சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பஸ்ஸில் இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம் . இந்த தூரத்தை கடப்பதற்குள் பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் வாழ்வில் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு முன் படமாக்கி இருந்தார்கள். அந்த படத்தின் பேர் தான் மெட்றாஸ் டு பாண்டிச்சேரி.
இன்றைய சென்னை அன்றைய மெட்றாஸிலிருந்து புறப்படும் பஸ் சீரான பயணத்தை மேற் கொள்ளவில்லை . பல வித தங்கு தடைகளை தாண்டியே அந்த பஸ்ஸின் பயணம் தொடர்கிறது. இப் பயணத்தில் நகைச்சுவை, திகில், வீரம், ஆடல், பாடல், என்று எல்லாம் இடம் பெறுகிறது.
குமரிப் பெண்ணான மாலா தன் அழகைப் பற்றியும், இளமையைப்
பற்றியும் பெருமை கொண்டவள். அவளின் பலவீனத்தை பயன் படுத்தி பணம் பறிக்க சுதாகர் என்பவன் திட்டம் போடுகிறான். மாலாவை பெரிய சினிமா ஸ்டாராக்கி விடுவதாக அவன் சொல்வதை மாலா நம்பி விடுகிறாள். ஆனால் ரவி என்ற இளைஞன் சுதாகர் மோசமானவன் என்று எச்சரிக்கிறான். ஆனாலும் சுதாகரின் வலையில் விழும் மாலா அவனோடு செயல்பட விரும்புகிறாள். பணத்துக்காக எதையும் செய்யத் துணியும் சுதாகர் தன் கூட இருந்தவனையே கொலை செய்து விடுகிறான்.

கொலையை பார்த்து விடும் மாலா அவனிடம் இருந்து தப்ப மெட்ராஸில் இருந்து பாண்டிச்சேரி போகும் பஸ்ஸில் ஏறி விடுகிறாள். அவளை பாதுகாக்கும் பொருட்டு ரவியும் அதே பஸ்ஸில் ஏற , கொலைகாரனின் கையாளும் அதே பஸ்ஸில் நுழைந்து விடுகிறான் . பஸ் பல பயணிகளுடன் ஒவ்வொரு விவகாரங்களுடன் இவர்களை சுமந்து கொண்டு பயணிக்கிறது.
இந்த பஸ் பயணத்தில் கண்டக்டராக வருபவர் நாகேஷ். டிரைவராக வருபவர் ஏ. கருணாநிதி. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதட்டியும், மிரட்டியும் , இசைந்து, பிணைந்து ரசிகர்கர்களை கவருகிறார்கள் . சில நேரங்களில் இவர்களின் அட்டகாசம் எல்லை மீறுகிறது. இவர்களுடன் மனோரமா, எ. வீரப்பன், அங்கமுத்து, பகோடா காதர், என்று பலர் பஸ் பயணத்தில் இடம் பெறுகிரார்கள். இப் படத்தில் புது நடிகரான காதர் அடிக்கடி அம்மா பகோடா என்று சொல்லி சொல்லி அதில் இருந்து அவருக்கு பகோடா காதர் என்ற பெயர் நிலைத்தது. ஓ .ஏ .கே .தேவர் கூட உணவகத்தின் ஓனராக வந்து காமெடி செய்கிறார். இவர்களுடன் வி .கே . ராமசாமி, டைப்பிஸ்ட் கோபு, சி டி ராஜகாந்தம், வி .எஸ் .ராகவன் , பி கே சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.
அறிமுகமான வேகத்திலேயே இளம் ரசிகர்களை தனது ஸ்டைல்
நடிப்பில் கவர்ந்த ரவிச்சந்திரன் இதில் அதே ஸ்டைல் நடிப்பை தொடர்கிறார். கதாநாயகி கல்பனா அலட்சியம், பயம், என்று மாறி மாறி முகபாவம் காட்டி நடிக்கிறார். கிளப் இசை நிகழ்வில் ரவியும், கல்பனாவும் மாறி மாறி போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த இசையை இசைக்கும் படி கோருவதும் முக பாவத்தினால் ஒருவரை ஒருவர் நக்கல் செய்வதையும் ரசிக்கலாம்.

படத்தில் வில்லனாக நடித்தவர் கள்ளபார்ட் நடராஜன். பல படங்களில் பாடல் காட்சிகளில் ஆடி பாடி ரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர் சில படங்களில் வில்லனாகவும் மிரட்டினார். இதிலும் அவரின் நடிப்பு எடுபட்டது. மற்றுமொரு வில்லன் நம்பிராஜன். பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு இயக்கம் படங்களில் மட்டும் இவரை பார்க்கலாம் . அந்த வகையில் இப் படத்திலும் நடித்தார்.
படத்துக்கு மியூசிக் போட்டவர் டி . கே. ராமமூர்த்தி. விஸ்வநாதனை பிரிந்த பிறகு அவருக்கு கிடைத்த உடனடி வாய்ப்புகளில் இப் படமும் ஒன்று. எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோன்றுமோ பாடல் டி எம் எஸ் , சுசிலா குரலில் இனிமையாக இசைத்தது.பயணம் எங்கே, மலரை போன்ற பருவமே பாடல்களும் நைஸ்.
படத்தின் கதை வசனத்தை உசிலை சோமநாதன் எழுதினார். பல இடங்களில் அவரின் வசனங்கள் குபீர் சிரிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் எடிட்டர் ஏ . பால்துரைசிங்கம் நல்ல எடிட்டிங். பீம்சிங்கின் படங்களை தொடர்ந்து ஒளிப்பதிவு செய்த ஜி . விட்டல் ராவ் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டார்.
திருமலை , மகாலிங்கம் இருவரும் சேர்ந்து இந்த சஸ்பென்ஸ் , காமெடி படத்தை டைரக்ட் செய்தார்கள். இவர்களில் திருமலை
ஆரம்பத்தில் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியவர் . டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு இருவருள் கிருஷ்ணனின் தம்பி. மகாலிங்கம் ஆரம்ப காலத்தில் அண்ணா, கருணாநிதியுடன் மேடை நாடகங்களில் நடித்தவர். இருவரும் கிருஷ்ணன் பஞ்சு , பீம்சிங்கிடம் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு பிறகு இயக்குனரானார்கள். இரண்டரை மணி நேர பயணத்தில் இத்தனை தடைகளா என்ற லாஜிக்கை மறைத்து படத்தை நகர்த்தி இருந்ததை பாராட்டலாம்.

1966 ல் வெளி வந்த இப் படம் 1972ல் ஹிந்தியில் பம்பாய் டு கோவா என்ற பெயரில் கலரில் பிரபல ஹிந்தி காமெடி நடிகர் மெஹ்மூத்தினால் தயாரிக்கப் பட்டது. படத்தின் நாயகன் வேடம் மெஹ்மூதினால் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்டது. ஆனால் ராஜிவ் அதனை மறுத்து விடவே அமித்தாப் பச்சன் ஹீரோவாக நடித்திருந்தார். நாகேஷின் வேடத்தில் மெஹ்மூத் நடித்தார். தமிழில் செய்த வேடத்தை ஹிந்தியிலும் செய்தார் பகோடா காதர். பகோடாவின் பெருமை வட இந்திய வரை பரவியுள்ளது!
பீம்சிங்கின் உதவி இயக்குனரான எஸ். ராமநாதன் படத்தை இயக்கி வெற்றிப் படமாக்கினார். புது நடிகரான அமிதாப் பச்சனுக்கு இப் படம் வர்த்தக ரீதியில் ஒரு திருப்பமாக அமைந்தது.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment