இன்று மனித உரிமைகள் நாள் 10 டிசெம்பர் காஸாவிற்கு விதிவிலக்கு - செ .பாஸ்கரன்
டிசம்பர் 11 - மகாகவி பாரதிக்கு 141 வயது ! டிசம்பர் 06 - பேராசிரியர் கைலாசபதி நினைவு தினம் !! பாரதி இயலில் தினகரனின் வகிபாகம் ! ! ! முருகபூபதி
ஏரிக்கரை பத்திரிகை ( Lake House) என வர்ணிக்கப்படும் தினகரன்
1932 ஆம் ஆண்டு முதல் நாளிதழாக வெளியாகிறது. 23-05-1948 ஆம் திகதியன்று தனது முதலாவது தினகரன் வாரமஞ்சரியை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
ஆங்கில,
சிங்கள ஏடுகளையும் சஞ்சிகைகளையும் வெளியிட்டுவரும் ஏரிக்கரையிலிருந்து இயங்கும் Lake
House என்ற
பெரிய நிறுவனத்தின் ஒரே ஒரு தமிழ்த்தினசரி தினகரன், வெளிவரத்தொடங்கிய காலகட்டத்தில் மற்றும் ஒரு
இந்திய ஊடகம் என்ற மாயைதான் இலங்கை வாசகர்களிடம்
உருவாகியிருந்தது.
தினகரனை இலங்கையின் தமிழ்த் தேசியப்பத்திரிகையாக்கிய
பெருமை பேராசிரியர் க. கைலாசபதியையே சாரும். இவருக்கு முன்னர் கே.க.ப. நாதன் தினகரன் ஆசிரியராக பணியாற்றினார். பின்னாளில் இவர் கொழும்பில் தினபதி, சிந்தாமணி, வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜத்தின் தந்தி மாலைத் தினசரியின் ஆசிரியரானார்.
உயர்வாக மதிக்கப்பட்ட அரச நிர்வாகப்பதவியொன்றினைத் தேடியிருக்கவோ அல்லது உயர் கல்வி ஆராய்ச்சித்துறையில் இந்நாட்டிலோ வெளிநாடு சென்றோ, மேலுக்கு வந்திருக்கவோ கூடும். ஆனால், கைலாஸ் அவ்வாறு செய்யாது பத்திரிகையுட் புகுந்தார். அதனை வருவாய்க்கு வழியாக அன்றி, அதன் வாய்ப்புகளை உகந்தவாறு பயன்படுத்துவதில் கைலாஸ் குறியாயிருந்தமை தெளிவாகும்.
கைலாஸ்
பத்திரிகைத்துறையுட் புகுந்த காலம் மேலைத்தேய நாகரிகமும் ஆங்கில
மொழியும் தம் ஆதிக்கத்தை இழக்கத்தொடங்கிய காலம்.
தினகரனில்
அவ்வேளையில் கதைகள் படைத்தவர்கள் சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா
பீச்சையும் பகைப்புலமாகக்கொண்டு எழுதினார்கள். இதனால்
அன்றைய ஈழத்து தமிழ்த்தேசிய படைப்பிலக்கியம் தேக்கம்
கண்டது.
அஞ்சலிக்குறிப்பு நெடும்பயணத்தில், பாதி வழியில் விடைபெற்ற பேராசிரியர் செ. யோகராசா ! முருகபூபதி
கண்டியிலிருந்து கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை என்னைத்தொடர்புகொண்ட எழுத்தாளர் நொயல் நடேசன், எங்கள் இலக்கிய நண்பர் பேராசிரியர் செ. யோகராசா மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னார்.
உடனே கொழும்பிலிருக்கும் பேராசிரியை சித்திரலேகா மௌனகுருவை
தொடர்புகொண்டு அந்தச்செய்தியை ஆழ்ந்த கவலையுடன் உறுதிப்படுத்தினேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னர், மகரகமக மருத்துவமனைக்குச்சென்று
அவரைப் பார்த்ததாகவும், கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததாகவும் சித்திரலேகா சொன்னார்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பயணத்தில் இணைந்து
வந்திருக்கும் எமது அருமை நண்பர் செ. யோகராசாவின் அருமைத் துணைவியார் விஜயதிலகிக்கும்
ஏகபுதல்வி சுவஸ்திகாவுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன்,
அவர்களின் துயரத்திலும் பங்கெடுத்து இந்த அஞ்சலிக்குறிப்பினை எழுதுகின்றேன்.
இலங்கையில் வடமராட்சி பிரதேசம் பல இலக்கிய ஆளுமைகளையும்
கல்விமான்களையும் பெற்றெடுத்த மண். 1949 ஆம் ஆண்டு, கரணவாய்
கிராமத்தில் செல்லையா – இலட்சுமி தம்பதியரின் செல்வப்புதல்வனாக பிறந்திருக்கும் யோகராசா,
தனது ஆரம்பக்கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை நெல்லியடி மத்திய
மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்தவர்.
பாடசாலைப் பருவத்திலேயே கவிதைகள் எழுதத்தொடங்கியிருக்கும் யோகராசா முதலில் கருணையோகன் என்ற
புனைபெயரிலேயே இலக்கியப்பிரதிகள் எழுதினார்.
தமிழில் கலைமாணி
பட்டத்தினையும் அதனையடுத்து இளந் தத்துவமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டு தபால்
நிலையத்தில் தனது தொழில் வாழ்வைத் தொடங்கினார்.
இவரைப்போன்று எனக்குத்தெரிந்த சில இலக்கியவாதிகள் அக்காலப்பகுதியில் தபால் நிலையங்களில் பணியாற்றி வந்தனர். (அமரர்) நாகேசு தருமலிங்கம், அ.யேசுராசா, ரத்னசபாபதி அய்யர் முதலானோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அவர்கள் இறுதிவரையில் தபால் நிலையங்களில்தான் பணியாற்றினர்.
நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக் காட்டிடும் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
உண்ண மறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக் காட்டியே - இங்கு
பூரணையாய் வந்து நீயும் பொலிந்து விளங்குவாய் - அதை
உன் வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் - இங்கு
கரிகாற் சோழன் விருதுகள் பெற்ற இலங்கை – அவுஸ்திரேலியா எழுத்தாளர்கள்
தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறையில் , சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை நிறுவியுள்ள
தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கை வாயிலாக வழங்கப்படும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச்சேர்ந்த இலக்கியப்படைப்பாளிகளுக்கான கரிகாற்சோழன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 05 ஆம் திகதி நடைபெற்றது.
இம்முறை இந்த விருதுகள் இலங்கையரான , தற்போது அவுஸ்திரேலியாவில்
வதியும் எழுத்தாளர் – விலங்கு மருத்துவர் நொயல்
நடேசன் எழுதிய பண்ணையில் ஒரு மிருகம் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை எழுத்தாளர் சிவஆரூரன் எழுதியுள்ள ஆதுரசாலை என்ற நாவலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழும் தங்கப்பதக்கமும் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர்.
நொயல் நடேசன், சிறுகதை, நாவல், பயண இலக்கியம் மற்றும்
விலங்கு மருத்துவம் தொடர்பான அபுனைவு படைப்புகள் பலவும் எழுதியிருப்பவர். இவரது சில நூல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.
சிவ. ஆரூரன் சில வருடங்கள் இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டு,
பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்.
சிறையிலிருந்தவாறே இலக்கியப்பிரதிகள் எழுதியிருக்கும் சிவஆரூரனின்
ஆதுரசாலை நாவலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருதும் கிடைத்திருக்கிறது.
சீனா தொடர்பில் அவதானம் தேவை
December 9, 2023
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் – பிராந்திய சக்தியான இந்தியாவின் கரிசனைகள் தொடர்பில் ஆட்சியாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.
மேலாதிக்க மனோநிலை மாறாதவரையில்
December 7, 2023
‘அரசாங்கத்துக்கு நல்லிணக்கத்தில் அக்கறை இல்லை’, என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். அவரின் கருத்து முற்றிலும் சரியானது.
வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 18 ஆண்டுகள் ❤️ ✍🏻
இதுவரை 467 பதிவுகள் 
"ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுமாக"
மடத்துவாசல் பிள்ளையாரடி தளத்திலும்
http://kanapraba.blogspot.com/
881 பதிவுகள் 
"என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் நல்மருந்தாய் அமையும்
இசைப் பகிர்வுகளுக்காக"
றேடியோஸ்பதி தளத்திலும்
139 பதிவுகள் 
"எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப் பிடிக்கும் அதற்காக"
உலாத்தல் தளத்திலும்
என்று வகைப்படுத்தி எழுதியிருக்கிறேன், இன்னும் தொடர்வேன்.
146 பதிவுகள் 
வீடியோஸ்பதி தளத்திலும்
https://www.youtube.com/c/
காசி யாத்திரை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
1973ம் வருடம் வெளிவந்த காசி யாத்திரை என்ற இந்த படத்தின் பேரைப் பார்த்து பக்திப் படம் என்று நினைத்து விடாதீர்கள்! முழு நீள நகைச்சுவை படமாக இதனை எடுத்திருந்தார் இயக்குனர் எஸ் பி முத்துராமன். இவருடைய ஆரம்ப கால படங்களுள் ஒன்றாக இப் படம் அமைந்தது.
பணிபுரிந்தவர் முத்துராமன். ஏவி எம் நிறுவனம் காசேதான் கடவுளடா படத்தை தயாரித்த போது அப் படத்தை இயக்கும் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் ஏவி எம் செட்டியார் படத்தை இயக்கும் பொறுப்பை அப் படத்தின் கதை வசனத்தை எழுதிய கோபுவிடமே ஒப்படைத்தார். அது மட்டுமன்றி கோபுவின் உதவியாளராக பணியாற்றும் படி முத்துராமனிடம் சொன்னார். படவுலகில் தனக்கு சமமான அனுபவத்தை கொண்ட கோபுவின் உதவியாளராக பணியாற்ற முத்துராமனின் தன் மானம் இடம் தரவில்லை. செட்டியாரிடம் சண்டை போட்டுக் கொண்டு ஏவி எம் நிறுவனத்திலிருந்து விலகி விட்டார். அவ்வாறு விலகி ஊருக்கு புறப்பட்ட முத்துராமனை தடுத்தாற் கொண்ட கதாசிரியரும், தயாரிப்பாளரும் , அவரின் நண்பருமான வி சி குகநாதன் தான் கதை வசனம் எழுதி தயாரிக்கும் சில படங்களை அடுத்தடுத்து டைரக்ட் செய்யும் வாய்ப்பை முத்துராமனுக்கு வழங்கினார். அப்படி வழங்கப்பெற்ற படங்களில் ஒன்று தான் காசி யாத்திரை.
இலங்கைச் செய்திகள்
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்
‘இமயமலைப் பிரகடனம்’ ஜனாதிபதியிடம் கையளிப்பு
பேராசிரியர் யோகராசா நேற்று காலமானார்
தாமரை கோபுரத்தால் 14 மாதங்களில் மட்டும் ரூ. 102 கோடி வருமானம்
சமாதானத்தின் செய்தி தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி
உலக தமிழர் பேரவை யாழ். விஜயம்
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை அகற்றம்
- இந்துக்கள் கவலை; இந்தியா தலையீடு
கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டமை தொடர்பாக இந்திய – இலங்கை உள்ளிட்ட உலகம் வாழ் இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர்.
உலகச் செய்திகள்
கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்
காசாவின் மிகப்பெரிய நகரங்களில் தொடர்ந்து உக்கிர மோதல் நீடிப்பு
மேற்குக் கரையில் 6 பலஸ்தீனர்கள் பலி
விமான நிலையம் அளவு நிலத்தில் 1.8 மில். மக்களை அனுப்ப திட்டம்
காசா விவகாரத்தில் குட்டரஸ் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தம்
கைது செய்யப்பட்டு உடை களையப்பட்ட பலஸ்தீனர்கள்
வடக்கு காசாவில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கி இருந்த பாடசாலை ஒன்றுக்கு அருகில் கைது செய்யப்பட்ட பலஸ்தீன ஆடவர்கள் பலரையும் இஸ்ரேலிய படை அவர்களின் உடைகளை அகற்றி உள்ளது.
நல்லைநகர் நாவலர் பெருமான் காலத்தின் குரலாய் ஒலித்து நின்றார் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
உலகின் எந்த மொழிகளிலும் பக்தி இலக்கியம் என்று சுட்டிக் காட்டப்படும் அளவுக்கு இல்லை என்பதே அறிஞர்களின் கருத்தாக அமைகிறது எனலாம். இந்தப் பக்தி இயக்கத்தின் முதற் குரலாய் தமிழ் உலகில் ஒலித்த குரல் ஒரு பெண்மணியின் குரல் என்பதை மனமிருத்தல் அவசிமாகும். அவர்தான் காரைக்கால் தந்த பெருமாட்டி , தவப் புதல்வி காரைக்கால் அம்மையார் ஆவர்.
இவர் சைவ பக்தி இயக்தின் எழுகின்ற ஞாயிறாய் - பின்னர் வந்த அடியார்கள் அனைவருக்குமே ஆதார மான குரலாய் விளங்குகிறார் எனலாம்.சைவத் திருமுறைகளின் தோற்றத்தின் குரலாயும் நிற்கின்றார். இவர் சைவத்தைக் காத்திடக் கையில் எடுத்தது அமிர்தமாம் தமிழ் மொழியையேயாகும்.தமிழ் மொழியில் -அற்புதத் திருவந்தாதி, திரவிரட்டை மணிமாலை,திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் , ஆகியவற்றை அளித்து ஆன்மீகக் குரலாய் ஒலித்து நிற்கிறார்.இவரின் பின்னர் வந்த அடியார்கள் பலரும் , அம்மையா ரைப் பின்பற்றி இறை புகழ் பரப்புவதில் தங்களின் குரலை ஒலித்து நிற்கிறார்கள்.
ஆழ்வார்கள் வந்தார்கள்.ஆளுடைய பிள்ளையார் வந்தார்.அப்பர் வந்தார். ஆலால சுந்தரர் வந்தார். வாத வூர் வண்டும் வந்தது. இவர்கள் அனைவரின் குரல்களும் தமிழில் சைவத்தை நிலை நாட்டிட ஓங்கி ஒலி த்து நின்றன எனலாம். இந்தக் குரல்கள் ஒலித்த காலம் வேறு. அந்தக்காலச் சூழலும் வேறு. அவர்களின் குரலில் காணப்பட்ட தத்துவங்களும் வேறு என்றுதான் கருதிட வேண்டும். அவர்கள் அனைவருமே அந் தக் கால தமிழ் இலக்கியத்தின் போக்கினை மனமிருத்தி பாடல்களை ஊடகமாக கொண்டே தமது குரலை வெளிப்படுத்தும் கட்டாயம் காணப்பட்டது. ஏனெனில் தமிழ் இலக்கியத்தை ஆட் கொண்டு இருந்த வடிவம் பாட்டு அல்லது செய்யுள் வடிவமே யாகும்.
படித்தோம் சொல்கின்றோம்: “ கூற்று “ பெண்களின் குரல் 25 வருடங்கள் மனம்விட்டுப்பேசும் “ வெளிகள் “ பெண்கள் மத்தியில் உருவாகவேண்டும் ! முருகபூபதி
கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் நான் இலங்கையில் நின்றபோது, கொழும்பில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களைச் சந்தித்தேன்.
இவருடனான சகோதர வாஞ்சையான
உறவு எனக்கு 1970 களிலேயே தொடங்கிவிட்டது. பின்னாளில் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்த
பலரதும் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், பேராசிரியையாகவும் திகழந்த சித்திரலேகா பற்றி,
கடந்த 2022 ஆம் ஆண்டு
அனைத்துலக பெண்கள் தினத்தின்போது நான் வெளியிட்ட யாதுமாகி ( 28 பெண் ஆளுமைகள் பற்றியது ) நூலிலும்
எழுதியிருக்கின்றேன்.
பல்கலைக்கழக பேராசிரியையாக
மாத்திரம் இயங்காமல், இலக்கியவாதியாகவும்,
பெண்கள் தொடர்பான விழிப்புணர் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டராகவும் விளங்கியிருக்கும்
சித்திரலேகா, சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.
பல வருடங்களுக்கு முன்னர் இவர் தொகுத்து வெளியிட்ட சொல்லாத
சேதிகள் கவிதை நூல் இன்றளவும் பேசப்படுகிறது.
இம்முறை இவரை நான் சந்தித்தபோது
கூற்று என்ற ஆவணத்தொகுப்பு நூலை எனக்கு படிக்கத்தந்தார். 261 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இத்தொகுப்பினைப் பற்றிய அறிமுகத்தை எழுதுவதற்கு
காலதாமதமாகிவிட்டது. நான் தொடர்ச்சியான பயணங்களில்
இருந்தமையால், இந்தத் தாமதம் நிகழ்ந்தது.
இந்நூலை சூரியா பெண்கள்
அபிவிருத்தி நிலையம் வெளியிட்டிருக்கிறது. இதன் பதிப்பாசிரியர்கள்: சித்திரலேகா – மர்லின் வீவர்.
“ பெண்நிலை அரசியலையும் எமது கதைகளையும் கனவுகளையும்
பகிர்ந்துகொண்டாய் நன்றி நண்பியே. “ என்ற கூற்றுடன்
இந்தத் தொகுப்பு நூலை 2013 ஆம் ஆண்டு மறைந்துவிட்ட, தோழி சுனிலா அபேசேகரவுக்கு சமர்ப்பணம் செய்துள்ளனர்.
1977 இற்குப்பின்னர், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடை நீக்கப்பட்டதும், அவ்வியக்கத்தின் பணிமனை கொழும்பு ஆமர்வீதி – புளுமென்டால்
வீதி சந்தியில் ஒரு மரஆலைக் கட்டிடத்தின் மேல் மாடியில் இயங்கியது. அங்கே செல்லும் சந்தர்ப்பங்களில் தோழி சுனிலாவை,
தோழர் கெலி சேனநாயக்காவுடன் பார்த்துப்பேசி
பழகியிருக்கின்றேன்.
தோழர்கள் ரோகண விஜேவீரா,
லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார முதலான தோழர்களின் பிரியத்திற்குரிய
தோழியாகவும் சுனிலா திகழ்ந்தார்.
அரசியல் இயக்கங்களுக்குள்
காலத்துக்காலம் தோன்றும் முரண்பாடுகளினால், பின்னாளில் சுனிலாவும் அதிலிருந்து ஒதுங்கி,
பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் போராட்டங்களிலும் ஈடுட்டார்.
இவரது மறைவுச்செய்தி அறிந்ததும்
நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருக்கும் தோழர் லயனல் போப்பகேயும் ஒரு இரங்கல்
கட்டுரையை ஊடகங்களில் எழுதியிருந்தார்.
சித்திரலேகா என்னிடம் வழங்கிய
கூற்று தொகுப்பில், தோழி சுனிலா அபேசேகராவின் படத்தை பார்த்ததும் கடந்த காலங்களை
திரும்பிப்பார்த்தேன்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பு, பெண்கள் தொடர்பான பல்வேறு விடயதானங்களையும் சூரியா அமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட அளப்பரிய பணிகளையும், அவை சார்ந்த போராட்டங்களையும் – படங்களையும் சித்திரிக்கின்றமையால், ஆவணமாகவும் விளங்குகிறது.
எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) - அங்கம் 87 ஆற்றல்களை இனம் காண்போம் ! ஆளுமைகளிடம் கற்பதும் பெறுவதும் !! முருகபூபதி
ஒருவருடைய ஆற்றல்களை இனம் கண்டு பாராட்டும் இயல்பு எமது தமிழ் சமூகத்தில் அரிதாகவே காணப்படுகிறது.
ஏனைய சமூகங்களில் நிலைமை
எவ்வாறென்பது தெரியவில்லை. எனது இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் இதுவரையில் எனது
மனைவி மாலதியைப்பற்றி ஏதும் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், சொல்லநேர்ந்தமைக்கு
கடந்த 02 ஆம் திகதி மெய்நிகரில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் காரணமாக அமைந்துவிட்டது. அதுபற்றி பின்னர் சொல்கின்றேன்.
இலங்கையில் வடமராட்சியைச்சேர்ந்த மாலதியின் தந்தையார் பஞ்சநாதன், மருத்துவராக பணியாற்றியமையால், ஏனைய
பிரதேசங்களுக்கும் குறிப்பாக மாத்தளை, ஆண்டி அம்பலம், நைனா மடம், நீர்கொழும்பு நகரங்களுக்கும் அவர் தமது மனைவி, பிள்ளைகளுடன் அடிக்கடி ஊர் விட்டு ஊர் இடம்பெயர நேர்ந்தது.
இறுதியாக இவர்களது குடும்பம்
நீர்கொழும்பினையே வதிவிடமாக்கிக்கொண்டமையால், மாலதியும், நான் முன்னர் கல்வி கற்ற அல்கிலால்
மகா வித்தியாலயத்திலேயே உயர்தரம் கற்றுவிட்டு, பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பி.
ஏ. ( சிறப்பு ) பட்டத்தினை வெளிவாரியாக கற்றுப்பெற்றுக்கொண்டு ஆசிரியையாக வவுனியா, நீர்கொழும்பு பிரதேசங்களில்
பணியாற்றினார்.
இவருடைய தம்பி விக்னேஸ்வரன்,
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கற்றவர். கவிஞர். கவியரசு கண்ணதாசனின் குடும்பத்தினருடன்
நெருங்கிய நட்புறவுகொண்டவர்.
தென்றல்விடு தூது ( கவிதை ) , பலரது பார்வையில் கண்ணதாசன் ( தொகுப்பு ) ஆகிய நூல்களையும் எழுதியிருப்பதுடன், காவியன் முத்துதாசன் என்ற புனைபெயரில் பாடல்களும் புனைந்திருப்பவர். அவை மனமொட்டுக்கள் என்ற பெயரில் இறுவட்டாகவும் வெளிவந்துள்ளது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திப்பு உட்பட பல பாடகர்கள் இதில் பாடியிருக்கிறார்கள்.
திரைப்பட இயக்குநர் கலைவாணன்
கண்ணதாசன் இயக்கிய சில திரைப்படங்களில் நடித்திருப்பதுடன், அவற்றில் உதவி இயக்குநராகவும்
பணியாற்றியவர்.
மாலதியின் மூத்த அக்கா
பத்மினியும் கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர். இவர் எழுதிய உணவு சம்பந்தமான ஒரு நூலை கண்ணதாசன்
பதிப்பகம் முன்னர் வெளியிட்டிருக்கிறது.
தாயார் நீர்கொழும்பிலும்,
தந்தையார் பிலிப்பைன்ஸிலும், அக்கா பத்மினி சிங்கப்பூரிலும் மறைந்துவிட்டார்கள்.
மற்றும் ஒரு அக்கா நந்தினியும்
ஆசிரியராக பணியாற்றியவர். இவர் மூன்று பிள்ளைகளின் தாய். எதிர்பாராதவகையில் 1987 ஆம் ஆண்டு வடமராட்சியில் நடந்த ஒபரேஷன் லிபரேஷன் தாக்குதலின் போது விமானக்குண்டுவீச்சில்
சிக்கி கொல்லப்பட்டவர். அவரது மூன்று பெண்
பிள்ளைகளும் தற்போது திருமணமாகி பிள்ளைகளுக்கும்
தாய்மார் ஆகிவிட்டனர்.
மாலதியின் தங்கை சூரியகுமாரி
யாழ்.பல்கலைக்கழக பட்டதாரியாவார். இவர் சிறிது
காலம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், வீரகேசரி நாளிதழில் உதவி
ஆசிரியராகவும் மித்திரன் வார இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இலக்கிய விமர்சனங்களும் எழுதுபவர்.
நினைவில் நின்றவை – சிறுகதை - கே.எஸ்.சுதாகர் சோஷல்
மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை.
கொழும்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை
உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்வதற்குச்
சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி,
வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி,
போரினால் சிதிலமடைந்திருந்த தனது வீட்டைத் திருத்தி அங்கேயே தங்கிக் கொண்டாள். தனது
அந்திமகாலம் அங்கேயே கழிய வேண்டும் என்பது அவள் விருப்பம். பொழுதுபோக்குக்காக சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பாள்.
ஒருநாள் மதியம், “எயிற்றி ரூ பட்ச் கெற்றுகெதர் வைக்கப் போகின்றோம்” என்று சொல்லியபடி
நந்தனும் முரளியும் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவளும் நந்தனும் எல்லாப்
பிரச்சினைக்குள்ளும் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். முரளி கனடாவிலிருந்து ஒன்றுகூடலை
ஒழுங்கு செய்யவென வந்திருந்தான்.
“இது ஒரு காலங்கடந்த ஒன்றுகூடல் எண்டு நான் நினைக்கிறன். இருபது இருபத்தைஞ்சு
வருஷத்துக்கு முந்திச் செய்திருக்க வேணும் முரளி…”
நாற்பது வருடங்கள் கழித்து ஒரு ஒன்றுகூடல் தேவையா என்பது மஞ்சுவின் மனதில் பெருங்
கேள்வியாக எழுந்தது. முரளி தலைக்குள் கையை வைத்துக் கோதினான்.
“செய்யக்கூடிய நிலையிலையா அப்ப நாடு இருந்தது. யுத்தம் முடிஞ்ச கையோடை செய்திருக்க
வேணும். எங்கை… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சோலியள். ஒவ்வொரு நாட்டிலையும் போய் ஒளிஞ்சிருக்கிற
ஆக்களைத் தேடிப்பிடிச்சு ஒண்டாக் கொண்டுவாறதெண்டா சும்மா லேசுப்பட்ட காரியமா?” என்றான்
நந்தன்.
“ஆர் ஆர் வருகினம்? வாற ஆக்களின்ரை லிஸ்ற் இருக்கோ?”
பொக்கற்றுக்குள்ளிருந்து கசங்கிய கடதாசி ஒன்றை எடுத்து மஞ்சுவிடம் நீட்டினான்
நந்தன்.
“இதை நீங்களே வைச்சிருங்கோ. இது ஒரு முழுமையான லிஸ்ற் இல்லை. இப்பத்தான் ஒவ்வொருத்தராச்
சேர்த்துக் கொண்டு வாறம். முதலிலை சயன்ஸ், மற்ஸ் மாத்திரம் செய்வோம் எண்டு யோசிச்சம்.
பிறகு ஆற்ஸ், கொமேர்ஸ் எல்லாரையும் சேர்ப்போமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.”
“ஒன்றுகூடலுக்கு வாறதுக்கு எனக்குப் பெரிசா ஆர்வம் இல்லை.” என்றாள் மஞ்சு.






.png)
.jpg)




.jpg)
.png)
.png)



.jpg)





