்தை தானே தயாரிக்கவும் செய்து வெளியீட்டுள்ளார் ஆர்யா.
ராஜேஸ் படத்தில் என்ன கதை? சரக்கு, நண்பர்கள், காதல், மோதல், பின் சந்தானத்தின் மூலம் தீர்வு. இது தான் இவர் படத்தின் வழக்கமான பார்முலா. இதை தன் முந்தைய படத்தில் மிஸ் செய்த ஒரே காரணத்தால் கொஞ்சம் தடுமாறினார்.
தற்போது பிடித்து விட்டார், ஆர்யா, சந்தானம் திக் ப்ரண்ட்ஸ். இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்த நேரத்தில் சந்தானத்திற்கு, பானுவுடன் திருமணம் நிச்சயமாகின்றது. திருமணத்திற்கு பிறகு ஆர்யா செய்யும் சேட்டைகள் பிடிக்காமல், அவருடைய நட்பை மனைவி கட் செய்ய சொல்ல, சந்தானம், ஆர்யா காதலித்தால் நம்மை தொந்தரவு செய்ய மாட்டான் என்று தமன்னாவை இவருக்கு கோர்த்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் தமன்னாவும் சந்தானம் நட்பை ஆர்யாவிடம் கட் செய்ய சொல்ல, கடைசியில் மனைவிகளுக்காக இவர்கள் நட்பு பிரிந்ததா? இல்லை நட்பு தான் முக்கியம் என கடைசி வரை இருந்தார்களா? என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஆர்யாவிடம் சார் நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் கேமரா வைத்து Shoot செய்து கொள்கிறோம் என சொல்லி விட்டார் போல ராஜேஷ். தனக்கு எது எது எல்லாம் வராதோ, அதையெல்லாம் ப்ளஸாக்கி சிக்ஸர் அடிக்கின்றார்.
சந்தானம் சார் எங்க போனீங்க இத்தனை நாளா? சந்தானத்தின் சரக்கு ராஜேஸ் தான் போல, இந்த கவுண்டரை கவனித்தால், அந்த கவுண்டர் மறந்து விடுகின்றது. அந்த அளவிற்கு பின்னி பெடல் எடுத்து விடுகிறார். ஒரு நாள் நீ என் இடத்துல இருந்து பாரு, எத்தன கவுண்டர், எத்தன மாடுலேஷன் என சந்தானம் பேசும் காட்சியில் நான் தாண்ட காமெடி கிங் என்று சொல்லாமல் யாருக்கோ சொல்கிறார்.
அதிலும் குறிப்பாக வித்யூ லேகா குடும்பத்தை கலாய்க்க செல்லும் இடத்தில் சந்தானத்தின் டாப் 10 காமெடியில் இடம்பெறும் காட்சி. தமன்னா பாகுபலியில் பார்த்த வீரமங்கை இதில், கண்டேன் காதலை ஸ்டைலில் துறுதுறுவென அசத்தியுள்ளார். வித்யூ லேகாவும் மனோரமா, கோவை சரளா வரிசையில் இடம்பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
நீரவ் ஷா தான் கேமராவா? என்று கேட்கும் அளவிற்கு தான் உள்ளது. டி. இமான் இசையில் ‘லக்கா மாட்டிகிச்சு’ ’நான் ரொம்ப பிஸி’ பாடல் செம்ம குத்து. பின்னணி இசை ராஜேஸ் கண்டிப்பாக யுவனை மிஸ் செய்து தான் வருகிறார்.

க்ளாப்ஸ்




ஆர்யா, சந்தானம் கெமிஸ்ட்ரி, இன்னும் 10 படங்கள் நடிக்கலாம், அந்த அளவிற்கு எனர்ஜி. படத்தின் எந்த இடத்திலும் முகம் சுழிக்காத படியான காட்சியமைப்புகள்.

பல்ப்ஸ்

படத்தின் டைட்டிலை ஏதேதோ சொல்லி சமாளித்தாலும், படம் முழுவதும் ‘மது அருந்துதல்’ வாசகம் வந்து கொண்டே தான் இருக்கின்றது. ராஜேஸின் சரக்கு அது தானே? அவரை சொல்லி எந்த குற்றமும் இல்லை.
மொத்தத்தில் ராஜேஸ் நமக்கு இது தான் ‘பாஸ்’ சரி என்று ஆர்யா+சந்தானத்தை ஒண்ணா நடிக்க வைத்து விட்ட இடத்தை பிடித்து விட்டார்.

ரேட்டிங்- 3/5





நன்றி cineulagam





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் Klintan Bernotsha Stalin. 17.08.2015

.


மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-1 பொலிகை ஜெயா

.
செய்தொழில்  உடல்  சோரும் 
சேயின்   குதலையால்  மெய்  நிமிரும் 
இல்லானின்  கடின  உழைப்புக்கு
இல்லாளின்  ஆலிங்கனம்  ஒத்தடமாகும் 
மலரில்  மணம்  மதியில்  குளிர்ச்சிபோல்
மழழைகளின்   சிரிப்பில்  மலரும்  முகம் 
ஆஸ்திக்கும்  ஆசைக்குமொன்றாய்
ஈன்றெடுத்த  இரு  கண்மணிகளை 
போர்  ஏப்பமிட்டது  அறியாது
ஏங்கித்தவித்து  புலம்பி  ஏறியிறங்கி   
கைகூப்பி  காலில்  விழுந்து  மன்றாடி
கையில்  மனுவுடன்  அலைகிறது 
துணையற்ற   பாசமிகு  தாய்மனசு
காலம்  காரிருளாய்  நீண்டுபோச்சு 
பெத்தவள்  கண்ணீரும்  வற்றிப்போச்சு
முகமும்  குழியாகி  சோபைபோச்சு 
பிள்ளைகளை  பார்க்கும்  காலம்  நீண்டுபோச்சு
பெற்றோர்  பேணி  பராமரித்தல் 
பிதாமாதாக்களை  பிள்ளை  பேணுதல்
நாம்  குழைக்கும்  ஒவ்வொரு  கவளத்தையும் 
நன்றியுள்ளது  தனக்கேயென  வாய்பார்ப்பதும்
எம்மை  பெத்ததுகள்   பார்க்கும்  காலம்.
கவிதை- பொலிகை ஜெயா 
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

உலகத் தொல்காப்பிய மன்றம்

.
உலகத் தொல்காப்பிய மன்றம்
தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும்

நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள இந்த நூலில் 1600 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. தில்ள்ள இலக்கணச் செய்திகளும், மொழியியல் செய்திகளும் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளனஇந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும்அயலகத்து அறிஞர்களும் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர்தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர்தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளனதொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுதொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளதுதொல்காப்பியம் குறித்த ஆய்வுகள்பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

திருமுறைத் தேன் அமிர்தம் - 23.08 2015 மாலை 6 மணி

.













சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது. முருகபூபதி

.
எழுத்தாளர்,   ஆய்வாளர்,   நடிகர்,   ஒளிப்படக்கலைஞர்
கலைவளன்   சிசு. நாகேந்திரனுக்கு  95  வயது.
முதிய  வயதிலும்  தமிழ்  அகராதி  எழுதியவர்


காலம்  தரித்து  நிற்பதில்லை.   அதனால்  வயதும்  முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.   இறுதியில்  முதுமை  வரும்பொழுது  உடன் வரும்  நண்பர்கள்  தனிமை,   இயலாமை,   நனவிடை  தோயும் இயல்பு.   எல்லாம்  போதும்  என்ற  மனப்பான்மை.
ஆயினும் -  முதுமையிலும்  ஒருவர்  அயராமல்  இயங்குவதென்பது கொடுப்பினை.   அவ்வாறு  மருத்துவனையில்  தங்கியிருக்கும் வேளையிலும்  தமிழ்  அகராதியொன்றை   தயாரிப்பதற்காக குறிப்புகளை    பதிவு செய்துகொண்டிருக்கும்  எம்மத்தியில்  வாழும் ஒரு    மூத்தவர்  பற்றியதே   இந்தப்பதிவு.
அவர்தான்   அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  பல்துறை ஆற்றல்  மிக்க  கலைவளன்  சிசு. நாகேந்திரன்.
அவருக்கு  நேற்று  09-08-2015  ஆம்  திகதி  95  வயது  பிறந்தது. அவருக்கு   மனமார்ந்த  வாழ்த்துக்களை   தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை   தொடருகின்றேன்.
இந்த  95   வயதிலும்   அயராமல்  இயங்கி   கலை,   இலக்கிய  மற்றும் சமூக  நிகழ்வுகளுக்கு  வருகைதரும்  எழுத்தாளர்  சிசு. நாகேந்திரன் அவர்கள்,    அவுஸ்திரேலியாவில்  வருடந்தோறும்  தமிழ்   எழுத்தாளர்   விழாவை   நடத்திவரும்  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   காப்பாளர்.   சில  வருடங்களுக்கு  முன்னர்  இந்த அமைப்பின்  தலைவராகவும்  பணியாற்றியவர்.

திரும்பும் கடிதங்கள் ( Return to Sender ) - வா மணிகண்டன்

.


அமெரிக்க வாழ் நண்பரொருவர் ஒரு படத்தை பரிந்துரைத்திருந்தார். அவர் மரண தண்டனைக்கு ஆதரவானவர். ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து அந்தப் பிரச்சினையை அணுகினால் மரண தண்டனை சரியானதுதான் என்கிற முடிவுக்கு வந்துவிடலாம் என்று சொல்லியிருந்தார்.  

கதையின் நாயகி செவிலியராக இருக்கிறாள். அறுவை சிகிச்சை செய்யும் செவிலியராக வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட பணிமாற்றம் உறுதியாகிவிட்டது. அதே சமயத்தில் ஒரு வீடு வாங்கவும் விரும்புகிறாள். அதற்காக ஒரு தரகரை அணுகுகிறாள். அவளுக்கு பிடித்தமான வீடும் அமைந்துவிடுகிறது. புது வீடு; புது வேலை- மிக சந்தோஷமாக இருக்கிறாள். நாயகியுடன் அவளுடைய அப்பாவும் அவர் வளர்க்கும் ஒரு செல்ல நாயும் இருக்கிறார்கள். நாயகிக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம். அவளுக்கு அப்பாவைப் பிடிக்கிறது. ஆனால் நாயைப் பிடிப்பதில்லை. நாய் பிடிக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சினையா? வாழ்க்கை வெகு அமைதியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. 

இந்தச் சமயத்தில் அவளுடைய தோழி கெவின் என்னும் மனிதரைப் பற்றிச் சொல்கிறாள். கெவினுடன் பழகிப் பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கிறாள். ஒருவேளை பிடித்திருந்தாள் நாயகி தனிமையிலேயே இருக்க வேண்டியதில்லை என்பது தோழியின் பரிந்துரைக்கான காரணம். காதலில் விழக் கூடும் அல்லவா? அதற்கு நாயகியும் சம்மதிக்கிறாள். கெவினைச் சந்திக்க ஒத்துக்கொண்ட நாளன்று நாயகியின் வீட்டுக்கு யாரோ ஒருவன் வருகிறான். வந்திருப்பவன் கெவினாக இருக்கக் கூடும் என்று நாயகி நம்புகிறாள். அவனை உள்ளே வரச் சொல்கிறாள். காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றவுடன் வந்தவன் அத்து மீறுகிறான். தனது அனைத்து பலத்தையும் முயன்று பார்க்கிறாள். ஆனால் அவனுக்கு முன்னால் அவளது பலம் வேலைக்கு ஆவதில்லை. அவளுடன் முரட்டுத் தனமாக மோதி அவளைச் சூறையாடுகிறான். காரியம் முடிந்தவுடன் அவன் தப்பி ஓடுகிறான்.

கோயிலும் சங்கமும் - சிறுகதை - கே.எஸ்.சுதாகர் -



நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர் செந்தி வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, "எங்களுக்குக் கிட்ட பத்து நிமிஷம் கார் ஓடும் தூரத்தில் ஒரு கோயில் இருக்கு" என்று நண்பர் சொன்னார். முதலிலேயே சொன்னால் எங்களை அங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டி வரலாம் என நினைத்து அவர் இதை எங்களுக்குச் சொல்லவில்லை.

நண்பர் கோயிலுக்கு எல்லாம் போவதில்லை. நண்பரின் குடும்பத்திற்கும் கரப்பான் பூச்சிக்கும் ஏதோ ஒரு வகையில் பூர்வ ஜென்மத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். கரப்பான் பூச்சிகள் வெளிச்சத்தைக் கண்டு பதகளித்து ஓடுவது போல, அவர்களும் மனிதர்களைக் கண்டு பதட்டப்பட்டு ஓட்டமெடுக்கின்றார்கள். கடைகளுக்குப் போய் வருவது என்றால் கூட ஒரு 'ஒட் ரைமில்'தான் போய் வருகின்றார்கள். அதுவும் சுவர்க்கரையோரமாக பதுங்கிப் பதுங்கியே போய் வருகின்றார்கள்.

வீடு மாறும் போது கார் ஒன்றும் எடுத்துக் கொண்டோம்.

கல்லும் சொல்லாதோ கதை (சிறுகதை) - முருகபூபதி

.
திருவிழா ஆரம்பமாகிவிட்டது.
இனி  உற்சவமூர்த்திகள்  உற்சாகமாக  வலம்  வருவார்கள். பக்தர்களும்  'அடியார்' களும்  உற்சவமூர்த்திகளைத் தேடி ஓடிவருவார்கள்.
கலகலப்புக்கும்,  பரபரப்புக்கும்,  பதட்டத்திற்கும்  இனி  குறைவிருக்காது.
கொடிகள் ,  கோபுரங்களில்,  கட்டிடங்களில்,  மரங்களில், மின்கம்பங்களில்,  வீடுகளில்,  வாகனங்களில்  வண்ணம்  வண்ணமாக ஏறி  காற்றில்  அசைந்து  இனம்காண்பிக்கும்.
பச்சை,    நீலம்,  சிவப்பு.   இப்படி  வர்ணங்களில்  அவை  பட்டொளி வீசும்.
ஆனால்,   கறுப்பு,  வெள்ளைக் கொடிகள்   வடக்கிலும்  கிழக்கிலும் யுத்தம்புரியச்சென்று  மரணித்து  பரலோகம்  சென்றவர்களின் இல்லங்களில்   மாத்திரம்  சோகத்தை   பறைசாற்றிக்கொண்டு  காற்றில் அசையும்.
உற்சவமூர்த்திகள்   வண்ணப்படங்களில்  சுவர்களில்  அலங்கரிப்பர். வானொலிகளில்   குரல்  எழுப்புவர்.   தொலைக் காட்சிகளில்  தரிசனம் தருவர்.    பத்திரிகைகளில்  கைகூப்பியும்,   கையசைத்தும் காட்சியளிப்பர்.
புல்லடிகளுக்குப் பக்கத்திலிருக்கும்  உருவங்களுக்கு  மரியாதை பிறக்கும்.
'ஸ்ரீ  ஜயவர்தனபுர '  பக்கம்  சென்று வராதவர்கள் -   மக்கள்  பக்கம் செல்லாமலேயே   'ஆசனங்களில் '  அமர்வதற்கு   ஆசைப்படுவர்.
திருவிழா  களைகட்டத் தொடங்கியிருப்பதனால்,  ' தேங்காய்கள் ' உடைக்கப்பட்டு  எறிந்து  சிதறப்படும்.

இலங்கைச் செய்திகள்



மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்

சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு     

அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் நாமல்

 பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்

வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு









மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்

12/08/2015 விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவவைகள் பல மில்லியன்கள் கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். முதல் தடவை 200 மில்லியன் ரூபா பணத்தையும், 2005 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2000 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகச் செய்திகள்


சிங்­கப்­பூரின் 50 ஆவது சுதந்­திர தினம்

சொலமன் தீவு­களை உலுக்­கிய 6.9 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்

நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்கச் செய்து 10 கைதிகளுக்கு மரணதண்டனை

நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு

சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை

சீன துறைமுகத்தில் களஞ்சியசாலையில் வெடிப்பு

எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை

54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்

இந்­தி­யாவின் 69 ஆவது சுதந்­தி­ர ­தின விழா





சிங்­கப்­பூரின் 50 ஆவது சுதந்­திர தினம்

10/08/2015 சிங்­கப்­பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அந்நா­டெங்கும் விம­ரி­சை­யாக கொண்­டா­டப்­பட்­டது.

தமிழ் சினிமா


செல்வந்தன்



தெலுங்கு திரையுலகின் இளவரசனாக வலம் வரும் மகேஷ் பாபு முதன்முறையாக தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் செல்வந்தன்.
கடைசியாக நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவ இப்படத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கி அடித்துள்ளார் மகேஷ் பாபு.
ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, சம்பத்ராஜ், பிரேமானந்தம் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் கொரடலா சிவா இயக்கியுள்ளார்.
படத்தின் கதை
மிகப்பெரும் கோடிஸ்வரனாக வலம்வருபவர் ஜகபதி பாபு. இவரது ஒரே மகன் மகேஷ் பாபு வெளிநாடுகளில் படித்து நாடு திரும்புகிறார். தொழிலில் விருப்பம் இல்லாமல் திரியும் இவர் ஸ்ருதிஹாசனை சந்திக்கிறார்.
பார்த்ததும் காதல் பற்றிக்கொள்ள ஒரு கட்டத்தில் தான் யார் என்பதை ஸ்ருதிஹாசனுக்கு மகேஷ்பாபு சொல்ல காதலை மறுக்கிறார்.
என்னுடைய தாத்தா அவர்களது சொந்தம் பற்றி தெரியும், பணக்காரனாக இருக்கும் உனது பூர்வீகம் பற்றி தெரியுமா என்று கேட்கிறார்.
அதன் பின்னர் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள், மேலும் தனது தந்தை தொழிலிலும் ஒரு பிரச்சனை, ஸ்ருதிஹாசனின் காதல்.
இது அனைத்திலும் வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை..
நடிகர், நடிகைகள்
பெண்கள் ரசிக்கும் விதமாக மகேஷ் பாபு மிக அழகாக பளிச்சிடுகிறார். ஆக்ஷனிலும் பின்னி எடுக்கிறார். ஸ்ருதிஹாசனும் தனது பங்கை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவருக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. ஜகபதி பாபு தான் அனுபவ நடிகர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தேவிஸ்ரீ பிரசாத் தனது வழக்கமான அதிரடி இசையில் மிரட்டியுள்ளார். மதியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகளில் அனல் அரசு பின்னி எடுத்துள்ளார். தனது திறமையான திரைக்கதையால் மெருகேற்றியுள்ளார் இயக்குனர் கொரடலா சிவா.
க்ளாப்ஸ்
அதிரடியான வசனங்கள், ஜகபதிபாபுவின் ப்ளாஷ்பேக் காட்சிகள். இடைவேளைக்கு முந்தைய மற்றும் இரண்டாம் பாதி காட்சிகள்.
பல்ப்ஸ்
யூகிக்க கூடிய கதை, முதல் பாதி காட்சிகள், ஸ்ருதிஹாசனின் மேக்அப்பை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மீண்டும் ரசிகர்களின் பிரின்ஸ் ஆனார் இந்த செல்வந்தன்.
Rating: 3.25/5 
நன்றி cineulagam