எம் ஜி ஆர், சிவாஜி இவர்கள் இருவருடனும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி ஒரு சில கலர் படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அவ்வாறு அவர் நடித்த வண்ணப் படங்களில் ஒன்று தான் பறக்கும் பாவை. படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த கதாநாயகியாக அவர் நடித்திருந்தார். படத்தின் ஹீரோ எம் ஜி ஆர் என்ற போதும் படத்தில் சரோஜாதேவியின் body guard ஆகத்தான் அவர் வருகிறார். காரணம் படத்தின் கதை அவ்வாறுதான் அமைந்திருந்தது.
ராமண்ணா தங்களின் முதல் கலர் தயாரிப்பாக இப் படத்தை பிரம்மாண்டமாக எடுத்திருந்தார். அந்த பிரம்மாண்டத்துக்கு மேலும் மெருகூட்ட ஜெமினி சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியின் ஆதரவோடு சர்க்கஸ் காட்சிகளையும் படத்தின் கதையோடும், காட்சிகளோடும் இணைத்திருந்தார்கள். இதற்கென்று சென்னையில் ஒரு பெரிய மைதானத்தை வாடகைக்கு எடுத்து நாளொன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் வாடகையில் , சாப்பாட்டுக்கு தினசரி பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
இதனால் படத்தில் பல காட்சிகளில் சர்க்கஸ் இடம் பெற்றன. படத்தின் ஹீரோயின் பறக்கும் பாவையாக அந்தரத்தில் பறந்து சர்க்கஸ் வித்தைகள் புரிகிறாள். கதாநாயகனும் அவளுக்கு ஈடு கொடுக்கிறான். படத்தில் சர்க்கஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருந்த போதும் சஸ்பென்ஸ் கதை ஒன்றும் அதனுள் ஊடுருவி இருந்தது.
தந்தையை பறி கொடுத்து, சித்தியின் பிடியில் இருந்து வீட்டை விட்டு தப்பி ஓடும் கோடீஸ்வரி கலா தன்னுடைய அக்கா சரசுவிடம் அடைக்கலம் ஆகிறாள். சரசுவின் கணவன் கபாலியோ மோசமானவன். ஆனால் சர்க்கஸ்காரன். கலாவை மணந்து சொத்துகளை அடைய திட்டமிடும் அவனுக்கு மற்றுமொரு சர்க்கஸ்கரனான விஜயன் துணை சேருகிறான். இவர்களின் சதிகளுக்கு மத்தியில் மொட்டைத் தலையுடன் கையில் கர்சீப்புடன் ஒருவன் கலாவை கொலை செய்ய எத்தனித்த வண்ணம் தொடர்கிறான் .
இவர்களுக்கு இடையில் கலாவின் சித்தி தன்னுடைய தம்பி டாக்டர்
ரெங்கசாமிக்கு கலாவை திருமணம் செய்து கொடுக்க முனைகிறாள். கலாவின் திரண்ட சொத்துக்களை உரிய நேரத்தில் தான் அவளிடம் ஒப்படைப்பேன் என்று வக்கீல் பாலசுப்ரமணியம் சந்தேகத்துக்குரிய விதத்தில் செயல்படுகிறார். இவர்களுக்கு மத்தியில் யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்று கலாவின் மனம் பதை பதைக்கிறது. ஆனாலும் பேதை அவள் துயர் துடைக்க அவளை நிழல் போல் தொடருகிறான் ஜீவா. அவளின் காப்பானாக திகழ்கிறான் . கலாவின் ஜீவனை காக்கும் முயற்சியில் ஜீவாவால் வெற்றி பெற முடிந்ததா என்பதே படத்தின் மீதி கதை.

1966ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் இரண்டு கலர் படங்கள் வெளிவந்தன. ஒன்று அன்பே வா, மற்றையது பறக்கும் பாவை. அன்பே வா படத்தை விட இதில் எம் ஜிஆர், சரோஜாதேவி இருவரும் அழகாகவும், இளமையாகவும் காட்சியளித்தார்கள். அதிலும் வித விதமான ஆடை அணிந்து, வண்ண மயமாக படம் முழுவதும் தோன்றினார்கள். அது மற்றுமின்றி இதில் சரோஜாதேவி சற்று செக்ஸியாக காட்சியளித்தார். குளியலறை பாடல், ஆடை மாற்றும் போது பாடல், பெரிய கூடைக்குள் பாடல், ஆண் போல் வேடமிட்டு, பாண்ட் , சட்டை அணிந்து பாடல், பீட்டில் ஆடையணிந்து மேற்கத்திலேயே நடனப் பாடல் என்று பல விதங்களில் சரோஜாதேவியை படத்தில் காட்டி ரசிகர்களை திக்கு முக்காடச் செய்திருந்தார் ராமண்ணா.
சரோஜாதேவி அப்படி எம் ஜி ஆர் மட்டும் என்னவாம். வித விதமாக
ஆடை அணிந்து ஆடிப் பாடி , சண்டை போட்டு , சர்க்கஸ் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்தி விட்டார். அதிலும் உன்னைத்தானே பாடல் காட்சியில் திறந்த மார்போடு அவர் நடித்திருந்தது அபூர்வம். இவர்கள் இப்படி என்றால் கே ஏ தங்கவேலு, ஜே பி சந்திரபாபு, மனோரமா, மாதவி, சதன் என்று ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள். படத்தில் இரண்டாவது நாயகியாக , நர்ஸாக காஞ்சனா நடித்தார். முத்தமோ மோகமோ பாடலில் அழகுப் பாவையாக காட்சியளித்தார் அவர் . இவர்களுடன் ராஜசுலோஷனா, வி . நாகையா, எஸ் . டி . சுப்பலஷ்மி , ஆசாத் பயில்வான் , ஜி. சகுந்தலா ஆகியோரும் நடித்தனர்.

படத்தில் எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன், ஆர் எஸ் மனோகர், ஓ ஏ கே தேவர் , எஸ் வி ராமதாஸ் , என்று ஒரு வில்லன் டீமே இறங்கியிருந்தது. ஆனாலும் அவர்களை எல்லாம் தள்ளி விட்டு புத்தூர் நடராஜன் முன் நிற்கிறார். எம் ஜி ஆரின் படங்களில் தொடர்ந்து சில காட்சிகளில் நடிக்கும் இவர் இதில் முக்கிய வில்லனாக வருகிறார். பருத்த உருவத்துடன் , மொட்டைத் தலையுடன் இவர் எம் ஜி ஆருடன் , போடும் இரண்டு சண்டைக் காட்சிகளும் சூப்பரோ சூப்பர். ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தருக்கு சபாஷ்.
படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஹீராலால். மேற்கத்திய பாணியில் அவர் அமைத்த நடனங்கள் ரசிக்கும் படி இருந்தன. எம் எஸ் மணி படத் தொகுப்பை நேர்த்தியாக செய்திருந்தார். அமைத்த அரங்க அமைப்பு ஜோர்.
படத்தில் பாடல்கள் ஏழு, எல்லாமே சுவீட் . கல்யாண நாள் பார்க்க
சொல்லலாமா, நிலவென்னும் ஆடை கொண்டாளோ , சுகம் எதிலே இதயத்திலா , பட்டுப் பாவாடை எங்கே, உன்னைத் தானே ஏய் உன்னைத்தானே , யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம் , முத்தமோ மோகமோ என்று கண்ணதாசனின் வரிகளுக்கு , விஸ்வநாதனின் இசை ஸ்வீட் சிக்ஸ்டியாக , அறுபது ஆண்டுகள் கடந்தும் இனிமை சேர்க்கிறது.

சக்தி கிருஷ்ணசாமி படத்துக்கு கதை வசனங்களை எழுதினார். ஒளிப்பதிவு எம் .ஏ . ரஹ்மான். குளிர்ச்சியான படப்பிடிப்பு. ராமண்ணா ஜனரஞ்சகமான விதத்தில் படத்தை இயக்கி இருந்தார்.
மாடி வீட்டு ஏழை படத் தயாரிப்பின் போது ஏற்பட்ட மோதலினால் திரையுலகில் இருந்து ஒதுக்கப் பட்டிருந்த சந்திரபாபு இப் படத்தில் எம் ஜி ஆரின் சிபாரிசினால் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் சுகம் எதிலே இதயத்திலே பாடலில் அவருக்காக கே .ஜே . ஜேசுதாஸ் குரல் கொடுத்தார்.
கூண்டுக் கிளி தொடங்கி எம் ஜி ஆர் , சிவாஜி நடிப்பில் பல படங்களை எடுத்த ராமண்ணாவின் ஆர். ஆர். பிக்சர்ஸ் தயாரித்த முதல் கலர் படம் இதுவாகும். கடைசிப் படமும் இதுதான். அது மட்டுமன்றி இப் படத்துடன் ஆர் . ஆர். பிக்சர்ஸ் மூடு விழா கண்டது. ராமண்ணா இயக்கத்தில் இதன் பின் எம் ஜி ஆர் நடிப்பில் படம் ஏதும் வெளி வரவில்லை . இதில் நடிக்க எம் ஜி ஆருக்கு ஏழு இலட்சம் ரூபாய் கொடுக்கப் பட்டது என்பது கொசுறு செய்தி!

.png)
No comments:
Post a Comment