எண்ணங்களே மனிதனின் உயிர் மூச்சாகும். வெறுப்பு, பொறாமை, கோபம், அகம்பாவம் போன்ற தீய எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்வதன் மூலம் மனிதன் தன் வீழ்ச்சியைத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான்.
மனிதன் தனது சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் அந்த எண்ணங்கள் பிறருக்கு ஏற்படுத்தும் தீங்கு, பத்து மடங்கு வலிமையுடன் திரும்பி அவனையே தாக்கும். பிறரை திட்டுவது, குறை கூறுவது, துரத்துவது, அவதூறு பேசுவது போன்ற செயல்கள், உண்மையில் இறைவனைத் திட்டுவது, குறை கூறுவது, அவதூறு பேசுவது போன்றதே ஆகும்.
மற்றவர்களுள் தெய்வீகத்தின் இருப்பை அறியாத அறியாமையால் மனிதன் இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுகிறான். பட்டையை எடுத்தவன் அதனால் அழிவான்; மற்றவரை காயப்படுத்துகிறவன் தானும் காயப்படுவான்; பிறரை இகழுகிறவன் தானும் இகழப்படுவான். எப்படிப்பட்ட எண்ணம் இருக்கிறதோ அப்படியே அதன் விளைவும் இருக்கும்; எப்படிப்பட்ட உணர்வு இருக்கிறதோ அப்படியே அதன் பலனும் இருக்கும்.
மனத்தின் வலிமையையும் சக்தியையும் அறியாமல், நாம் அதன் முக்கியத்துவத்தை மிகக் குறைவாக மதிக்கிறோம். நம் முழு வாழ்க்கையும் மனத்தின் மீது தான் நிலைத்து நிற்கிறது. ஆகவே, மனத்தின் சக்தியைப் புரிந்து கொள்ள நாம் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment