1966 ம் வருடம் எம் ஜி ஆரின் திரைப் பயணத்தில் ஒரு பொன்
ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டு வழமைக்கு மாறாக அவர் நடித்த ஒன்பது படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வந்து அவரின் ரசிகர்களை திக்கு முக்காட செய்தன. எம் ஜி ஆரின் இந்த வேகத்தை உடனடியாக அறுவடை செய்தவர் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பா தேவர்தான். ஒரே ஆண்டில் இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டு சாதனை புரிந்தார் தேவர். வருட தொடக்கத்தில் முகராசி வெளி வந்தது. அதில் இருந்து ஏழு மாதங்களில் தனிப்பிறவி வெளியானது. முருக பக்தன் என்ற போதும் அவரின் செயல்கள் எல்லாம் அசுர சாதனைதான்!
வேக வேகமாக படத்தை தயாரித்த போதும் விவேகமாக சில
காரியங்களை செய்தார் தேவர். அவற்றுள் குறிப்பிட வேண்டியது எம் ஜி ஆரை முருகப் பெருமானாக தோன்றச் செய்ததாகும். ஆரம்ப காலத்தில் புராண படங்களில், கடவுள் தோற்றங்களில் எம் ஜி ஆர் நடித்திருந்த போதும் நட்சத்திர நடிகரான பின் , தி மு க வில் தன்னை இணைத்த பிறகு பக்திப் படங்கள் , கடவுள் வேடம் தரிப்பதை அவர் தவிர்த்தே வந்தார். ஆனாலும் அவரிடம் குடியிருக்கும் இறை பக்தியை நன்கு உணர்ந்திருந்த தேவர் தான் தயாரிக்கும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் முருகனாக தோன்றச் செய்து விட்டார்.

அதே போல் ஆதித்தன், ஆனந்தன் என்ற இரண்டு ஹீரோ நடிகர்களை இதில் எம் ஜி ஆருக்கு வில்லனாக்கி , வில்லன் நடிகர்களான அசோகன், நம்பியார் இருவரையும் நல்லவர்களாக்கி விட்டார். பின் நாட்களில் எம் ஜி ஆரின் கட்சி சார்பாக சட்டசபை உறுப்பினரான திருச்சி சௌந்தரராஜன் இப் படத்தில் தான் எம் ஜி ஆருடன் முதன் முறையாக நடித்தார். அவருக்கும் வில்லன் ரோல் தான்.
தன் தந்தை நடத்தும் தொழில் பட்டறையில் வேலை செய்யும்
முத்தையா தன்னுடைய தங்கை சிவகாமி மீது உயிரே வைத்துள்ளான். அவளை நல்லவன் ஒருவனிடம் ஒப்படைக்கும் வரை முகத்தில் உள்ள தாடியை எடுப்பதில்லை என்று சபதத்தையும் வரித்து கொண்ட அவனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரத்தின் மகள் ராதாவுடன் காதல் உருவாகிறது. ஆரம்பத்தில் தான் துப்பறியும் வழக்கில் சம்பந்தப் பட்ட குற்றவாளியாக முத்தையாவை சந்தேகிக்கும் சுந்தரம் பின்னர் அதில் மீண்டு காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அதே நேரத்தில் அவரின் தம்பி ரவிக்கும், சிவகாமிக்கு காதல் இருப்பதை அறிந்து திருமணத்தையும் நடத்தி வைக்கிறார். முத்தையாவும் முகத்தில் இருக்கும் தாடியை எடுக்கிறான். ஆனால் அதன் பின் நடக்கும் பல சம்பவங்கலால் நிலைமை தலை கீழாகி விடுகிறது!

இப்படி அமைந்த படத்தின் கதையை சினிமாவுக்குள் புதிதாக
நுழைந்திருந்த மதுரை திருமாறன் எழுதினார். ஒரு பக்கம் குடும்ப செண்டிமெண்ட் , மறு பக்கம் சஸ்பென்ஸ் என்று இரண்டையும் கலந்து கதை பண்ணியிருந்தார் அவர். அவரின் கதைக்கு ஆரூர்தாஸ் வசனங்களை எழுதினார். வசனங்கள் நல்ல விதமாக அமைந்தன.

படத்தில் இருபது நிமிடங்கள் கழித்தே எம் ஜி ஆர் வருகிறார். உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே என்று சம்மட்டியால் அடித்துக் கொண்டு அவர் பாடும் போதே படம் களை கட்டி விடுகிறது. அதன் பின் தேவர் அவரிடம் நன்றாகவே வேலை வாங்கி விடுகிறார். ஆடல், பாடல், சிருங்காரம், சண்டை, என்று படம் முழுதும் எம் ஜி ஆர் ராஜ்ஜியம் தான் .
அவருக்கு இணை ஜெயலலிதா. இளமை, கவர்ச்சி, வனப்பு என்று தேவர் பட ஹீரோயின் வழங்க வேண்டியதை வழங்குகிறார். மூன்று டூயட் பாடல் காட்சிகளிலும் ஜெயலலிதா இறுக்கமான பாண்ட் , சட்டை அணிந்து எம் ஜி ஆருடன் ஒரே மாதிரியான நடன அசைவுகளை தந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். தங்கை வேடத்தில் ரேவதி நடித்தார். நம்பியார், அசோகன் இருவரும் மாறுபட்ட வேடம் . ரசிக்கும் படி இருந்தது அவர்களின் நடிப்பு.
தேவர் படம் என்றால் நாகேஷ், மனோரமா , வி .கே . ராமசாமி இருப்பது வாடிக்கை. இதிலும் அவர்களின் வேடிக்கை தொடர்கிறது. சிரிப்பும் வருகிறது. இவர்களுடன் பி .கே .சரஸ்வதி, தேவர், ஜெமினி பாலு, ஜஸ்டின் , ஆகியோரும் நடித்தனர்.
அன்றைய சூழலில் ஆனந்தன், ஆதித்தன் இருவரும் எம் ஜி ஆரைப் போல் திறமையாக சண்டைக் காட்சிகளில் நடிக்கக் கூடியவர்கள் என்று கணிக்கப் பட்டிருந்தார்கள் . ஆனாலும் கதாநாயக வேடத்தில் தொடர்ந்து நடிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இப் படத்தில் அவர்களை வில்லனாக்கி விட்டார் தேவர்.
ஆனாலும் ஆதித்தன் பிற் காலத்தில் எம் ஜி ஆருக்கு எதிராக பேட்டி
கொடுத்தார். ஆரம்பத்தில் தனக்கு தேவர் தரவிருந்த வேடத்தில் எம் ஜி ஆரின் நிர்பந்தத்தின் படி அதனை திருச்சி சௌந்தர்ராஜனுக்கு கொடுத்து விட்டு தனக்கு முகம் முழுவது கருப்பாக காட்சியளிக்கும் வேடத்தை தந்து விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருந்தார். ஆனால் படத்தில் அவர் நடித்த அந்த சிங்காரம் வேடம் தான் ஹை லைட் . ஒரு சிலையின் கீழ் அமர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டுக் கொண்டு அவர் தெனாவெட்டாக பேசுவதும், சிரிப்பதும் அருமை. ! ஆனந்தனும் ஸ்டைலாக நடித்திருந்தார்.

தேவர் எடுக்கும் எல்லா எம் ஜி ஆர் படங்களுக்கும் இசையமைக்கும் கே .வி . மகாதேவன் இந்த படத்துக்கும் இசை வழங்கியிருந்தார். படத்தின் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார் . எழுச்சி பாடலாக உழைக்கும் கைகளே ரசிகர்களின் கரகோசத்தை பெற்றுக் கொண்டது. ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன், நேரம் நல்ல நேரம், கன்னத்தில் என்னடி காயம் பாடல்கள் இனிமையாக ஒலித்தன. எதிர் பாராமல் நடந்ததடி பாடலும் அதற்கு எம் ஜி ஆர் முருகன் வேடத்தில் தோன்றும் காட்சியும் ரசிகர்களுக்கு விருந்து.
படத்தை என் .எஸ் .வர்மா ஒளிப்பதிவு செய்தார். இறுதி சண்டை காட்சியில் எம் ஜி ஆரும் ஆனந்தனும் மோதுவது விறுவிறுப்பென்றாலும் இடையிடையே நாகேஷின் சண்டை காட்சியை காட்டி திருஷ்டி பரிகாரம் செய்து விட்டார்கள். ஆனாலும் தேவரின் தம்பி எம் ஏ திருமுகம் வேகமாக படத்தை நகர்த்தி இருந்தார் . எம் ஜி ஆரும் ரசிகர்களுக்கு தேவையான விததில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து வைத்திருந்த எம் ஜி ஆர் தனிப்பிறவி தானே!
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
No comments:
Post a Comment