அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் பரிசு பெற்ற நூல்கள் - சிறப்புப் பேட்டி

 அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும்,  அஸ்திரேலியா தமிழ் இலக்கிய


கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது.


அவற்றுடன், கடந்த சில வருடங்களாக, இச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும், புதியவர்களை எழுதத் தூண்டுவதுடன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகில் களம் அமைத்துக்கொடுப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயற்படுத்தப்படுகிறது.

நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில், ஒவ்வொன்றிலும் கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை  ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
 
அந்த வகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்கள்  பின்வருமாறு:  
 நாவல்: ஆத்ம அசைவுகள்.    
நூலாசிரியர்: - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
சிறுகதைத்தொகுதி:  முல்லைக் கோணேஸ் சிறுகதைகள்
நூலாசிரியர்: நடராசா கோணேஸ்வரன் (முல்லைக் கோணேஸ்) புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
கட்டுரை: நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்
நூலாசிரியர்: சஞ்சீவ் குமார், நற்பிட்டிமுனை, கல்முனை
கவிதைத் தொகுப்பு : ஹுருலீன்கள்
நூலாசிரியர்  - அஷ்ரபா நூர்தீன்
பாலையூற்று, திருகோணமலை.

இந்த பரிசுப் போட்டி தொடர்பான சிறப்புப் பேட்டியை வழங்குகிறார் சங்கத்தின் நடப்பாண்டுத் தலைவர் பாடுமீன் சு.ஶ்ரீகந்தராசா 

No comments: