நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலா இன்று உனக்கு என்ன வந்தது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் சுடுகின்றது
நிலா நான் தவறேதும் செய்தேனா?
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
நிலா என் காதலை நீ ஏற்றாய்
நிலவே நீ சாட்சி மனநிம்மதி தேடும்
உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி
நிலா நான் பாடுகிறேன் நீயும் பாடு
பாடு நிலாவே தேன்கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
நிலா நீ பேசமாட்டாயா நீ பேசாவிட்டால்
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
நிலா என்மேல் கோபம் கொள்ளாதே
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா கொஞ்சம் நடக்கலாம் வா
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா நீ நடந்துவர மாட்டாயா
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
நிலா நீ இரண்டுவயது குழந்தையாயிருக்க
நிலவைக் காட்டி அத்தை நிலா நிலா ஓடிவா
பாடினாலும் நிற்காது அழுது அடம் பிடிப்பாய்
நிலா எனக்கோ அப்போது ஏழுவயதிருக்கும்
குரங்குவித்தை காட்டி சிரிக்க வைப்பேனாம்
நிலா இப்போதும் குரங்குவித்தை காட்டவா
நிலா சிரிக்கிறாயா நிலா நீயா சிரிக்கிறாய்
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதைபடித்தாய்
நிலா ஏன் அழுதுகொண்டே சிரிக்கின்றாய்
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
சிந்திய கண்ணீர் மாறியதாலே சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்!
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment