அன்பே உலகை ஒன்றிணைக்கும் சக்தி

 ஒரு மதத்தை மற்றொரு மதத்திற்கு எதிராகத் தூண்டும் எந்தவிதமான பிரசாரத்திற்கும் இடமளிக்கக் கூடாது. ஒரு நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும். மனிதகுலம் ஒரே குடும்பமாக மாற வேண்டும். அப்போதுதான் உலகம் ஒரு சொர்க்கபூமியாக விளங்கும்.

வேறுபாடுகள் வளர அனுமதிக்கப்பட்டால், நாடு சிதைவடையும். அணுகுண்டுகள் உலகத்தை சாம்பலாக்கிவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் மத வெறியையும் பகையையும் பரப்புபவர்கள், அணுகுண்டுகளைவிட மோசமான தீமையைச் செய்கிறார்கள். அவர்கள் மனித இதயங்களில் உள்ள அன்பையும் கருணையையும் அழிக்கிறார்கள். மனிதகுலத்தைப் பல துண்டுகளாகப் பிரிக்கிறார்கள். இதைவிடப் பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை.

இன்றைய உலகிற்கு மிகவும் தேவைப்படுவது அன்பின் மீட்பும் ஒன்றிணைக்கும் சக்தியுமே ஆகும். அந்த அன்பு தொடர்ந்து விரிவடைந்து, மேலும் மேலும் பலரைத் தழுவிக் கொள்ள வேண்டும்.

தனது மதம், நாடு அல்லது சாதி பற்றிய குறுகிய மனப்பான்மையை விட்டொழித்து, பரந்த நோக்கை வளர்த்துக் கொண்டு, நல்லோரின் நட்பை நாடுவதன் மூலம், ஒருவர் தனது வாழ்க்கையை உயர்ந்ததாக்கவும், அர்த்தமுள்ளதாக்கவும், நிறைவானதாக்கவும் முடியும்.

No comments: