படங்களில் நடிக்கத் தொடங்கிய காலம் தொட்டு எம் ஜி ஆர் , சிவாஜி என்று மாறி மாற்றி அவர்களுடன் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. அப்படி நடித்த ஜெயலலிதா சிவாஜியுடன் கடைசியாக நடித்த படம் சித்ரா பௌர்ணமி.
சிவாஜியுடன் நட்புறவில் இருந்த ஜெயலலிதாவின் தாயான சந்தியா அவரின் பல படங்களில் தொடர்ந்து நடித்தவராவார். ஆனாலும் திரைக்கு அறிமுகமாகி மூன்றாண்டுகள் கழித்தே கலாட்டா கல்யாணம் படத்தின் மூலம் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்தார். அதன் பின் பல வெற்றி படங்களில் அவர்கள் இணைந்து நடித்த போதும் புது நடிகைகளின் வருகையை தொடர்ந்து இதற்கொரு முடிவு வந்தது. அது சித்ரா பௌர்ணமி மூலம் முடிவானது.
சிவாஜி நடித்த மூன்று தெய்வங்கள் படத்தை தயாரித்த இப்
படத்தையும் தயாரித்தது. அந்தப் படத்துக்கு கோபு கதை வசனம் எழுத தாதா மிராசி இயக்கி நகைச்சுவை கலந்த சமுகப் படமாக வந்து ஓரளவு வெற்றி கண்டது. மீண்டும் தங்களின் அடுத்த படத்துக்கு அவர்களை பயன்படுத்தாமல் மாதவன், பாலமுருகன் கூட்டணியிடம் படத்தை ஒப்படைத்தார்கள். ஆனால் அவர்களால் படத்தை வெற்றி படமாக்க முடியவில்லை.

காரணம் படத்தின் கதைதான். ஒளிப்பதிவாளர் கர்ணன் ஏற்கனவே ஜெய்சங்கர் நடிப்பில் எடுத்து விட்ட பட கதைகளை தொகுத்து சிவாஜியை நடிக்க வைத்து படமாக்கியது எடுப்பட வில்லை.
ஒரு கொடுமைக்கார ஜமீன்தார் . அவரின் அட்டூழியத்தினால்
செங்கோட்டையன் சிறு வயதிலேயே பெற்றோரை பறி கொடுக்கிறான். தங்கையை விட்டும் பிரிகிறான் . ஊரில் உள்ள வைத்தியர் அவனை வளர்க்கிறார். ஆனால் அவனோ நெருப்பாக ஜமீன்தாரை பழி வாங்கும் புலியாக வளர்கிறான். எந்த சித்ரா பௌர்ணமி அன்று ஜமீன்தார் அவன் பெற்றோரை கொன்றாரோ அதே போன்ற பௌர்ணமி அன்று அவரை கொள்வதே அவனின் ஒரே இலட்சியம். ஆனால் ஜமீன்தாரின் மகள் அவனை விடாமல் காதலித்து ஒரு வழியாக கல்யாணமும் பண்ணிக் கொள்கிறாள். பிரிந்த தங்கையோ எங்கோ வளர்ந்து ஜமீன்தார் மகனை கல்யாணம் பண்ணி ஒரு மகனுக்கு தாயுமாகி விடுகிறாள். காதலி, தங்கை இருவரும் மாறி மாறி சொல்லியும் ஜமீன்தாரை ஒழித்துக் கட்டும் பழியுணர்வு செங்கோட்டையனை விடுவதாக இல்லை . இறுதியில் செங்கோட்டையன் சபதம் நிறைவேறியதா என்பதே படத்தின் மீதி.

கதையில் எந்த புதுமையும் இல்லாத போதும் செங்கோட்டையன்
பாத்திரத்தை நிறைவாக செய்திருந்தார் சிவாஜி. எந்த இடத்திலும் சமரசம் செய்யாத பாத்திரம், அதே போல் நடிப்பிலும் எந்த சமரசமும் செய்யாமல் நடித்திருந்தார். அவருக்கு இணையாக வரும் ஜெயலலிதா ஆரம்பத்தில் கவர்ச்சியை வழங்குகிறார். பின்னர் நடிப்பை வழங்க முயற்சி செய்கிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவை கொடுமைப் படுத்தியது போல் எந்த படத்திலும் சிவாஜி கொடுமைப் படுத்தியதியதில்லை . கன்னத்தில் அறைகிறார் , குதிரையில் கட்டி இழுக்கிறார், மேடு பள்ளம் என்று அலைய விடுகிறார் , கடைசிப் படத்தில் இப்படியா !

படத்தில் இன்னுமொரு ஜோடி முத்துராமன் , விஜயகுமாரி. இருவரும் தங்கள் வழமையான நடிப்பை தருகிறார்கள். ஆனால் அண்ணன் எங்கே மாமனாரை போட்டுத் தள்ளி விடுவானோ என்ற பதைபதைப்பை விஜயகுமாரி நன்றாக வெளிப்படுத்துகிறார்.
அன்றைய கால கட்டத்தில் சிவாஜியின் எல்லாப் படங்களிலும் மனோகர் வில்லனாக நடித்து வந்தா
ர் . இதிலும் அவரே வில்லன். ஜமீன்தாராக கொடூர வில்லனாக வந்து இறுதி வரை அப்படியே தன் கேரக்டரை தக்க வைத்துக் கொண்டார். நாகேஷ் சின்ன ஜமீன்தார். அவர் இருப்பது இந்த முரட்டுப் படத்துக்கு ஓர் ஆறுதல். சுந்தரராஜன் இருந்தும் சொல்லும்படி இல்லை. இவர்களுடன் செந்தாமரை, ஜெயக்குமாரி, ஹெரான்ராமசாமி ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கு பாலமுருகன் கதை வசனம் எழுதினார். கண்ணதாசன் பாடல்களுக்கு எம் .எஸ் . விஸ்வநாதன் இசையமைத்தும் வந்தாலும் வந்தாண்டி ராஜா பாடல் மட்டுமே எடு பட்டது. பி .என் . சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார்.
படம் நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து 1976ல் திரைக்கு வந்தது. படத்தில் எல்லோரும் நவீன முறையில் ஆடை அணிந்திருக்க சிவாஜி மட்டும் ஆதிவாசி போல் அல்லது செவ்விந்தியர் போல் தோற்றமளித்தார். இது ரசிகர்களை கவரவில்லை. கதையிலும் புதுமை இல்லை. பாடல்களும் எடுபடவில்லை. சிவாஜிக்கு பல வெற்றி படங்களை கொடுத்த மாதவன், பாலமுருகன் யுநிட் இப் படத்தில் பலத்த அடி வாங்கியது . எங்க ஊர் ராஜா , ராமன் எத்தனை ராம , பட்டிக்காடா பட்டணமா போன்ற படத்தை இவர்களிடம் எதிர்பார்த்த ரசிகர்கள் சித்ரா பௌர்ணமிக்கு பதில் அமாவாசையை கண்டார்கள்!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment