அதை வைத்து அது என்ன செய்யும்
கழுத்தில் போட்டு அழகு பார்க்குமா
கண்டபடி அதனை பிய்த்து எரியுமா
ஓவியன் கையில் தூரிகை கிடைக்க
காவியமாக கருத்தினை கூறுவானா
எண்ணங்களை வண்ணங்கள் செய்து
கண்கவரும் ஓவியத்தை படைப்பானா
வானரம் தன் இயல்பு நிலையை மாற்றி
மந்தியொடு கொஞ்ச வேண்டுமெனில்
மலையில் மாமரங்கள் கனிய வேண்டும்
வற்றாமல் காதலும் அங்கே கனிந்திடும்
மாறாக மனதில் வேறொன்று தோன்றின்
சீறுகொண்டே சிந்தை தடுமாறி நிற்கும்
வீறுகொண்டு எழும் கூறுகெட்ட மாந்தராய்
ஊறாகவே உற்றதல்லா செய்து மகிழுமாம்
பொருப்பென்ற ஒன்று கையில் கிடைக்க
விருப்பு வெறுப்புன்றி கடமையாற்றினால்
நிறைகுடம் போன்றதோர் தன்மை அடைவர்
குறைகுடமானால் குரங்கு கை பூமாலையே
-சங்கர சுப்பிரமணியன.

No comments:
Post a Comment